(Reading time: 9 - 18 minutes)

விருந்திற்கு வந்தவர்களை மேல் தளத்திற்கு அழைத்துச் சென்று உட்கார வைக்கப்பட்டுக் கொண்டிருந்தனர். மஹிந்தனைத் தடுத்த பார்த்தீபன் . மஹிந்தன், நிச்சயதார்த்த மோதிரம் உங்களிடம் தானே உள்ளது என்றுகேட்டான்

ஆமாம் என பதிலளித்த மஹிந்தனிடம் அவள் விரலுக்கு அம் மோதிரம் சரியாக இருக்குதா என்று சரிபார்க்காமல் நீங்கள் அதை வாங்கிவிட்டீர்கள் கீழ் தளத்தில் வலதுபுறம் உள்ள ஐஸ்வர்யாவின் அறைக்கு போய் அவளுக்கு போட்டு சரி பாருங்கள் அது சரியாக இல்லாவிடில் மதுரா உங்களிடம் வேறு மோதிரம் கொடுப்பாள் அதை போட்டுவிடுங்கள் என்றுகூறி ஐஸ்வர்யா அறைக்குப் போகும் பாதையை காட்டி அங்கு போகும்படி கூறினான்.

மஹிந்தன் ஐஸ்வர்யாவின் அறைவாசலில் சென்று கதவுதிறக்கும் போது, கேட்ட பேச்சுகுரலில் உள்ளே செல்லாமல் அங்கேயே நின்றுகொண்டு கவனிக்க ஆரம்பித்தான்

ஐஸ்வர்யா டார்லிங் யூ ஆர் லுக்கிங் வெரி செக்சி டுடே என்றுகூறி அவள் உதட்டில் முத்தமிட்டான்

உடன் அங்கிருந்த ஐஸ்வர்யாவின் மற்ற நண்பர்கள் ‘ஹேய்’ என்ற ஒலி எழுப்பி அஜய் இனி நீ ஐஸ்க்கு இப்படி முத்தம் கொடுக்க கூடாது.அதற்கு முழு உரிமை படைத்தவர் மஹிந்தன் தான் என்று கூறினர்

எனோ மஹிந்தனுக்கு உள்ளே செல்ல இஷ்டம் வரவில்லை அவன் உள்ளே போகாமலே திரும்பி நேராக மதுராவிடம் வந்து சேர்ந்தான் மதுராவிடம் உள்ள மோதிரத்தை வாங்கிக்கொண்டு அதனையே நிச்சயதார்த்துக்கு போட்டுவிட முடிவு செய்தான்.

அவன் பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்த மோதிரம் அவன் நெஞசில் உறுத்தியது முதல் முதலாக தான் தவறான முடிவு எடுத்து விட்டோமோ? என யோசனை செய்ய ஆரம்பித்தான். அந்த யோசனையாகவே நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் பங்குகொள்ள ஆரம்பித்தான்

அங்கு வந்த ஐஸ்வர்யாவை அவன் கண்டுகொள்ளவே இல்லை. மஹிந்தனின் அந்த உதாசீனமான செயல் ஐஸ்வர்யாவை சீற்றம் கொள்ளச் செய்தது. எனினும் அவனின் அந்தஸ்தின் காரணமாக அடக்கி இருக்க முடிவுசெய்தாள்.

ருவரும் வெவ்வேறு மனநிலையில் இருந்தாலும் நிச்சயதார்த்தம் சிறப்பாகவே முடிந்தது. நிச்சயம் முடிந்த மறுநிமிடமே மஹிந்தன் அங்கிருந்து வெளியேறி தனியாக அவனின் பீட்ச் ரெசார்டிற்கு வந்துசேர்ந்தான் .

அவன் மனம் சோர்வாக இருக்கும்போது எப்பொழுதும் வரும் இடம் இந்த ரெசார்ட்தான் ஆனால் தனியாக வரமாட்டான் தன் நண்பன் கதிருடன் தான் அங்கு வருவான்.

