"என்ன விஜி... இந்த ஆஃபிஸை பார்த்துக்கிறது சஞ்சயும் நிக்கியும்... என்னப்பத்தி பெருசா பேசறீங்க..." என்று விஜியிடம் சொல்லிக் கொண்டிருக்கும் போது அங்கு வந்த நிகேதன்...
"விஜி இப்பத்தான் வர்றீங்களா... எந்த ஃபைல்ல ஸைன் பண்ணனுமோ அதை எடுத்து வைங்க... நான் சஞ்சயை பார்த்துட்டு வரேன்..." என்று கூறி அவளை அனுப்பி வைத்தான்... பின் நீரஜாவிடம் திரும்பி..
"என்ன நிரு நீ இன்னும் சஞ்சயை பார்க்கலையா..." என்றான்..
"பாஸ் அப்பாயின்மென்ட்டோட தான் பார்ப்பாராமே... அவரோட பி.ஏ தான் நிக்க வச்சுட்டா... என்ன நிக்கி இவ்வளவு அழகான பொண்ணு சஞ்சயோட பி.ஏ... ஆனா உனக்கு இன்னும் விஜி தான் பி.ஏ வா..." என்றுக் கேட்டாள்.
"ஏம்மா நான் நவிக்கூட சந்தோஷமா இருக்கறது பிடிக்கலையா...
...
This story is now available on Chillzee KiMo.
...
strong>Episode # 04
{kunena_discuss:998}