(Reading time: 16 - 31 minutes)

லேசாய் புன்னகைத்தவள்..சும்மா கிண்டல் பண்ணேன்ப்பா அப்படிலா ஒண்ணும் யோசிக்கல என்றாள் அமைதியாய்..

எல்லாம் என் நேரம் என்றான் அவனும் சிறு புன்னகையோடு..

ஆங்ங் மகி உன்ட்ட முக்கியமா ஒரு விஷயம் சொல்லனும்..இன்னைக்கும் நாளைக்கும் கொஞ்சம் பிஸிடா..வர லேட்டாகும் லஞ்ச் கூட வர மாட்டேன்..நீ பத்திரமாயிரு என்ன..முடிஞ்ச அளவு சீக்கிரம் வர ட்ரை பண்றேன்டா சரியா..

ம்ம் சரிங்க அப்பப்போ கால் பண்ணுங்க..வெளிலயாவது எதாவது சாப்டுக்கோங்க..

ஏன் மகி அப்படி என்ன வேலைநு கேக்கனும்னு தோணலையா??

சொல்றதாயிருந்தா நீங்களே சொல்லிருப்பீங்களேப்பா..

கர்வமாய் ஓர் பார்வை ராமிடம்..தேங்க் யு குட்டிமா..கூடிய சீக்கிரம் எல்லாமே சொல்றேன் என நெற்றி மீது நெற்றி முட்டி சென்றான்..

அடுத்த அரைமணி நேரத்தில் ராமும் பரணியும் நின்றிருந்தது ACPயின் முன்..

ரியலி வெல்டன் கைஸ்..நீங்க மட்டும் இல்லனா இந்த கேஸை இவ்ளோ ஈசியா முடிச்சுருக்க முடியாது..நாளைக்கு அந்த மார்க் வந்து கையெழுத்து போட போற நேரம் அவங்க அத்தனை பேரையும் மொத்தமா அரெஸ்ட் பண்ணணும்..

எங்களை நம்பி இவ்ளோ பெரிய அஸைண்மெண்ட் குடுத்ததுக்கு உங்களுக்கு தான் சார் நாங்க நன்றி சொல்லனும்..-பரணி..

கண்டிப்பா நாளைக்கு எல்லாம் நல்ல படியா முடியும்..சார் அஸ் பெர் த ப்ளான் அந்த ஹோட்டல்க்கு நாங்க மொதல்ல மார்னிங்கே போய்ட்றோம்..அவங்க மீட்டிங் முடியுர வர வெய்ட் பண்ணலாம் பிகாஸ் அதுல கூட நமக்கு வேற டீடெய்ல்ஸ் எதாவது கிடைக்கலாம்..-ராம்..

யா யு ஆர் ரைட் ராம்..நாங்க அங்க பக்கத்துல தான் இருப்போம்..உங்ககிட்டயிருந்து இன்ஃபோ வந்த அடுத்த செகண்ட் எங்க ஆபிஸர்ஸ் அவங்களை ரவுண்ட் அப் பண்ணிடுவாங்க..

பட் ஒரு வேளை எங்ககிட்ட இருந்து எந்த தகவலும் வரலனா??-பரணி..

வாட் யு மீன்??

சார் பரணி சொல்ற பாய்ண்ட் கரெக்ட் தான்..அவங்களுக்கு இது முக்கியமான டீல் சோ ரொம்பவே அலார்ட்டா இருப்பாங்க..ஒரு வேளை அவங்க எங்கள பாத்துட்டா..நீங்க ரெடியா இருக்கனுமில்ல..நமக்கு கிடைச்ச இன்ஃபோ படி அவங்க மீட்டிங் டைம் மார்னிங் 11..சோ ஒரு ஒன் அவர் அவங்களை நாம ஒண்ணும் பண்ண வேண்டாம்..சோ 12 டு 12:10 குள்ள நாங்க உங்களை காண்டாக்ட் பண்ணலனா நீங்க ஸ்பார்ட்க்கு வந்துருங்க அதுக்கு மேல டிலே பண்ணா அவங்கள மிஸ் பண்ண சான்ஸ் இருக்கு..

