(Reading time: 18 - 36 minutes)

மாம்….ஆனால் அதெப்படி உனக்கு தெரிந்தது?” அவன் குரல் ஆச்சரியத்தில் மூழ்கியிருந்தது.

“இதை கண்டுபிடிக்க நான் ஐ.பி.எஸ் ஆ இருக்கனும்னு நீ நினைச்சா, அது டூ மச் சஞ்சு.  உன் முகம் போன விதத்திலியே தெரிஞ்சதே” என்று நெடுநாள் பழகியவள் போல் அவனுடைய பெயரைச் சுருக்கினாள்.

அதை கேட்டவனின் மனமோ ஆனந்த கூத்தாடியது.  அவள் உன்னை இப்படி வாருரா, நீயோ டான்ஸ் ஆடுற.  இது எங்க போயி முடியுமோ? நானும் உங்கூட சேர்ந்து மாட்டிக்குவேனே என்று ஜெய்யின் மனம் புலம்பியது.  நீ இதுல தலையிடாத என்றான் ஜெய்.

இப்போது அவன் முகத்தினைப் பார்த்தவளோ, “பேரை சுருக்கி கூப்பிட்டது பிடிக்கலையா?” என்றபடி தன் புருவமெனும் வில்லை வலைத்தாள்.

அந்த புருவங்களின் வலைவை ரசித்தவனோ அவளுக்கு பதில் சொல்ல வேண்டும் என்பதையே மறந்திருந்தான்.

“சஞ்சு! நீ தப்பா நினைச்சாலும் எனக்கு கவலையில்லை.  என்னோட ஃப்ரெண்டுன்னா நான் எப்படி கூப்பிட்டாலும் அக்செப்ட் பண்ணனும்.  அதே மாதிரி என் பேரை உனக்கு பிடிச்ச மாதிரி கூப்பிட ஃபுல் ஃப்ரீடம் இருக்கு”

இப்போது அவள் பேசும்போது சுருங்கி விரியும் குண்டு கண்கள் அவனை அவளிடமாக இழுத்தன.  என்னை தலையிடாதன்னு சொன்னாலும் உனக்கு நல்லது சொல்ல வேண்டியது என் கடமை.  அவளிடம் பேசனும்னு பஸ்ஸில் வந்திட்டு இப்போ என்னடானா அவள் எவ்வளவு பேசினாலும் சும்மா இருக்க.  இப்படியே போனா அவள் வேற யாரையாவது ஃபெரெண்டு பிடிக்க போறா நீ அம்போன்னு நிக்க போற என்று ஜெய்யின் மனம் அவனை எச்சரிக்க சட்டென்று தூக்கத்திலிருந்து எழுந்தவன் போல்

“என்ன சொன்ன?” என்றான்.

“சரியா போச்சு போ” என்று தன் தலையின் மேல் கைகளை வைத்து கொண்டவள், “நான் என்ன சொன்னேன்னு தெரியாத அளவுக்கு என்ன யோசனை? இன்னும் ஃப்ரன்ட் ரோல உட்கார முடியலனு வருத்த பட்றீயா மச்சா?” என்று வருத்தமாக அவள் கேட்கவும்

“அப்படியெல்லாம் இல்லை.  ஃப்ரன்ட் ரோலேயே உட்கார்ந்து பழகிட்டதாலே கொஞ்சம் வருத்தமா தான் இருந்தது.  இப்போ உங்களை மாதிரி ஃப்ரெண்டு இருக்கும்போது பின்னாடியே உட்காரலாம்.  ஆனாலும் இத்தனை பேரும் முன்னாடி உட்கார்ந்திருக்கறது தான் ஆச்சரியாமாயிருக்கு.  ஒரு வேளை இவங்கெல்லாம் ரொம்பவே பாடத்தை கவனிக்கனும்னு சீக்கிரமா வந்து இடம் பிரிச்சிருப்பாங்களோ?”

