(Reading time: 11 - 22 minutes)

சாந்தி உள்ளேயிருந்து போன் நம்பர் எடுத்து வந்து கொடுத்தாள்

‘அவர் பேரென்ன?’ என்று வினவினார் சுந்தரம்

தியாகராஜன், என்றார் சாந்தி, அதைக் கேட்டவுடன் தியாகராஜன் சார் பையனை கூப்பிடவேண்டும் என்று ஞாபகம் வந்தது, உடனே அவனுக்கு போன் செய்தார், அவனிடம் விஷயத்தை சொல்லி ‘எல்லோரும் வந்து விடுங்கள்,’ என்று சொல்லிவிட்டு, பிறகு ராதாவின் அத்தை வீட்டுக்கு போன் செய்தார்,சிவாவை அழைத்து விஷயத்தை சொன்னார், அவர்கள் லைன் கிடைத்தவுடன் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார் , பிறகு ‘திடீரென்றுதான் நாங்கள், நாளைக்கே வைத்தோம் அதுவும் நான் முடிவெடுத்தது அதனால் நேரில் வரமுடியவில்லை, அவர் உடம்பு சரியில்லை, அதுவும் ஒரு காரணம் நேரிலே வரமுடியாததுக்கு, அதனால் தவறாக எடுத்துக் கொள்ளாமல் குடும்பத்தோடு வந்து விடுங்கள், இங்கு ஒரு குறையில்லாமல் கல்யாணத்தை நடத்தி கொடுக்கவேண்டும்’ என்றும், உங்கள் வீட்டில் இன்னும் பெரியவர்கள் இருந்தால் கொஞ்சம் போனைக் கொடுங்கள்’ என்று கேட்டார் சுந்தரம், அவரின் அம்மாவிடம் போனைக் கொடுத்தார் தியாகராஜன், அவரிடம் பேசியவுடன் அவர் வியந்து போய்விட்டார், அந்த பெரியவர் 'ஒரு குறையும் வராது நாங்கள் எல்லோரும் வருவோம் கவலைப் படாதே' என்று சொல்லி வாழ்த்தவும் செய்தார்

அதை சாந்தியிடம் சொன்னதும், 'ரொம்ப சந்தோசம், அந்த அம்மாள் சொன்னா கண்டிப்பாக எல்லோரும் வந்து விடுவார்கள், உங்களுக்கு ரொம்ப நன்றி,' என்றாள் சாந்தி

ரம்யாவிற்கும், ரஞ்சனாவிற்கும் யார் கல்யான பையன் என்று தெரியாமல் குழம்பினார்கள், ஆனாலும் அடுத்த நாள் கல்யாணத்திற்கு ரெடியாவதைப் பற்றி பேசிகொண்டிருந்தார்கள், அப்படியே புது போனில் சிம் மாத்துவதைப் பற்றியும் பேசினார்கள், ரஞ்சனாவின் போன் ரிங் வந்தது, எடுத்துப் பேசிக் கொண்டே வெளியே போனாள்

‘சொல்லு சீனு,’ என்றாள்,

ராதா போன் பண்ணியிருந்தா, கல்யாணத்துக்கு வரச் சொன்னாள், நாங்கள் எல்லோரும் நாளைக்கு நேரே கோவிலுக்கு வந்து விடுவோம், நீ சீக்கிரமே வந்து விடு, ஏற்கனவே மூன்று நாளாகி விட்டது பார்த்து ' என்றான் சீனு

அப்போது அந்தப் பக்கம் யாரோ வருவது போலிருந்தது அதனால் மெதுவாக' ஆமாம், எனக்கும்தான் நான் சீக்கிரமே வந்துடுறேன்' என்றாள்

'சரி நாம் அப்புறம் பேசலாம்,' என்றாள் ரஞ்சனா, போனை அணைத்துவிட்டு ரம்யாவிடம் வந்தாள்

‘என்ன சீனுவா?’ என்றாள் ரம்யா, ரஞ்சனாவின் முகம் சிவந்தது 'ம்ம்,' என்றாள்

நீயே காட்டிக் கொடுத்துவிடுவாய், ஏன் அவன் பேரைச் சொன்னா உன் முகம் இவ்வளவு சிவப்பாறது? என்று கேட்டு 'ஆ, ஹை, அக்கா எப்போது சுந்தரம் சாரை பார்க்கிறாளோ அப்போது, இப்படித்தான் முகம் சிவப்பாள், அப்போ சுந்தரம் சார்தான் அக்காவை கல்யாணம்.......???'

