(Reading time: 20 - 40 minutes)

ணி அடித்தது போல் அவள் அதிர்ந்து நிற்க,

“உன்னை அடிச்சு, குத்தி, சுட்டு கொல்ல எல்லாம் எனக்கு விருப்பமில்லை… ஏன்னா அப்படி எல்லாம் செஞ்சா ஒரே அடியில, ஒரு குத்துல, ஒரே குண்டுல நீ செத்துடுவ… நீ அப்படி சாகக்கூடாது… கொஞ்சம் கொஞ்சமா நீ சாகணும்… அதை அவன் தூரத்துல இருந்து பார்த்தும் எதும் செய்ய முடியாம தவிக்கணும்…”

“நீ நினைக்கிறது எதுவும் நடக்காது… வீணா பகல் கணவு காணாத…”

‘யாரு நானா?... ஹ்ம்ம்… அது கனவாப்போகுதா?... இல்லை நனவா மாறுதான்னு நீயும் பார்க்கத்தானப் போற…”

“உன்னால அவரை எதுவும் செய்ய முடியாது… என்னையும் நெருங்கக் கூட முடியாது…”

“ஓ அப்படியா?... உன்னை நெருங்குறேன்… என்ன நடக்குதுன்னு பார்க்கலாம்…”

சொல்லிவிட்டு அவன் ஓரடி அவளை நோக்கி எடுத்து வைக்க,

“அங்கேயே நில்லு… இல்ல?.....”

அவள் குரல் அதிகாரத்தோடு ஒலித்தது சற்றும் பயமில்லாது…

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

அன்னா ஸ்வீட்டியின் "அதில் நாயகன் பேர் எழுது..." - காதல் கலந்த சரித்திர + குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்..

“இல்லன்னா என்ன பண்ணிட முடியும் உன்னால?... என்னை கொல்லப் போறீயா?... முடிஞ்சா கொல்லு… உன் கையால சாகுறது எனக்கு சந்தோஷமே…”

“உன் சாவு அவர் கையால தான்…”

“அப்படியா?... ஆனா அதுக்கும் முன்னாடி உன் சாவும், உன் ஜெய் சாவும் யார் கையாலன்னு தெரிஞ்சிக்க உனக்கு ஆசை இல்லையா?...”

அவன் சொன்னதும் அவனை எரித்து விடுவது போல் பார்த்தாள் சதி…

“அப்பா….. என்ன ஒரு கோபம்?.... ஹ்ம்ம்… ஆனா இந்த நெருப்பெல்லாம் என்னை எரிச்சு பஸ்பமாக்கிடாது… அதே நேரத்துல நான் வைக்கப்போற ஒரு நெருப்பு உன்னையும் சாகடிக்கும்… அவனையும் எரிச்சி சாம்லாக்கும்.. பார்க்குறீயா?...”

அவள் என்ன என்று யோசிக்கும் முன்பே, அவள் இருந்த அறைக்கதவை இழுத்து வெளியே பூட்டு போட்டு பூட்டினான் பைரவ்…

அவள் இருந்த இடத்தை விட்டு சற்றும் அசையாமல் மூடியிருந்த கதவின் மேல் தன் பார்வையை நிலைக்கவிட்டவள்,

“பரமேஷ்வரா… என்னவருக்கு எதுவும் ஆகக்கூடாது… நான் எரிந்து சாம்பலா போகணும் அப்படிங்கிறது தான் விதின்னா அது நடந்துட்டு போகட்டும்… நொடிக்கு ஒரு தரம், நானும் அதைத் தானே சொல்லிட்டிருந்தேன்… அவரை நான் சேர முடியலைன்னா என்னை நானே நெருப்புக்கு பலியாக்கிடுவேன்னு நான் தானே சொன்னேன்… நாம என்ன சொல்லுறோமோ அது தான நடக்கும்… இப்பவும் அதுதான் நடக்கப்போகுதா ஈசனே?....”

அவள் வாய்விட்டு இதை உரைத்து முடித்ததும், சத்தம் கேட்டு நிமிர்ந்து பார்த்தவளுக்கு இதழ்களில் ஒரு விரக்தி புன்னகை ஒன்று உதயமானது…

நெருப்பு வீடெங்கும் சூழ்ந்து அவளை விழுங்க தயாராக, அவளோ அந்த நெருப்பையே இமைக்காமல் பார்த்திருந்தாள்….

பிரம்மரிஷியின் கண்களுக்கு சதி நெருப்பை பார்ப்பது வரை மட்டுமே காட்சிகளாய் தெரிய, அதற்கும் மேல் சதிக்கு என்னாயிற்று என அவர் அறிய முற்பட்டும் அவரால் தெரிந்து கொள்ள முடியவில்லை கொஞ்சமும்…

எத்தனை தடவை அவர் முயற்சித்த போதும் அவரின் கண்களுக்குள் எதுவும் புலப்படாமல் போனது…

நெருப்பால் சதிக்கு ஆபத்து இருக்கிறது என்பதை அறிந்து வைத்திருந்தவருக்கு, அது சதியை என்ன செய்தது என அறியமுடியாது தவித்துக்கொண்டிருந்தார் அவர்…

சதியை சூழ்ந்த நெருப்பு அவளை தன்னகத்தே உள்வாங்கிற்றா?... எண்ணமிடவும் வலித்தது அவருக்கு… அது ஒருபுறம் இருக்கையில், இங்கே ஜெய்யின் நிலைமையோ அவருக்கு பயத்தை அளித்தது என்றே சொல்லவேண்டும்…

அதுவும் அவன் தற்போது கொண்டிருக்கும் கோலம் அவரை எழுந்து கொள்ளவே செய்துவிட்டது…

குமாரை விலக்கி வைத்துவிட்டு, சிவந்து நெருப்பைக்கக்கிக்கொண்டிருந்த விழிகளுடன் ஜெய், பைரவினை பார்க்க, எம்பெருமானையே ஒரு நிமிடம் கண் முன் பார்ப்பது போல் இருந்தது பைரவிற்கு…

“ச………………..தி………………………………………” என கத்தியவனின் குரல் நாலாபுறமும் இருந்து எதிரொலிக்க, அந்த சத்தம் பைரவிற்கு மரண பயத்தை கண் முன்னே கொண்டு வந்திருந்தது அந்நொடி…

தொண்டை அடைத்து நா வறண்டு போனவனாய் பைரவ் ஜெய்யைப் பார்க்க, அவனோ, அவனை சட்டென தூக்கினான் யாரும் எதிர்பாராத வகையில்…

அவனை தூக்கிய மறுகணமே காற்றைவிட வேகமாய அவன் சுழன்று கொண்டிருக்க, அவனை யாராலும் நெருங்க முடியவில்லை…

புழுதி எழுந்து வானை நோக்கி பறக்க, ஏற்கனவே இருண்டிருந்த வானம், இன்னமும் அதிகமாக கருமையாக மாற, ஒருவித மிரட்சி தெரிந்தது குமாரின் கண்களில்…

தலைக்கு மேலே பைரவினை தூக்கி சுற்றி ஜெய், அவனை தூர வீசி எறிந்ததும்,  

“பை………………ர……….” அதற்கு மேல் கத்தக்கூடாது தெம்பு இல்லாது அப்படியே அவனை வீசி எறிந்த திசைக்கு ஓடினான் குமார்…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.