(Reading time: 44 - 87 minutes)

“ஸ்ஸ்ஸ்ஸ் வலிக்கிது மிது..இரு இஷான், சம்யுக்தாக்கிட்ட சொல்லுறேன்”

“டேய் அப்படி ஏதும் பண்ணின்னா உன்னை கொன்னுடுவேன்”

“ஹா ஹா ரொம்ப பயம்தான்”

“பின்ன ரெண்டும் அப்பா அப்பான்னு உன் பின்னாடியே சுத்தினால் நான் என்ன பண்ணுவேன்” என்று மித்ரா பெருமையாய் குறைபடுவதை கண்டு சிரித்தான் ஷக்தி..உண்மைத்தான்! மித்ரா மீது அதீத அன்பு இருந்தாலும் அதை காட்டிக்கொள்ளாமல் ஷக்திக்கே ஆதரவாய் பேசுவதே இஷானுக்கும் சம்யுக்தாவிற்கும் வழக்கமாய் போனது.. மித்ராவின் சிரிப்பை ரசித்த ஷக்தி

“ உனக்கு பொறாமையே இல்லையாடீ?”என்றான்.

“ பொறாமையா எதுக்கு?”

“ பசங்க ரெண்டு பேரும் எனக்கே சப்போர்ட் பண்ணுறாங்களே” என்றான்.

“ ஹா ஹா அவங்க ரெண்டு பேரும் உன் பக்கம் பேசுறது உண்மைத்தான் .. ஆனா, அதுவும் என் பழக்கம் தானே?”

“ புரியல”

“ அட மக்கு மாமா! எனக்கு இந்த உலகத்துலேயே எது பெருசு? நீதான் நீ மட்டும்தான்..அதே மாதிரி என் பிள்ளைகளும் உனக்கு சப்போர்ட் பண்ணும்போது எனக்கது சந்தோஷம்தானே! நம்ம பசங்க என் வயித்தில் இருக்கும்போதே நான் ட்ரெய்னிங் கொடுத்துட்டேனே” என்று சிரித்தாள் மித்ரா. அவள் சிரிப்பில் நெகிழ்ந்து தன்னையே தொலைத்தவன் அதை மறைத்து,

“ஹ்ம்ம் இப்படி பேசித்தான் நீ சமாதானம் ஆகிக்கனும் அத்தை பொண்ணு” என்றான்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

மீரா ராமின் "மருவக் காதல் கொண்டேன்..." - காதல் கலந்த குடும்ப தொடர்

படிக்க தவறாதீர்கள்...

“அட போடா.. நம்ம பசங்க என்ன, இந்த உலகமே என் பக்கம் இல்லன்னாலும் எனக்கு கவலையே இல்லை..ஏன் தெரியுமா?”

“ உன் உலகமே நான் தான்.. நாந்தான் உன் கூடவே இருக்குறேன்..இதைத்தானே சொல்லுவ நீ”

“ வாவ் டா.நியாபகம் இருக்கா மாமா?”

“ எப்படி மறக்கும்?”

“அவ்ளோ ஃபீலிங்கா?”

“ச்ச ச்ச,அவ்வளோ மொக்கை மிது”

“மொக்கைன்னா ஏன்டா ரசிச்சி சிரிக்கிற?”

“ ஹான்..என் மூஞ்சியே இப்படித்தான் ..” என்று  அவன் கூற அவன் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டாள் மித்ரா. அவள் கொடுத்த முத்தத்தை இரட்டிப்பாய் ஷக்தி திருப்பி கொடுக்க, அதில் நெகிழ்ந்தபடி வானொலியை உயிர்ப்பித்தாள் மித்ரா.. நம்ம ஜூனியர்ஸ் அனைவரும் அன்றைய காலை நிகழ்ச்சியை அந்த பாடலுடன் நிறைவுபடுத்த, அந்த பாடலோடு இவர்களின் பயணமும் தொடரட்டும்.

என் மேல் விழுந்த மழைத் துளியே

இத்தனை நாளாய் எங்கிருந்தாய்

இன்று எழுதிய என் கவியே

இத்தனை நாளாய் எங்கிருந்தாய்” அந்த பாடலை கேட்டதுமே ஷக்தியின் மார்பில் நெகிழ்ந்து சாய்ந்து கொண்டாள்.

“மாமா”

“ம்ம்”

“எனக்கு இந்த பாட்டு ரொம்ப பிடிக்கும்”

“தெரியும்”

“இந்த பாட்டு கேட்டால் உன் ஞாபகம் வரும்”

“ஆஹான்..” என்றவன் சிரிக்க,

“ஹான் ஜீ”என்று சிரித்து அவன் நெற்றியோடு நெற்றி முட்டிகொண்டாள் சங்கமித்ரா..காலம் கரைந்தோடியும் அவர்களின் காதல் குறையாமல் இருக்க, அவனுக்குள் சங்கமித்தவளின் மனம் கவிபாடியாது.. அந்த கவியோடு நாமும் விடைப்பெருவோம்.

எங்கே அம்மா?”…

நமது மகனோ, மகளோ

இதை சொல்வதை விட,

அவர்களிடம், நீ இப்படி கேட்கும்போதுதான்

நான் வாழ்வில் பூரணத்துவம் பெருகிறேன்!

உன்னில் நான் நிறைந்திருப்பதை உணர்கிறேன்..!

ஏய்என்று நீ அதட்டும்போதெல்லாம்

கண்களில் மிரட்சியை தேக்கி வைத்து நடித்து

உள்ளத்தில் துள்ளி குதிக்கின்றேன்..

இவ்வுலகில் என்னைத்தவிர யாரை நீ

இப்படி உரிமையாய் அழைப்பாய் ?

பிறர் கண்களுக்கு அடிமைத்தனமாய் தெரியும் உன் அழைப்பு,

எனக்கு மட்டும் நிரந்தரமாய் ஆளுமையாய் தெரிவதை உணர்கிறேன்..!

இன்னைக்கும்  தோசைத்தானா ?” சலிப்புடன் நீ கேட்க

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.