“அய்யோ சஞ்சு! அவங்கெல்லாம் முன்னாடி உட்கார்ந்திருப்பதே எந்த பாடத்தையும் கேட்காமல் எப்போவேணாலும் தூங்கலாமுனு தான்”

ஜெய் அவளின் பதிலில் குழம்பி தான் போனான்.  இது அவனின் கருத்துக்கு முற்றிலும் எதிர்மறையாக இருந்தது.  அவனின் முகத்தைப் பார்த்து அதை உணர்ந்தவளோ,

“இந்த காலேஜில் 80% அட்டெண்டன்ஸ் இருக்கனும் இல்லைனா பரீட்சை எழுத முடியாது”

அவன் முகத்திலிருந்த குழப்பம் கேள்வியாக மாறவும்

“புரியுது… அட்டெண்டன்ஸுக்கும் முன்னாடி உட்காரதுக்கும் என்ன சம்பந்தமிருக்குன்னு தானே யோசிக்கிற…” அவன் ஆமோதிப்பாக தலையை அசைக்கவும்

சரயூ தொடர்ந்தாள், ”லெக்சரர்ஸ் எல்லோருக்கும் பேக் பெஞ்சு பசங்க தான் சேட்டை பண்ணுவாங்க, பாடத்தை கவனிக்க மாட்டாங்கன்னு ஒரு எண்ணம்.  அதனால பின்னாடி உட்கார்ந்திருக்கவங்களை கவனிக்கரதுலயே குறியாயிருப்பாங்க.  ஸோ முன்னாடி இருக்கவங்க தூங்கினால் கூட கண்டு பிடிக்க மாட்டாங்க”

இவள் சொன்னதை நம்ப முடியாமல் பார்த்துகொண்டிருந்தான் ஜெய்.  அது அவன் முகத்திலும் பிரதிபலிக்க

“நீ என்னை நம்பலாம்.  உனக்கு நாளைக்கே இதையெல்லாம் ப்ரூவ் பண்ணிக்காட்டுறேன்” என்றாள் சரயூ. 

என்ன தான் அவள் மீது காதலிருப்பினும் ஜெய்யிற்கு அவளோடு பின் வரிசையில் உட்கார்வது முற்றிலும் புதியதோர் அனுபவமாதலால் சற்று அசௌகரியமாக உணர்ந்தான். 

அவளுக்கு என்ன தோன்றியதோ, “மச்சா நீ கவலையே படாதே.  பின்னாடி உட்கார்ந்து எப்படி வாழ்க்கையை என்ஜாய் பண்ணருதுனு நான் உனக்கு சொல்லி தரேன்” என்று ஆரம்பித்தவள் தன்னுடைய பேக் பெஞ்ச்சு லீலைகள், நண்பர்கள், க்ளாஸ் பங்க், இன்டர் காலேஜ் ஃபெஸ்ட், பிடித்த டீச்சர், சப்ஜெக்ட், ஏன் இந்த காலேஜ் என தன்னுடைய ஹிஸ்டரி ஜியாகரஃபி என எல்லாவற்றையும் அவன் கேட்காமலேயே சில மணி நேரங்களில் பேசிவிட்டிருந்தாள்.

அவளின் பேச்சினிடையே கேம்பஸ் ஷட்டலில் (campus shuttle) ஏதோ கொஞ்சம் காலேஜ் கேம்பஸ் சுற்றியதும் சீனியர்கள் சொன்ன காலேஜ் விதிமுறைகளில் ஏதோ ஒரு சில மட்டுமே அவனுக்கு கேட்டிருந்தன.  அது ஒரு பெரிய கேம்பஸ்.  எல்லா டிபார்ட்மெண்டிற்கும் தனிதனியான கட்டிடங்கள் இருந்தன.  அதே போல் லைப்ரரியும் தனியான கட்டிடமாக தான் இருந்தது.  பிரம்மாண்டமான ஆடிட்டோரியம் என எல்லாவற்றையும் சுற்றி முடித்து கடைசியாக காலேஜ் கன்ட்ரோல் ரூமை காண்பித்த சீனியர்ஸ், ஃப்ரெஷர்சை அவரவர்களின் ஐடி கார்டுகளை பெற்றுக்கொண்ட பின்னர் வீட்டுக்கு போகலாம் என்றுவிட்டு அங்கிருந்து அகன்றனர்.   

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.