ம்ம்ம் ஓ.கே ராம்…பட் மேக் ஷுவர் ஆப் யுவர் சேவ்ட்டி..அதான் ரொம்ப முக்கியம்..

டோண்ட் வொரி சார்..

அடுத்து வந்த நிமிடங்கள் அனைத்தும் பரபரப்பாய் கழிய மறுநாளைய விடியல் யாருக்கு எப்படி இருக்க போகிறதோ என்று மனம் கணக்கிட ஆரம்பீத்தது ராமிற்கு..பரணி சாக்ட்சியிடம் அனைத்தையும் கூறி பாதுகாப்பாய் இருக்க சொன்னான்..காலையில் தானே வந்து அவளை ராம் வீட்டில் விட்டுவிடுவதாய் கூறினான்..ராமோ மிக பெரிய குழப்பத்திலிருந்தான்..மகியிடம் கூறவா வேண்டமா என்ற மனபோராட்டம் மாலையிலிருந்து தொடர்ந்து கொண்டுதான் இருந்தது..அதே யோசைனையோடு வீட்டினுள் நுழைய மகியோ,

ராம் உங்களுக்கு ஒண்ணுமில்லைல..நா போன் பண்ணா ஏன் எடுக்கவேயில்லை நா எவ்ளோ பயந்துட்டேன் தெரியுமா..என அவன் முகத்திலிருந்து கால் வரை ஆராய்ந்தவாறே பதட்டமாய் கூற..இவளிடம் எதையும் கூற வேண்டாம் என்ற முடிவுக்கு வந்தான் ராம்..

ஹே குட்டிமா எனக்கு ஒண்ணுமில்லைடா என்னாச்சு ஏன் இவ்ளோ டென்ஷனாயிருக்க..போன் ஜார்ஜ் இல்லாம ஸ்விட்ச் ஆயிடுச்சு..மொதல்ல நீ இப்படி உக்காரு எப்படி வேர்க்குது பாரு..

சில நிமிடங்களில் சற்று அமைதியானவள்..இல்ல ராம் ஏனோ மனசே சரியில்லை..ஏதோ ஒரு படபடப்பு ஆனா எதுனாலநு தெரில..ஏதோ தப்பு நடக்க போகுதுங்கிற மாறியே மனசு அடிச்சுக்குது..

மகி இப்போலா நீ தேவையில்லாம உன்னை நீயே கஷ்டபடுத்திக்குற..அப்படிலா ஒண்ணும் ஆகாது வா மொதல்ல வந்து படு தூங்கி எழுந்தா எல்லாம் சரியாய்டும்..என ஒருவாறு அவளை சமாதானபடுத்தி தூங்க வைத்தவனுக்கோ தூக்கம் வர மறுத்தது..அப்படியே அமர்ந்து கட்டிலில் தலை சாய்த்து கண் மூடினான்..நாளைய பொழுது நல்ல படியா இருக்கனும் ஆண்டவா..எல்லா பிரச்சனையையும் நாளையோட முடிச்சுட்டு மகிய கூட்டிட்டு இங்கிருந்து போய்ரனும்..அங்க வேற டாக்டர்ஸ் யார்ட்டயாவது காட்டி என் மகிய பழையபடி மாத்தனும் என தன் நினைவுகளில் மூழ்கியிருந்தான்..

மறுநாள் மகியின் முகமே சரியில்லை..ஏதோ பேச வருவதும் பின் பேசாமல் இருப்பதுமாய் சுற்றி கொண்டிருந்தாள்..ராம் ரெடியாகி கிளம்பிய நேரம்,மகி சாக்ட்சி கொஞ்ச நேரத்துல வந்துருவா..எதை நினைச்சும் கவலபடாத இன்னையோட எல்லாத்துக்கும் ஒரு முடிவு கிடைச்சுரும் தைரியமாயிரு..கதவை பூட்டிக்கோடா என கூறி அவள் பேச காத்திராமல் சென்றுவிட்டான்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.