(Reading time: 9 - 17 minutes)

ன்றைக்கு பயிற்சி எல்லாம் முடித்து விட்டு , இரவு கான்டீன் வந்தவர்கள் அங்கே அங்கே அமர்ந்து இருந்தனர்..

அப்போது சுபா , நிஷா இருவரும் வர, அவர்களுக்கு வேறு இடம் இல்லாததால், அர்ஜுன் அருகே இருந்த இருக்கைகளில் அம்ரந்தனர்.

ராகுலும் அங்கியே வர (அதானே.. அவர் வராமல் இருந்தால் தான் அதிசயம்) பேச்சு தீபாவளியை நோக்கி சென்றது.

அப்போது நிஷா ‘கேப்டன் நீங்களும் ஊருக்கு போய்டுவீங்களா..? “ என்று இருவரையும் வினவ, அவள் முகபாவம் பார்த்து ராகுல் தன் லீவை கான்செல் பண்ண எண்ணினான்..

ஒரளவு இப்போது எல்லோரும் நன்றாக பேச ஆரம்பித்த்ததால் , நிஷா கேட்டு விட்டு உதட்டை கடித்தாள்.

அர்ஜுன் இருவரையும் பார்த்து விட்டு “தெரியவில்லை.. லீவ் apply செய்து இருக்கிறோம் .. கிடைத்தால் போவோம்.. இல்லை என்றால் இங்கே தான் தீபாவளி..”

இப்போ சுபத்ரா “ஹே.. சூப்பர் .. நான் நம்ம child specialist முருகன் கிட்ட இப்பயே application போட்டுடறேன்... உங்களுக்கு லீவ் கிடைக்க கூடாது என”

அர்ஜுன் அவளை முறைத்ததை பார்த்தவள், ‘ஹி..ஹி.. சும்மா.. சொன்னேன்.. “ என்று வழிந்தாள்..“அது என்ன.. child specialist ன்னு முருகனுக்கு பேர் .. ?”

“அதுவா.. அவரைத்தானே குழந்தை கடவுள் சொல்லிட்டு இருக்காங்க.. சோ அவருக்கு அந்த பேர்..’

“அது சரி.. இப்போ இங்கே யாரு குழந்தை ?”

“யா.. இட்ஸ் மீ.. “ என, மூவரும் அவளை அடிக்க வந்தனர்..

பிறகு எல்லோரும் அவரவர் இடத்திற்கு செல்ல,

ராகுல் அர்ஜுனிடம் “ஏன் மச்சான்.. நமக்குத்தான் லீவ் கிடைச்சுட்டதே.. அப்புறம் ஏன் இன்னும் apply செய்து இருக்கிறோம்ன்னு சொன்னே?’

“என் செல்லம் என்னை தேடுதான்னு செக் பண்ணத்தான்..”

“ஒஹ்.. நானும் என் லீவ் கான்செல் பண்ண போறேன் டா...”

“ஏண்டா..’

“இல்லைடா.. என் ஆளுக்கு இப்போதான் லேசா பல்பு எரிய ஆரம்பிச்சு இருக்குன்னு நினைக்கிறேன்.. இந்த டைம் லே அப்படியே அவ கிட்ட என் லவ் சொல்லாமான்னு யோசிக்கிறேன்.. “ என்றான்..

“ஹ்ம்ம்.. அதுவும் சரிதான்..”

“ஆமா.. நீ எப்போ சொல்ல போறே?”

“நான் இந்த ட்ரைனிங் முடிச்சுதான் சொல்ல போறேன்.. “ என்றான்.

அந்தவாரம் பர்சனல் கால் பேசிய அர்ஜுன் ..ராகுல் இடம் “டேய்.. வந்த்ட்டாங்கடா வில்லனுங்க நமக்கு” என்றான்..

மழை பொழியும்

Episode 06

Episode 08

{kunena_discuss:1031}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.