கதிர் அவன் நிச்சயதார்த்தத்திற்கு வந்திருந்தான் ஆனால் கூட்டத்தில் தள்ளிநின்று எல்லோரையும் கவனித்துக்கொண்டு இருந்தான். வீடிற்கு வெளியில் மட்டுமே அவனுடன் நட்பு பாராட்டுவான் . அவன் வீட்டுக்கு வரமாட்டான் அவன் குடும்பநிகழ்ச்சியில் கலந்துகொள்வதை முடிந்தஅளவு தவிர்த்துவிடுவான் தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் இப்பொழுதுபோல ஒதுங்கி ஒரு காவளாளியின் பணியை எடுத்த்க்கொள்வான்.

கதிரைப்பற்றி நினைத்துக்கொண்டிருக்கும்போதே கதிர் தன்னுடையது இரண்டுசக்கர வாகணத்தில் அங்கு வந்து சேர்ந்தான். கதிரைப்பார்ததும் மஹிந்தன் முகம் மலர்ந்தது.

வந்தவன் என்ன பிரச்சனை மஹிந் எனக்கேட்டான். அதற்கு மஹிந்தன் எப்பிடிடா? என் முகத்தைப் பார்த்தே எனக்கு பிரச்சனை என்று கூறிவிடுகிறாய். ஆனால் இப்பிரச்சனையில் உன்னால் எனக்கு உதவமுடியாது என்று கூறினான்.

அதனைக்கேட்ட கதிர் என்னால் முடியாது என்பதை நான்சொல்ல வேண்டும் நீ சொல்லக்கூடாது என்றான்.

சரிடா நான் உன்னிடம் சொல்கிறேன் அதற்கடுத்து நீ இப்ப சொன்ன டயலாக்கை சொல். நான் உன்னைச் சூரன் என ஒப்புக்கொள்கிறேன் என்றான் மஹிந்தன்.

கதிர், இதுவரை என்முடிவு எதுவும் தவறாக போனதில்லை ஆனால் இன்று கல்யாணத்திற்கு தவறான பெண்ணைத் தேர்ந்தெடுத்து அவசரப்பட்டுவிட்டேன் என கூறி, தான் பப்பில் ஐஸ்வர்யாவைப் பார்த்ததுமுதல் இன்று அவள் அறையில் நடந்ததுவரை அனைத்தையும் கூறினான்.

என்னை கட்டுப்படுத்துபவளாக என் மனைவி இருக்கக்கூடாது என்று நினைத்து எந்த வரைமுறைக்கும் கட்டுப்படாத ஒருத்தியை தேர்ந்தெடுத்துவிட்டேன். என்னுடைய வாரிசு அவளிடம் இருந்து வருவதை ஒரு போதும் நான் அனுமதிக்க மாட்டேன். இனி இந்த கல்யாணத்தையும் நிறுத்தவும் முடியாது என்று கூறியவனை கவலையோடு பார்த்தான் கதிர்.

கதிர் பிறந்து வளர்ந்தது குப்பத்தில் அவன் பெற்றவர்களை பார்த்ததில்லை அவனின் பதினாறு வயதுவரை வளர்ந்தது அவன் மாமா ரவுடி மாரியிடம் மாரிக்கு குடும்பம் கிடையாது. அவன் வசித்த குப்பத்தின் அருகிலிருந்த விளையாடும் மைதானத்தில் மஹிந்தன் [பிளஸ் ஒன் படிக்கும் போது] கிரிக்கெட் விளையாட தினமும் வருவான். கதிர் வேடிக்கை பார்க்க அந்த மைதானத்திற்குள் அடிக்கடி வருவான்.

ஒருநாள் மஹிந்தனுக்கும் கூட விளையாடும் மற்றவனுக்கு தகராறு வந்தது மஹிந்தன் கவனிக்காத போது பேட்டால் மஹிந்தனனின் பின் மண்டையில் அடிக்க வீசியதை பார்த்து பக்கத்தில் இருந்த கதிர் குறுக்கே வந்து அவ்வடியை தன் முதுகில் வாங்கி சுருண்டு மயங்கி கீழே விழுந்தான்.

அன்று முதல் கதிர் மஹிந்தனனின் நட்பு ஆரம்பித்தது. மயக்கம் தெளிந்த பின் கதிருக்கு ருபாய் நோட்டு கட்டை கொடுத்தான் மஹிந்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.