(Reading time: 22 - 43 minutes)

றுநாள் பொழுது வழக்கம் போல் இனிமையாய் விடிந்தது..குளித்துமுடித்து கீழே சென்றவள் தனக்கும் ராமிற்க்குமாய் காபியை வாங்கிக் கொண்டு தன்னறைக்கு வந்தாள்..ராம் இன்னும் உறங்கிக் கொண்டிருக்க தனக்கான காபியை பருகத் தொடங்கினாள்..தலையை பின்னி பூ வைத்து என நேரத்தை கடத்த ராம் இன்னும் எழுந்தபாடில்லை,பொறுமையிழந்தவள் அவன் அருகில் சென்று எழுப்பினாள்..

அவளையிழுத்து அமர வைத்தவன் அவள் மடியில் வாகாக படுத்துக் கொண்டான்..என்ன குட்டிமா எவ்வளவு நேரமா நீ எழுப்புவநு வெய்ட் பண்றது என்றான் அசால்ட்டாய்..

அடப்பாவி அப்போ இவ்ளோ நேரம் முழிச்சுட்டுதான் இருந்தீங்களா??

ம்ம்ம் ஆமா நான்தான் சொல்லிருக்கேன்ல நீ வந்து எழுப்பினாதான் எழுந்துப்பேன்னு..என்று அவளின் இடையை கட்டிக் கொண்டு குழந்தையாய் படுத்திருக்க..பெண்ணவள் நெஞ்சமோ ஆனந்த களிப்பில் நிறைந்தது..ஒரு வழியாக அவனை குளிக்க அனுப்பிவிட்டு அறையைவிட்டு வெளியே வந்தவளை நோக்கி நின்றனர் சாக்ட்சியும் பரணியும்..

மகி வெளியே எங்கேயாவது போய்ட்டு வரலாம் வரீயா என்றான் பரணி அவனது அழைப்பின் அர்த்தம் புரிந்தவள் போலாம்ணா அவரு குளிச்சுட்டு இருக்காரு ரெடி ஆனவுடனே கிளம்பலாம்...

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சித்ரா.வெ'யின் "கண்களின் பதில் என்ன? மௌனமா?" - அது பேசிடும் நாளும் வந்திடுமா..??

படிக்க தவறாதீர்கள்...

நால்வருமாக கிளம்பி பெசென்ட் நகர் அறுபடைவீடு முருகன் கோவிலுக்குச் சென்றனர்..முருகனை மனமாற வேண்டிக் கொண்டு பேசுவதற்கு ஏதுவாக ஓரிடத்தில் அமர்ந்தனர்..சாக்ட்சியே ஆரம்பித்தாள்..என்ன முடிவு பண்ணிருக்கீங்க பரணி..?

ராமை ஒரு பார்வை பார்த்தவன் சாக்ட்சி..நா என்ன வேலை பாக்குறேன்னு தெரியுமா??

இப்போ எதுக்கு சம்மந்தமில்லாம பேசுறீங்க??

இல்லை காரணமாதான் கேக்குறேன்..ராம் ஏன் உங்க வீட்டுக்கு வேலைக்கு வந்தான்னு தெரியுமா??

இதென்ன கேள்வி தாத்தாவ பாத்துக்கதான்..

இல்ல சாக்ட்சி அதுக்காக இல்ல உங்க வீட்டுலயிருக்குற ரெண்டு அக்யுஸ்ட்ஸ்அ அரெஸ்ட் பண்ண போலீஸ்க்கு ஹெல்ப் பண்றதுக்குதான்..

பரணி வாட் யு மீன்..

அனைத்தையும் கூற ஆரம்பித்தான் ராம் அந்த வீட்டினுள் நுழைந்தவரை அனைத்தையும்,கேட்டு கொண்டிருந்தவளின் கண்களில் நீர் அருவியாய்..மகி அவளை ஆதரவாக தாங்கிப் பிடிக்க அவள் தோளில் முகம் புதைத்து அழுதாள்..சிறிது நேரம் அங்கே மௌனம்..அதற்குள் தன்னை ஓரளவு சமாதானப் படுத்திக் கொண்டவள் பரணியை பார்த்து அதனாலதான் என்னை ஏத்துக்க தயங்கினீங்களா பரணி..நானும் அவங்களை மாறியே..

சாக்ட்சி என்ன பேசுற நீ குறுக்கிட்டான் ராம்..

