(Reading time: 18 - 35 minutes)

தியை காணாது தேடிய தைஜூ, அவளைப் பற்றி தகவல் சொல்ல இஷானுக்கு போன் செய்து சதியைக்காணோம் என்று சொல்ல, இஷான் அவளிடம் நடந்த சம்பவங்கள் அனைத்தையும் சொல்ல, அவள் உடனே மருத்துவமனைக்கு விரைந்தாள்…

இவ்வளவு நேரம் அவனது மயக்கும் விழிகளை சொந்தம் கொண்டாடி தனக்குள் ஒளித்து வைத்திருந்த ஜெய்யின் இமைக்கதவுகள், இப்போது மனமே இல்லாமல் தனது கதவுகளை திறக்க முனைந்தது…

அவனிடம் அசைவு ஏற்படுவதை உணர்ந்து சதி, சோமநாதன், பிரம்மரிஷி மூவரும் அவனையேப் பார்க்க, அவன் மெல்ல தன் விழி திறந்தான்…

கண் திறந்தவனின் பார்வையில் பரிதவிப்புடன் அவன் விழி திறந்து விட்டான் என்ற சந்தோஷமும், தன்னவனுக்கு இனி ஒன்றும் இல்லை என்ற ஆசுவாசத்துடனும் கைக்கூப்பி வேண்டிக்கொண்டு எதையோ முணுமுணுத்துக்கொண்டு, தன் பார்வைக்காக காத்துக்கொண்டிருக்கும் தன்னவள் தெரிய, அவன் அவளை இமைக்காமல் பார்த்தான்…

லேசான சிரிப்பு அவன் இதழோரம் எட்டிப் பார்க்க, அவன் முகம் தந்த பிரகாசம் அவள் முகத்திலும் பிரதிபலிக்க, அவனது பார்வை மேலும் சில நொடிகள் அவளது முகத்தில் நின்றுவிட்டு பின் நகர்ந்தது…

துடிப்பும் தவிப்புமாய் நின்றிருந்த தகப்பனின் முகம் தெரிய, அவன் புன்னகையுடன் அவரைப் பார்த்தான்…

“எனக்கெதுவும் இல்லப்பா… ஐ அம் ஆல்ரைட்….” என கம்பீரத்தோடு சொன்ன மகனை அணைத்துக்கொண்டு சில நிமிடங்கள் அழுது தீர்த்தார் சோமநாதன்…

“அப்பா…. ஒன்னும் இல்லப்பா… உங்களை விட்டு நான் எங்கேயும் போகமாட்டேன்… நம்புங்க….” என அவன் தகப்பனை தேற்ற, அவர் நிமிரவே இல்லை…

“அப்பா… என்ன இது… சின்னப்பிள்ளை மாதிரி… சொன்னாக்கேளுங்க…” என்றவன் தன்னை அணைத்திருந்த தகப்பனின் கேசத்தில் விரல் வைத்து வருட, அவர் சிரிப்புடன் எழுந்து கொண்டார்…

“உங்களுக்கு அழகான முடிப்பா… இன்னமும் அப்படியே இருக்குது…” என அவன் சொல்ல,

“போடா… படவா…” என சிரித்தவர்,

“சின்னப்பிள்ளையில எப்பவும் இப்படித்தான் செய்வான்ம்மா… என் முடியில கை வச்சு விளையாட இவனுக்கு ரொம்ப பிடிக்கும்…” என சதியிடம் சொல்லி பெருமைப்பட, அவனும் சிரித்தபடி திரும்ப,

இப்போது அவனின் கண்ணில் பட்டார் பிரம்மரிஷி…

சட்டென எழுந்து கொள்ள முயற்சித்தவனை, அவனருகில் அமர்ந்து தடுத்தவர்,

“சிவா இப்போ எப்படி இருக்குப்பா உடம்பு?...” என விசாரித்தார்…

“ஒன்னுமில்ல தாத்தா… நான் நல்லா இருக்குறேன்…”

“சந்தோஷம்ப்பா… உங்கிட்ட இருந்து இந்த வார்த்தையை கேட்கத்தான் நான் இவ்வளவு நேரம் காத்திட்டிருந்தேன்…”

அவரின் வார்த்தை அவனின் காயம் கொண்ட நெஞ்சத்திற்கும் இதமளிக்க, அவன் அவரைப் பார்த்து புன்னகைத்தான்…

“உனக்கு எதுவும் ஆகாது சிவா… அழிவே இல்லாத சிவனோட அம்சம் நீ… அதனால தான் உனக்கு மரணத்தையும் வென்ற ஈசனோட பேரை வச்சிருக்குறேன்… உனக்கு ஒரு குறையும் வராது… தீர்க்காயுஷ்மான் பவ….” என தன் இருகரம் கொண்டு அவர் அவன் தலை மேல் வைத்து வாழ்த்த, அவன் கரம் குவித்து அவரை வணங்கினான்…

எல்லையில்லாத ஆனந்தம் சதியின் உள்ளத்தில் நிரம்பி வழிய, கண்களில் சேர்ந்த நீரோடு பிரம்மரிஷியை நோக்கி தன் கரம் கூப்பினாள் அவள்….

பதிலுக்கு இமை மூடி அவர் புன்னகைக்க,

“ரொம்ப நன்றிப்பா… உங்க வார்த்தை எனக்கு இப்போ எவ்வளவு சந்தோஷத்தை கொடுத்திருக்குன்னு என்னால சொல்லக்கூட முடியலை… என் பையனுக்கு நீங்க பேர் வச்சி ஆசீர்வாதம் பண்ணீங்க பல வருஷம் முன்னாடி… இப்போ மறுபடியும் அவனுக்கு ஆசீர்வாதம் பண்ணீட்டிங்க அவனோட ஆயுளுக்கு ஒரு குறையும் வராதுன்னு…. ரொம்ப சந்தோஷம்ப்பா… ரொம்ப சந்தோஷம்…” என அவர் நாதழுதழுக்க பேச, பிரம்மரிஷி அவரின் உணர்வுகளை புரிந்துகொண்டார்...

அதற்கு அச்சாரம் போல், சோமநாதனின் கரம் பிடித்து அவர் தட்டிக்கொடுக்க, சோமநாதனின் முகத்திலும் நிறைவான புன்னகை…

அந்நேரம், “ஜெய்… எப்படிடா இருக்குற?...” என இஷானும்,

“அண்ணா எப்படிண்ணா இருக்குறீங்க?...” என தைஜூவும் வர, பிரம்மரிஷியும், சோமநாதனும் எழுந்து கொண்டனர் ஜெய்யின் அருகிலிருந்து…

“நீங்க பேசிட்டிருங்கப்பா… நாங்க வெளியே இருக்குறோம்…” என இருவரும் சென்றதும், அதற்காகவே காத்திருந்தவன் போல், எழுந்து அமர்ந்திருந்த ஜெய்யை அணைத்துக்கொண்டான் இஷான்…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.