(Reading time: 11 - 21 minutes)

ன் பொண்ணோட மனசை என்னால புரிஞ்சுக்க முடியும்..உங்க பையன் நேத்து பஸ் ஸ்டாப்ல என் பொண்ணு கூட பேச முயற்சி செய்தது என் காதுக்கு வந்ததுமே உங்க குடும்பத்தைப் பற்றி நான் விசாரிச்சுட்டேன்..அதுல எல்லாம் எந்த குறையும் இல்ல..என்னோட ஒரே தங்கை என் பொண்ணை தன்னோட மருமகளா ஆக்கிக்கனும்னு ரொம்ப விரும்பறா..இதெல்லாம் யோசிக்காம என்னால உடனடியா எதையும் சொல்ல முடியாது”என்று பிடிகொடுக்காமல் பேசினார்.

கமகமக்கும் நரசூஸ் காபியுடன் வந்த சாரதி அவர்களுக்கு கொடுத்துவிட்டு,அவந்திகாவுக்கு வேறு கொடுத்துவிட்டு வந்தார்.

‘நல்ல குடும்பம்’என்று நக்கலாகத்தான் யஸ்வந்த் எண்ணினான்.

தாமரையும் இதற்கு மேல் என்ன பேசுவது என்று தயங்கிவிட்டு,”அப்போ நாங்க கிளம்பறோம்..சீக்கிரம் உங்கா பதிலை சொல்லுங்க”என்று கிளம்ப ஆயத்தமானார்.

“உங்க பையன் போன் நம்பர் கொடுத்திட்டுப் போங்க”என்று குமாரிடம் சொல்ல..யஸ்வந்த் தன்னுடைய விசிடிங் கார்டை நீட்டவும்..அதை ஆச்சர்யமாக பார்த்தவர் உடனே தன்னுடைய மொபைலிலிருந்து அவனது போனிற்க்கு ரிங் விட்டார்..

அவந்திகாவின் முன் வேலையால்,அதுவும் நேரம்கேட்டு,”மாமா..உன் பொண்ணைக் கொடு”என்ற பாடலுடன் அலற..நேரடியாக பாண்டியன் யஸ்வந்த்தை முறைத்தார்..

குமாரும் தாமரையும் கஷ்டப்பட்டு சிரிப்பை அடக்க,யஸ்வந்த்’அவளது வேலை’என்று சொல்ல முடியாமல் தவித்து நிற்க..பாண்டியன்  அவர்களை,”உட்காருங்க..கொஞ்சம் பேசணும்”என்றார்.

“இவ்வளவு நேரப் பேச்சை விட,இந்த ஒரு டோன் அவர் மனசை மாத்திடுச்சா..இதை ஏன் முன்னாடியே பண்ணி தொலைக்கலை..”என்று தாமரை ரகசியமாய் மகனை அதட்டினார்.

“நான் பேசலாமா”என்று பாண்டியன் கேட்கவும் தான் தாமரை அமைதியானார்.

“எனக்கு இந்த ஜாதகம் பார்க்கற விஷயத்துல எல்லாம் நம்பிக்கை இல்ல..எனக்கு ரெண்டு கண்டிஷன் இருக்கு.ஒண்ணு .உங்க பையனோட புல் ஹெல்த் ரிப்போர்ட் எனக்கு வேணும்..நான் சொல்ற ஹாஸ்பிட்டல்ல வந்து செக்அப் செய்துக்கணும்..அதே மாதிரி என் பொண்ணோட ஹெல்த் ரிப்போர்ட் நீங்க வாங்கிக்கலாம்..கல்யாணம் ஆன பின்னாடி,என்ன நடந்தாலும் பொண்ணை தான் இந்த உலகம் குறை சொல்லும்..அதனால தான் இதை செய்யணும்னு சொல்றேன்”,

“அடுத்த கண்டிஷன் என்னன்னா,படிப்பு முடியறதுக்கு முன்னாடி கல்யாணம் பண்ணிக் கொடுக்கற ஐடியா எனக்கு இல்ல..ஒரு ஆறு மாசம் வேலைக்கு போகட்டும்.அதுக்கு அப்புறமா கல்யாண தேதியை முடிவு பண்ணிக்கலாம்”என்றார்.