தலை கவிழ்ந்து கண்களில் நீர் கோர்த்திருந்தது சாக்ட்சிக்கு..இதுக்கு மேல் இருப்பது சரியில்லை என்று ராமும் மகியும் எழுந்து செல்ல,ஆறுதலாய் அவள் கரம் பற்றினான் பரணி..சட்டென நிமிர்ந்தவள் கண்களை துடைத்து கைகளை எடுத்து கொண்டாள்..பரணி பேச தொடங்கினான்..

இதோ பாரு சாக்ட்சி நா நேத்து தயங்கினது உண்மைதான் அதுக்கு காரணம் கண்டிப்பா நீ சொல்றதில்ல..எனக்குள்ள சின்ன உறுத்தல் உன்ன ஏத்துகிட்டு உன் வீட்டு ஆட்களுக்கு எதிராவே வேலை பாத்தா நீ அதை எப்படி எடுத்துப்பநு தான்..தேவையில்லாம உன் மனசை கஷ்டப்படுத்த வேண்டாமேநு நெனைச்சேன்..மத்தபடி என்னை இத்தனை நாளா மனசுல நினைச்சுட்டு வாழ்ந்துட்டு இருக்குற ஒரு பொண்ணை இழக்க நா தயாராயில்லை..கண்டதும் காதல்னுலா சொல்ல மாட்டேன் ஆனா உன்னோட என் லைப் அமைஞ்சா நல்லாயிருக்கும்நு தோணுது..இனி முடிவெடுக்க வேண்டியது நீதான் ஆனா எந்த காரணத்துக்காகவும் என் வேலைய பாதில விடமாட்டேன் அத மட்டும் புரிஞ்சுக்கோ..சட்டென அவன் தோளில் சாய்ந்து கொண்டாள்..

தேங்க் யு பரணி என் லவ்வ ஏத்துகிட்டதுக்கு..எனக்கு என் தாத்தா மட்டும்தான் முக்கியம் அதுவும் போக அங்கிள் தப்பு பண்ணிருந்தா தண்டனை அனுபவிச்சுதானே ஆகனும் அதுக்கு நா கண்டிப்பா குறுக்க நிக்கமாட்டேன்..ஏன் தாத்தாவே இதெல்லாம் தெரிஞ்சா அவரை சும்மா விடமாட்டாரு..இனி என்னால முடிஞ்ச உதவியையும் கண்டிப்பா பண்ணுவேன்..

தேங்க்ஸ் சாக்ட்சி..என மென்மையாய் புன்னகைத்தான்..சரியாக ராமும் மகியுடன் வந்து சேர மனநிறைவோடு கோவிலைவிட்டு கிளம்பினர்..மதிய உணவிற்காக ஹோட்டல் செல்வதாக முடிவெடுத்து அந்த பெரிய ஹோட்டலில் காரை பார்க் செய்துவிட்டு உள்ளே சென்று வேண்டிய உணவை ஆர்டர் செய்துவிட்டு அமர்ந்தனர்..சாக்ட்சி தயங்கியவாறே ராமிடம் அப்போ அந்த பாயல் இப்போ உயிரோட இல்லையாண்ணா??

உயிரோடதான் இருக்காடா..

என்ன அண்ணா சொல்றீங்க அப்போ அவங்கள வச்சு கேஸை முடிக்க வேண்டியதுதான..

அவ இருக்குறது உங்கவீட்ல அதர்வாவோட கண்காணிப்புலடா…

வாட்?????

அங்கே பாயலை சற்றும் எதிர்பார்க்கவில்லை ராம்..அவளை கொன்றுவிட்டால் ஒரு வேளை டெட்பாடி போலீஸ் கையில் சிக்கினால் அவர்களின் பிசினஸிற்கு தேவையில்லாத குழப்பம் வரும் சோ ஏதோ ஒரு வேலை முடிக்குறதுக்காக வெய்ட் பண்றாங்க அது என்னனு கண்டுபிடிக்கனும் என்று எண்ணவோட்டம் அதுவாகவே முன்னேறிச் செல்ல அங்கிருந்தவனில் ஒருவன் கதவை நோக்கி வருவதை கண்டு வேகமாக பின்புறம் ஒளிந்து கொண்டான் ராம்..ஒரு வழியாக அங்கிருந்து கிளம்பி தன் அறையை வந்தடைந்தவன் பரணியிடம் அனைத்தையும் கூறினான்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.