என்று கூறி, ரம்யாவும் ரஞ்சனாவும் ஒருத்தர் முகத்தை ஒருத்தர் பார்த்தார்கள்,ரஞ்சனா 'வாட்? அந்த பெரிஸ்? நோ வே?' என்றாள்

‘நம்ம அக்கா எவ்வளவு சின்னவ? ஆனால், அவரைப் பார்த்தால், அவ்வளவு வயசு தெரியல, சைட் அடிக்கிறா மாதிரித்தான் இருக்கார், ஆனா, அவருக்கு அக்காவை விட பெரிய பையன் இருக்கிறாரே, அதனால் இருக்காது,' என்று சொல்லி

‘ஆமாம், நிஜமாகவே ஆள், சம்ம ஜோரு, இப்பவே இப்படின்னா, சின்ன வயசுல எப்படி இருப்பாரு?’ என்று ரஞ்சனா கேட்க

அதை விடு, இவர் பையன் எப்படி இருப்பான்?அதுவும் அமெரிக்காவிலே இருக்கான், சும்மா ஹீரோ கணக்கா இருப்பாருல்ல, என்றாள் ரம்யா,

அதை கேட்ட ரஞ்சனா' என்னம்மா? நூல் விடலாம்னு, பார்க்கிறாயா?' என்றாள்

‘சீ, சும்மாரு, அவர்தான் ஒரு வேளை அக்காவை, என்று தெரியாது? அதனால் நாம் எதுவும் பேசக்கூடாது,' என்றாள் ரம்யா

அதற்கு ரஞ்சனா,' ஓ! அப்படி இல்லையென்றால்,நீங்கள் நூல் விடத் தயாரா?’ என்றாள்

ரம்யாவிற்கு கோபம் வந்தது 'என்ன பாஷைடி இது, கேக்கவே பிடிகலை,' என்றாள்

அதற்குள் அவள் 'இந்த கதை தான் வேணாம்மா நம்மகிட்ட, நான் கேட்டதுக்கு நேரடியா பதில் சொல்லு, ஒரு வேளை அக்கா அவரை கல்யாணம் பண்ணிக்கலைன்ன...... ' அவள் முடிப்பதற்குள் ரம்யா 'ஏய்ய்ய்..... நிறுத்து, நாம அந்த ஆளைக் கூட பார்த்ததில்லை, அதற்குள் நீ என்னென்னவோ பேசுகிறாய்?'

‘சரி, நீ சொல்லு சீனு என்ன சொன்னார்? 'என்று பேச்சை மாற்றினாள்

மறுபடியும் சீனு பேரை சொன்னதும் அவளுக்கு முகம் திரும்பி சிவந்தது ' இது தேறாது, நீ யாரிடமோ மாட்டப் போற, அப்பப்போ சீனுன்னு பேர் சொன்னவுடன், நீ முகம் சிவக்கற, அவனை பார்க்கும்போதும் இப்படித்தானா?' என்று கேட்டாள் ரம்யா

அதற்க்கு அவள் 'நீயும் லவ் பண்ணிப்பார் அப்போ தெரியும் என்றாள்,'

அது சரி, எனக்குப் பிடித்த ஆளாய் கிடைக்க வேண்டும், அந்த ஆளுக்கும் என்னைப் பிடிக்க வேண்டும், ஹ்ம்ம்ம்ம்,' என்று ஒரு பெரு மூச்சை விட்டாள்.

‘சரி வா, உள்ளே போலாம்,’ என்று உள்ளே போனார்கள், எல்லோரும் சாப்பிடலாம் என்று போனார்கள், அவர்களுடன் இவர்களும் சேர்ந்துக் கொண்டார்கள்

தொடரும் 

Episode # 12

Episode # 14

{kunena_discuss:1005}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.