(Reading time: 17 - 33 minutes)

னக்கொன்னும் இல்ல கார்த்தி… நான் நல்லா இருக்குறேன்…”

“எங்க இருக்குற நீ?... இப்போ அத முதல்ல சொல்லு…”

“வீட்டுக்கு வந்துட்டேன்…”

“அப்போ என்னைக்கு அடிபட்டுச்சு?...”

“இரண்டு நாள் முன்னாடி….”

“வேணும்னே மறைச்சிருக்கல்ல?............”

அவன் பல்லைக்கடித்துக்கொண்டு கேட்க, அவள் பதில் பேசவில்லை…

“கொஞ்சம் கூட எங்கிட்ட சொல்லணும்னு உனக்கு தோணவே இல்லையாடா?....”

அவன் குரல் தளர்ந்து ஆதங்கத்துடன் ஒலிக்க, அவள் விழிகளில் நீர் திரண்டது…

“நிஜமாவே அடிபட்டு நின்னப்போ, உங்ககிட்ட பேசணும்னு தான் மனசு துடிச்சது…”

“அப்புறம் ஏண்டி பேசலை?...”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

மீராவின் "மருவக் காதல் கொண்டேன்..." - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்...

அவன் காதல் கலந்த கோபமாய் கேட்க, அவள் இதழ்கள் விரிந்தது….

“சொல்லுடி… கேட்குறேன்ல… ஏன் பேசலை?...”

“தெரியலை…”

“உன்னை…..” என கோபமாக கத்தியவன், உடனேயே, “வலிக்குதாடா ரொம்ப?... கை, கால் அசைக்க முடியுதாடா?...” என பரிவுடன் வினவ,

“கொஞ்ச நேரம் முன்னாடி வரைக்கும் வலிச்சது… ஆனா இப்போ வலிக்கலை….” என்றாள் அவள்…

“ஏன்?...”

“நீங்க என் பக்கத்துல இருக்கும்போது எனக்கு வலி தெரியலைம்மா….”

“லூசு….”

செல்லமாக கடிந்து கொண்டவனுக்கும் சிரிப்பு வர, மறுமுனையில் அவளும் சிரித்தாள்…

அவளைப் பார்க்க வீட்டுக்கு வர இருந்தவனை, அது, இது என்று பேசி தடுத்தாள் அவள் முடிந்த மட்டும்…

“விளையாடுறீயா நீ?... அடிபட்டிருக்கு… பார்க்க வரவேண்டாம்னு சொல்லுற?...”

“சொன்னா புரிஞ்சிக்கோங்க கார்த்தி… இப்போ வேண்டாம்… ப்ளீஸ்….”

“என்னமோ செய்… விடு….”

அவன் உண்மையாகவே கோபப்படுவதை அறிந்து கொண்டவள், அவனை சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கினாள்…

“கார்த்தி….”

“என்ன?.............”

“ஹ்ம்ம்… என் கார்த்திக்கு இந்த கோபமூஞ்சி நல்லாவே இல்ல… எப்பவும் கலகலன்னு கேலி பண்ணிட்டு சிரிச்சிட்டிருக்குற அந்த முகம் தான் நல்லா இருக்கும்… ப்ளீஸ்… சிரிங்க….”

“ரொம்ப முக்கியம் இப்போ… சும்மா இரு பேசாம….”

அவன் அவளை அதட்ட, அவள் மௌனமானாள்…

“எல்லாம் தன்னால் தான்…” என்ற எண்ணம் வந்ததும், கையில் அடிபட்டிருப்பது மறந்து தன் தலையில் அவள் அடித்துக்கொள்ள,

“ஆ……………..” என்று அலறினாள் அவள்…

“சகி…. என்னாச்சுடா?.... ரொம்ப வலிக்குதா?.....”

அவனின் அந்த வார்த்தைகள் போதுமானதாய் இருந்தது அவளது அனைத்து வலிகளையும் போக்க…

“சகி……” என்று அவன் அழைத்த நிமிடங்கள், தானாய் கண் முன் நினைவுக்கு வர, அவள் உள்ளம் நெகிழ்ந்தது…

“சொல்லுடி சகி… என்னாச்சு?...”

“ஒன்னுமில்ல கார்த்தி….”

“அப்புறம் ஏண்டி கத்துன?....”

“இல்ல தெரியாம கையை இடிச்சிகிட்டேன்… அதான்… வலிச்சிடுச்சு….”

“லூசு… பார்த்து செய்ய மாட்டியா எதையும்?... வலிக்குதாடா ரொம்ப?...”

“இல்லம்மா… இப்போ வலிக்கலை…”

“ஹாஸ்பிட்டல் போயிட்டுவா… நாளைக்கு…”

“கட்டெல்லாம் போட்டாச்சும்மா… நாளைக்கு ஆஃபீஸ் தான் போகணும்…”

“அடிவாங்காத எங்கிட்ட… ஆஃபீஸாம் ஆஃபீஸ்… ஒன்னும் போகவேண்டாம்… பேசாம வீட்டுல இருந்து ரெஸ்ட் எடு… எங்கயாவது கிளம்பினன்னு தெரிஞ்சது அவ்வளவுதான் சொல்லிட்டேன்….”

“என்ன இப்படி மிரட்டுறீங்க?...”

“நீ நாளைக்கு ஆஃபீஸ் போய் பாரு… அப்பத் தெரியும் உனக்கு நான் யாருன்னு?...”

அவனது கோபத்தினை அறிந்தவளாய், “சரி சரி… நான் போகலை… கோபப்படாதீங்க…” என அவள் கூற, அவனும் சரி என்றான்…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.