(Reading time: 9 - 17 minutes)

ரி அவன் தான் கேட்டான்னா, இவ ஒரு ஆமாவோ இல்லையோ சொல்லிட்டு போக வேண்டியது தானே………..அதை விட்டுட்டு தன்னோட நோட்டு பின் பக்கத்தை திருப்பி அதில ஒரு சில மாசத்துப் பேர், அதனோட நாள் எல்லாம் எழுதி எண்ண ஆரம்பிச்சிட்டா….

அப்படி எண்ணுறதுக்கு அவளோட 2 கைகளோட விரல்கள் கால்களோட விரல்கள் பத்தாததினால ஜீவனோட கை காலையும் கடன் வாங்கிட்டா………

“கே ஜி பிள்ள மாதிரி விரலை வச்சி எண்ணிட்டு இருக்க நீ டென்த்ல 100% எடுக்கப் போற??!!….. எல்லாம் என் நேரம் தான் என்று நினைச்சுட்டு இருக்க்ப்போவே அவள் ரூபனிடம் வந்தாள்.

“அத்தான்”

என்ன?”

உங்க விரல்லாம் கொஞ்சம் கடனா தர்றீங்களா? ப்ளீஸ். வேறென்ன செய்ய முடியும் இப்போ ஜூ மங்கியா நானும் (அவ்வ்…….மைண்ட் வாய்ஸ்)

இப்போ ஹாலிலிருந்து சிவாஜி கணேசன் அடுத்த பாடல் ஒலித்தது.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சித்ரா.வெ'யின் "கண்களின் பதில் என்ன? மௌனமா?" - அது பேசிடும் நாளும் வந்திடுமா..??

படிக்க தவறாதீர்கள்... 

“உன்னைச் சொல்லிக் குற்றமில்லை

என்னைச் சொல்லிக் குற்றமில்லை

காலம் செய்த கோலமடி

கடவுள் செய்த குற்றமடி

கடவுள் செய்த குற்றமடி”

இன்னொரு சிச்சுவேஷன் சாங்கா…..நொந்தபடி அவன்.

ஒருவழியாக அவளுடைய “கால்”குலேஷன் முடிந்திருக்க இருவரின் கை கால்களை விடுதலைச் செய்து விட்டு டெலிவிஷனில் தீர்ப்புச் சொல்லப் போகும் ஜட்ஜ் மாதிரி ஒரு லுக் விட்டுட்டு சொன்னாள்.

“இங்க பாரு ஜீவன் நான் உன்னை மரியாதையா அத்தான்னு கூப்பிடணும்னா நீ அட்லீஸ்ட் என்னை விட 1 வயசாவது கூட இருக்கணும் சரிதானே?”

இதைக் கேட்ட ஜீவன் என்னும் சயண்டிஸ்ட்

” அதான் சொல்றேன்ல அனி நான் உன்னை விட 6 மந்த்ஸ் பெரியவன், மேத்ஸ்ல எப்படி பாயிண்ட் பைவை, ரௌண்ட் பிகர் ஆக்கி நெக்ஸ்ட் டிஜிட்டுக்கு கொண்டு போறாங்க அந்த லாஜிக் படி 6 மந்த்ஸ் இஸ் ஈக்வல் டு 1 இயர். ஸோ நானும் உன்னை விட 1 இயர் பெரியவன்தான்”

“ம்ம்..நீ சொல்ற இந்த தியரி படிதான் நான் இவ்வளவு நேரம் கால்குலேட் செய்தேன்”

“ஐய்யோ அறிவாளிங்களா என்னால உங்க அறிவுக் கடல்ல மூழ்கி முத்தெடுக்க முடியலை விட்ருங்க” என்று நகரப் போன ரூபனை இருவரும் நகர விடவில்லை.

“அண்ணே ப்ராப்ளம் சால்வ் ஆகிறவரை எங்கேயும் போகாத” என்று அமர்த்தினான் அவன். போங்கடா டி பெரிய ரவுண்ட் டேபிள் கான்பிரன்ஸ்”.என்று நொந்தவாறு அமர்ந்தான்.

இங்கே பாரு டோட்டல் பார்த்தா நீ என்னை விட 5 மந்த்ஸ் 25 டேஸ் தான் பெரியவன். இந்த 5 டேஸ் மட்டும் குறைவா இருந்திருக்காட்டா நான் உன்னை அத்தான்னு கூப்பிட்டுருப்பேன்.ஆனா என்னச் செய்யிறது இப்போ ஒன்லி பிகாஸ் ஓஃப் திஸ் 5 டேஸ் நான் உன்னைய அத்தான்னு எல்லாம் கூப்பிட முடியாமப் போயிடுச்சி, வேணும்னா என்னால “டேய் ஜீவா””னு மட்டும் தான் கூப்பிட முடியும். ஐயாம் ஸாரி ஜீவா”

“போங்கடா நீங்களும் உங்க ஆராய்ச்சியும்” என்று வெறுத்து உட்கார்ந்திருந்தவன் கண்களில் அந்த ரெண்டும் மறுபடி சண்டைப் போடும் காட்சிப் பட இது நம்மால முடியாதுடா சாமி என்று ரூமை விட்டு வெளியேறினான்.

இப்போது பாடல் மாறியிருந்தது.

“ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ

ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ

இல்லை ஓர் பிள்ளை என்று ஏங்குவோர் பலரிருக்க

இங்கு வந்து ஏன் பிறந்தாய் செல்வ மகனே”

ஒரு வழியாக லீவுகள் முடிந்து காலேஜ் முதல் நாள் வந்தது. தவிர்க்கவே முடியாமல் ஹாஸ்டலில் முதல் நாள் ஒன்றும் தெரியாமல் மிரண்டு முழித்த தருணங்கள் எல்லாம் ஞாபகத்திற்கு வந்து சங்கடப் படுத்தின. ஏளனமான சில பார்வைகளும் கூட, தன்னையே அடக்கிக் கொண்டவனாக புறப்பட்டான் பிறகென்னச் செயவது? பிறர்முன் அவன் மனப் பயங்களைக் காட்டிக் கொண்டால் அது சிறுபிள்ளைத்தனமாக அல்லவா இருக்கும்.

உள்ளே நுழையும் போதே அவனுக்கு தூரத்தில் அனியும் கிறிஸ்ஸும் நிற்பது கண்ணில் பட்டது. இப்போ இவர்கள் இரண்டு பேரும் இங்கே என்னச் செய்கிறார்கள் என்று யோசித்தான்.ஏனென்றால், ஒரே நிர்வாகம் என்றாலும் பள்ளி, கல்லூரி இரண்டிற்கும் வெவ்வேறு இடத்தில் நுழைவு வாயிலும், கட்டிடமும் உண்டு. இவனது கல்லூரி நேரம் மதியம் என்றால், அனியின் பள்ளி நேரம் காலை. அவள் இன்னேரம் வீடு போய் சேர்ந்திருக்க வேண்டுமே? ஒரு வேளை கிறிஸ் அத்தான் அவளை அழைக்க வந்திருப்பான் போல.என்று எண்ணியவன் அவர்களை நெருங்கினான்.

“என்ன அத்தான் காத்துட்டு இருக்கீங்க?”

“நானில்லைப்பா இந்த மினியேச்சர் பாட்டிதான்”

“அண்ணா, நான் என்ன உனக்குப் பாட்டியா?” கால்களை கோபத்தில் தரையில் மிதித்தவள்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.