(Reading time: 7 - 14 minutes)

காலம் மீண்டும் அதனுடைய கோலத்தினை தொடர ஆரம்பித்த வேளை,

யோசனைகளின் பின் இருந்த சரயூவை நிகழ் உலகத்திற்கு அழைத்து வந்தது அவளின் செல்போன் சிணுங்கல்…

யார்… என்று திரையை பார்த்தவளுக்கு புன்னகை உதிக்க,

“ஹேய்… சொல்லு லாவண்யா… எப்படி இருக்குற?...” என பேசினாள் சரயூ…

“நான் நல்லா இருக்குறேன் சரயூ… நீ எப்படி இருக்குற?... உன் குரலே சரி இல்லையே…”

“அது ஒன்னும் இல்ல… லைட்டா ஜுரம்… அவ்வளவுதான்…”

“ஜுரமா?... இது உன் ஹஸ்பெண்டுக்கு தெரியுமா?...”

“தெரியும் லாவண்யா… காலையிலேயே திட்டி தீர்த்துட்டு தான் வேலைக்கு போயிருக்குறார்…”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ராசுவின் "பேசும் தெய்வம்" - அன்பென்றாலே அம்மா...

படிக்க தவறாதீர்கள்... 

“அவர் மாறவே இல்லல்ல சரயூ…”

“அவர் மாறணும்னு நினைச்சாலும், மத்தவங்க விடணுமே…” என்றாள் சரயூ மெல்ல…

“சரி விடு… அதையே நினைச்சிட்டிருக்காத… அவர் மாறுவார்ன்னு நம்பு…”

“எத்தனை நாள் தான் நம்ப லாவண்யா?... எனக்கு வர வர அந்த நம்பிக்கையே இல்ல கொஞ்சம் கூட… பச்…”

“ஹேய்… எல்லாம் மாறும்… நீ எதும் நினைச்சிக்காத… சரியா?..”

“சரி லாவண்யா, உன் வீட்டுல எல்லாரும் நல்லா இருக்குறாங்களா?...”

“யெஸ்… நல்லா இருக்குறாங்க… நான் ஊருக்கு வருவேன் சீக்கிரம்… அப்போ உன்னை வந்து பார்க்குறேன் சரயூ…”

“வாவ்… சூப்பர்… எப்போ வர்ற லாவண்யா?... சீக்கிரம் வா… உன்னையும் நேருல பார்த்து ரொம்ப வருஷம் ஆச்சு…”

“கண்டிப்பா சரயூ… நான் வரேன்… மீட் பண்ணலாம்…”

“ஓகே… லாவண்யா…” என சொல்லிக்கூட முடிக்கவில்லை, சரயூவிற்கு இன்னொரு அழைப்பு வந்தது…

யாரென்று பார்த்தவள் அப்படியே தொய்ந்து போனாள்…

“ஹேய்… ஹலோ… இருக்குறீயா இல்லையா…” என லாவண்யா மறுபுறம் கத்திக்கொண்டிருக்க, இங்கே சரயூ அப்படியே இருந்தாள் செல்போனை பார்த்தபடி…

எந்த நேரத்தில் சுதாரித்தாளோ தெரியவில்லை, சட்டென்று, “லாவண்யா, நான் அப்புறம் பேசுறேன்… வச்சிடு…” என்றதும், அவளின் தோழிக்கு புரிந்து போனதோ என்னவோ தெரியவில்லை…

“சரி சரயூ… பார்த்துக்கோ… வச்சிடுறேன்… சாரி…” என்றபடி அவள் தனது அழைப்பினை துண்டிக்க, இங்கே சரயூ தனக்கு வந்து கொண்டிருந்த இன்னொரு அழைப்பினை ஏற்றாள்…

“அதெப்படி உன்னால மட்டும் இப்படி முடியுது?...” என திலீப் எடுத்த உடன் கேட்க அவள் எதுவும் சொல்லவில்லை…

“எங்கிட்ட பேச மட்டும் உனக்கு முடியாது… ஆனா நான் போன் பண்ணுற பாதி நேரம் நீ வேற யார்கிட்டயாவது தான் பேசிட்டிருப்ப… இல்ல…” என அவன் குத்திக்காட்ட அவள் அப்போதும் வாயைத் திறக்கவில்லை…

பின் எதாவது பதில் பேசுகிறேன் என்று அவள் பேசி வைத்தால் வேறு வினையே வேண்டாம்… ஆடியே விடுவான் அவன்…

“காலையில போன் பண்ணப்ப, உன் தம்பி போன் எடுத்து நீ தூங்குறன்னு சொன்னான்… இப்போ நீ என்னடான்னா, எனக்கு போன் பண்ணாம வேற யார்கிட்டயோ பேசிட்டிருக்குற?.. உனக்கு எவ்வளவு திமிர் இருந்தா நீ இப்படி செய்வ?... சொல்லு யார்கிட்ட பேசிட்டிருந்த நீ?...”

“லாவண்யா…” என அவளும் சொல்லிவிட,

“ஓ… உன் கூடப்படிச்சவளா?.... உடம்பு சரியில்லை… இன்னொரு நாள் பேசுறேன்னு சொல்லி கட் பண்ண வேண்டியது தான… அதை விட்டுட்டு உட்கார்ந்து அவகிட்ட பேசிட்டிருக்குற?...”

“இல்லங்க… வந்து…” என அவள் இழுத்துக்கொண்டிருந்த நேரம்,

“போன் எல்லாம் தூர வச்சிட்டு ஒழுங்கா தூங்கு… உடம்பு சரி ஆனதும் நீ பேசு அவகிட்ட... என்ன புரியுதா?... நான் சொன்னது?...”

“சரிங்க…”

“விசாலம் அக்கா வந்தாங்களா?.. அவங்க தான சமைக்கிறாங்க… நீ எதும் அங்க போகலையே…”

“இல்லங்க… அவங்க தான் சமைக்கிறாங்க…”

“சரி அப்போ ஒகே… நான் மதியம் வீட்டுக்கு வரும்போது உன் காய்ச்சல் போயிருக்கணும்… ரெஸ்ட் எடு ஒழுங்கா… நான் போனை வைக்கிறேன்…” என அவன் அவளது பதிலை கூட எதிர்பாக்காது கட் செய்ய, அவளோ அந்த போனையே பார்த்திருந்தாள்…

பின்னே அவன் வாங்கி கொடுத்த போன் அல்லவா அது… அதுவும் முதன் முதலாக அவனது பரிசு அல்லவா… அதை பார்க்கும்போது அன்று அவன் அதை அவளுக்கு கொடுத்த நினைவும் வராதா என்ன?...

தொடரும்

Episode # 04

Episode # 06

{kunena_discuss:995}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.