(Reading time: 12 - 24 minutes)

19. பைராகி - சகி

bhairagi

ன்று சிவராத்திரி!!

சிவனுக்கு உகந்த இரவுப்பொழுது!!மாலை நேர சூரியன் அஸ்தமிக்க,அஸ்தமிக்க யாத்ராவின் இதயத்துடிப்பு எகிறியது.

படர்ந்து விரிந்த அந்த வில்வ மரத்தின் முன்னால் நிலம் உதித்த ஈசனின் முன் கரம் கூப்பி அமர்ந்தாள் அவள்.எதிரில் தீப ஔியில் அவ்விடமே பிரகாசித்தது.

இன்னும் சில மணிநேரங்கள் தான்!மறுநாள் சூரிய உதயம் அவளது அனைத்து இன்னல்களுக்கும் முடிவினை கட்டிவிடும் என்றே எண்ணம் கொள்வோம்!!இறைவன் விதியை தான் மாற்றி எழுதுவாரா??வகுக்கப்பட்ட அனைத்தும் முறை மாறுமா??காலம் தான் வேண்டுதலுக்காக சுழலாமல் நிற்குமா??

"கௌரிக்கா!கொஞ்சம் வெளியே போயிட்டு வரேன்!யாத்ரா பூஜையை முடிச்சிட்டான்னா சொல்லிடுக்கா!"

"தம்பி!இன்னிக்கு எங்கேயும் வெளியே போகாதே!யாத்ராம்மா உன்னை எங்கேயும் அனுப்ப கூடாதான்னு சொல்லிடுச்சு!"

"ஐயோ!நான் வந்துடுறேன்கா!ம்..அரை மணி நேரத்துல வந்துடுவேன்!"

"இல்லைப்பா!"

"வந்துடுவேன்கா!பயப்படாதீங்க!"

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சகியின் "நிர்பயா" - சமூகத்தில் நடக்கும் அநியாயங்களை தட்டிக் கேட்கும் பெண்ணின் கதை...

படிக்க தவறாதீர்கள்..

"சீக்கிரம் வந்துடுப்பா!"

"சரிக்கா!"-என்றவன் பயணித்தது அந்த மகேசனை காண இருண்ட அந்த வனத்திற்கு!!!

முன்பை போல் அல்லாமல் அந்த பட்டை மரங்கள் யாவும் அந்த சில மாதங்களில் வெட்டி வீழ்த்தப்பட்டு விட்டன...இவனது முயற்சியால்!!அதாவது,அந்த கோவிலை சீராக்க என்றோ தான் யாரென்று உணர்ந்த காலத்திலே அவன் அனுமதி பெற்று அப்பணியை ஆற்ற ஆரம்பித்திருந்தான்.இன்னும் சில காலங்களில் அந்த ஆலயத்தின் மேல் படிந்த சாபம் விலகிவிடும்!!

மௌனமான அந்த புற்தரையில் அவனது காலடி சப்தம் பலமாகவே கேட்டது.

அதே கம்பீரம்!!அன்று தனதிரு கரங்களால் வடிவம் பெற்ற கம்பீரம்!இத்தனை ஆண்டுகளாய் இம்மண்ணில் பூஜிக்கப்படாத கம்பீரம்!இனி,அந்நிலை இருக்காது.கூடிய விரைவில் புத்தொளி நல்க போகிறது அந்த தெய்வீகம்!!

நீண்ட நேரமாய் அந்த தெய்வீகத்தையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான் அவன்.

கண் எதிரே பழம் கதைகள் யாவும் தோன்றி மறைந்தன.

எதேதோ சிந்தித்தப்படி சூழ்நிலையை மறந்தவனின் தலையை தாக்கியது அந்த பலமான இரும்பு கம்பி!!!

"க்கா!அவர் எங்கே?"

"தம்பி இதோ வந்துடுறேன்னு சொல்லிட்டு போச்சும்மா!"

"என்ன?எப்போ போனார்?"

"ஒரு மணி ஆகுதும்மா!"

"எதுக்குக்கா அவரை அனுப்புனீங்க?"

"நான் சொன்னேன்மா!ஆனா..."

-யாத்ராவின் கவலை உச்சத்தை தொட,ஆதித்யாவின் கைப்பேசிக்கு அழைப்பு விடுத்தாள்.

'ஸ்விட்ச் ஆப்!' பதில் உரைத்தது அவள் கைப்பேசி.

"கடவுளே...!எங்கே போனார்?!"அவள் மனம் பதறி போனது.

மயக்கத்தில் இருந்து கண் விழித்தான் ஆதித்யா.தலையில் பயங்கர வலி!!பார்வைக்கு உட்பட்டவை யாவும் மங்கலாக தோன்றியது.கண் இமைகளை திறக்க முடியாமல் அவன் திறக்க அவன் எதிரே காரில் ஒய்யாரமாக அமர்ந்திருந்தான் ராகவ்.

"என்ன ஹீரோ?யாருன்னு அடையாளம் தெரியுதா??"

"..................."

"நான் கொஞ்சம் கூட எதிர்ப்பார்க்கலைடா!மறுபடியும்,நாம சந்திப்போம்!பல வருஷத்துக்கு முன்னாடி நிறுத்தி வைக்கப்பட்ட விளையாட்டு மறுபடியும் அதே இடத்துல இருந்து தொடங்கும்னு!"

"..................."

"என் கையால சாகணும்னே மறுபடியும் பிறந்து வந்தியா?கவலைப்படாதே..!உன் ஆசையை இன்னிக்கே நிறைவேற்றுகிறேன்!எனக்கு ஒரு சின்ன குறை இருந்தது.அந்த குறையை என் கையால உன்னை கொன்னு இன்னிக்கு தீர்த்துக்கிறேன்!"-என்று மீண்டும் அவன் தலையில் இரும்பால் ஓங்கி அடிக்க ஆதித்யா கீழே விழுந்தான்.

"டேய் தூக்குங்கடா!என்ன இருந்தாலும் என் தம்பியாச்சே!சீக்கிரமே முடிச்சிடுறேன்.வலி தாங்க மாட்டான்!"-என்ற ராகவின் ஆணையை ஏற்று அவனை தூக்கினர் அவன் ஆட்கள்!!

நஞ்சு தடவிய கத்தி ஒன்றை எடுத்து வந்தவன்,அதன் கூர்மையை பரிசோதித்தப்படி ஆதித்யாவை பார்த்து புன்னகை பூத்தான்.

"அவ பெயர் என்ன?ம்..யாத்ரா!"

"..............."

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.