(Reading time: 16 - 31 minutes)

20. என்னுள் நிறைந்தவனே - ஸ்ரீ

Ennul nirainthavane

"உயிரே என் உயிரே என்னவோ நடக்குதடி
அடடா இந்த நொடி வாழ்வில் இனிக்குதடி
ஒரு நிமிடம் ஒரு நிமிடம் எனை நீ பிரியாதே
எனதருகில் நீ இருந்தால் தலைகால் புரியாதே
நிஜம் தானே கேளடி நினைவெல்லாம் நீயடி
நடமாடும் பூச்செடி நீ என்னை பாரடி

இதுவரை எங்கிருந்தோ
இதயமும் உன்னை கேட்கிறதே
பெண்ணே எங்கே மறைந்திருந்தாய்
என்னுள் எப்படி நுழைந்து கொண்டாய்
உனக்குள்ளெ ஒளிந்திருந்தேன்
உருவத்தில் உதிரமாய் கலந்திருந்தேன்
உன்னை உனக்கே தெரியலையா
இன்னும் என்னை புரியலையா

நான் சிரித்து மகிழ்ந்து
சிலிர்க்கும் வரத்தை நீ கொடுத்தாய்
நான் நினைத்து நினைத்து
ரசிக்கும் கனத்தை நீ அளித்தாய்
எங்கேயோ உன் முகம் நான் பார்தத ஞாபகம்
எப்போதோ உன்னுடன் நான் வாழ்ந்த ஞாபகம்"

திகாலை பொழுது என்றுமே ரம்மியமானது தான்..புதிய நாளுக்கான உற்சாகம்,ஆனந்தம் அனைத்தையுமே வாரி வழங்க கூடியது..சூரியன் உதிக்க தோன்றும் அந்த நேரம் சுகமாய் வருடும் தென்றலோடு பறவைகளின் உற்சாக குரலோடு கைகளில் சுவையான சூடான காபியும் கிடைத்தால் பூலோக சொர்க்கமே நிச்சயம் கண்முன் வரும்..எந்தவித பரபரப்புமின்றி வாகனங்களின் கூச்சலின்றி மனம் கவரும் பாடலும் ஒலிக்கும் போது அதன் இன்பமே அலாதிதான்..

அந்த மாதிரியான காலை பொழுதில் சூரியனை ரசித்து கொண்டிருந்தான் ராம்..முந்தைய நாளின் நினைவுகளில் தன்னை தொலைத்திருந்தான்..என் மகி..இந்த ஒரு வார்த்தையே அவன் உயிர் வரை குளிரை பரப்பியது..அவளுக்கு சீக்கிரம் குணமாக வேண்டும் என்று இறைவனை வேண்டினான்..ஏண்டீ என்ன பாத்தாலே உனக்கு பிடிச்சுருமா..எனக்காக என்ன வேணா பண்ணுவியா..அந்த அளவுக்கு நா உனக்கு என்ன பண்ணேன்..என்னால நீ உன் நினைவுகளை இழந்ததுதான் மிச்சம்..அப்படியிருந்தும் ஏன் நீ இப்படியிருக்க குட்டிமா..இதுதான் பூர்வ ஜென்ம பந்தமா..ஆனா இனி எத்தனை ஜென்மம் எடுத்தாலும் நிச்சயமாய் நீதான் என் பொண்டாட்டி..நீ போதும் போதும்நு சொல்ற அளவுக்கு என் காதலை உன் மேல திணிக்கனும்..அதுவரை நா உன்கூடவே இருக்கனும் குட்டிமா..என கலைந்த ஓவியமாய் கட்டிலில் உறங்கி கொண்டிருந்தவளை கண் கொட்டாமல் பார்த்தவாறே சிந்தனையில் நின்றிருந்தான்..

சில நிமிட சிந்தனைக்கு பின் தலையை சிலுப்பி சிந்தனைகளை ஒதுக்கிவிட்டு அன்றைய நாளின் சவால்களை சந்திக்க தயாரானான்..

இளங்காலை வெயில் முகத்தை தழுவ மெதுவாய் கண் விழித்தாள் மகி..எழுந்து கொள்ளும் போதே அருமையான சமையல் வாசனை நாசியை தொட அப்போதுதான் அருகில் ராம் இல்லை என்பதை உணர்ந்து வேகமாய் எழுந்தமர்ந்து மணியை பார்த்தாள்..காலை 6:45..அதுகுள்ள எழுந்துட்டாரா என்றவாறே கிச்சன் நோக்கிச் செல்ல அங்கே மும்மரமாய் காய் நறுக்கி கொண்டிருந்தான் ராம்..

ராம்..

ஹே குட்மார்னிங் குட்டிமா..

குட்மார்னிங்ப்பா..இதெல்லாம் நீங்க ஏன் பண்றீங்க என்ன எழுப்பிருக்கலாம்ல..

இல்லடா நீ நல்லா தூங்கிட்டு இருந்த..எனக்கு தூக்கமும் வரல அதான் பார் அ சேஞ்ச் சமைக்கலாமேநு யூ டூயுப் பார்த்து சமைச்சுட்டு இருக்கேன்..நீ போய் குளிச்சுட்டு வா நா காபி சூடு பண்ணி தர்றேன்..

மறுப்பேதும் கூறாமல் குளித்து முடித்து வர கையில் காபியை நீட்டினான் ராம்..அமைதியாய் அவள் அதை வாங்கி பருக ராமிற்கு தான் மூளை வேகமாய் வேலை செய்தது..என்ன மகி ஏன் அமைதியாயிருக்க??

இல்லப்பா ஒரு வேளை நா அவசரபட்டுட்டனோ??என்றாள் பாவமாய்..

என்னது??????அடியேய் என்ன பாத்தா எப்படிடீ தெரியுது உனக்கு..உன்னால சும்மாவேயிருக்க முடியாத எப்போ பாத்தாலும் எதையாது யோசிச்சு யோசிச்சு இருக்குறவன கிறுக்காக்குறதே வேலையா போச்சு என பொரிந்து தள்ள..

சிரமப்பட்டு சிரிப்பை அடக்கியவள்..இல்ல ராம் ஒரு வேளை எனக்கு பழசு நியாபகத்துக்கு வந்தப்பறம் ஏன் இப்படி பண்ணீங்கநு கேட்டா?? பாவம் நீங்க என்ன பண்ணுவீங்க??

இப்போ கேளு இவ்ளோ தெளிவா…அம்மா தாயே நா என்னவோ பண்ணிக்குறேன் நீ எனக்காகலா ரொம்ப யோசிக்க வேண்டாம்மா..காபிய மட்டும் குடி..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.