குமாருக்கு பாண்டியனின் இந்த முன் எச்சரிக்கைப் பிடித்து தான் இருந்தது..அதனால்,”முதல் கண்டிஷனுக்கு நான் உத்திரவாதம் தர்றேன்..அடுத்த கண்டிஷனுக்கான முடிவை என்னோட மனைவி தான் சொல்லணும்”எனவும்..

‘இப்படியா மானத்தை வாங்குவீங்க’என்று கணவரை முறைத்துவிட்டு..”என் பையனுக்கு இன்னும் மூணு மாசத்தில கல்யாணம் பண்ணனும்னு இருக்கோம்.இப்போதைக்கு சிம்பிளா ஒரு கோவில்ல கல்யாணத்தை வைச்சுட்டு..ரெஜிஸ்டர் பண்ணிக்கலாம்..அதுக்கப்புறம் படிப்பு வேலைன்னு நீங்க சொல்ற காலம் வரைக்கும் உங்க வீட்டுலையே இருக்கட்டும்.எங்களுக்கு சம்மதம் தான்.அதுக்கு அப்புறம் கிரேண்டா ரிஷப்ஷன் வைச்சுக்கலாம்”,

“அப்படி இல்லாம எங்க கம்பெனிலையே பொறுப்பேத்துக்கற மாதிரி,ஒரு ஆறு மாசம் ட்ரைனிங் போனாலும் எங்களுக்கு ஓகே தான்.அவசரப்படறோம்னு தப்பா நினைக்க வேண்டாம்.ஒரே பையன்.காலாகாலத்தில் எல்லாம் நடக்கனும்னு ஆசைப்படறோம்.நீங்க இன்னும் தீர விசாரிச்சிட்டு அப்புறம் முடிவை சொன்னாப் போதும்..”என்று மனதில் உள்ளதை வெளிப்படையாகவே சொன்னார்.

“சரிங்க”என்றதும் வேறு எதையும்,இப்போது பேச முடியாது என்பதால் கிளம்பிவிட்டார்கள்.

அவர்களை வாசல்வரை வழியனுப்பிவிட்டு வந்த மாமனும்,மச்சானும் மல்லிகாவை எப்படி சமாளிப்பது என்று தான் யோசித்தார்கள்.

“குட்டிமா”என்று பாண்டியன் அழைக்கவும்..

தயங்கியவாறு,”சொல்லுங்கப்பா”என்று வந்து நின்றாள்.

“உனக்குப் பிடிச்சிருக்குன்னு என்னால,ஹாஸ்பிட்டல்லையே யூகிக்க முடிஞ்சது.நானா கேட்டு,உன் மனசுல அப்படி ஒரு எண்ணம் வந்துடக் கூடாதுன்னு தான் கேட்கலை.அதே நேரத்தில நீயா வந்து சொல்லணும்னு எதிர்பார்க்கலை”என்றதும்..

“சாரிப்பா”என்றவள் அவரது காலடியில் அமர்ந்து,அவரது காலுக்கு அழுத்தம் கொடுக்காமல்,மென்மையாக சாய்ந்துகொண்டாள்.

பெற்றவருக்கு மகளின் மனது நன்றாகப் புரிகிறது.

“நீ என்கிட்ட மறைக்கணும்னு நினைச்சிருந்தா,எனக்குப் பிடிச்ச பாட்ட,அவர் போன்ல செட் செய்திருக்க மாட்ட குட்டிம்மா..என்னோட நம்பர் அவர்கிட்ட கொடுத்தியோ..இல்ல நீயே அவருக்கு தெரியாம சேவ் செய்தியோ தெரியலை..ஆனால் அந்தப் பையன்..”என்றவர் தன்னை திருத்திக்கொண்டு..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.