(Reading time: 12 - 24 minutes)

"டடா!நல்ல செய்தி சொன்னீங்க!இனி,தம்பிக்கு எந்த குறையும் வராது!எப்போ ஈசனோட கோவில் கட்டி வழிப்பட்டாரோ அவரை பிடித்த அத்தனை தோஷமும் விலகிப்போயிடுச்சு!"

"நல்ல வார்த்தை சொன்னீங்க!பத்திரிக்கையை வைத்து பூஜை பண்ணி தாங்க!"

"கொடுங்கம்மா!"-அர்ச்சகர் அந்த தாம்பூல தட்டை வாங்கி சென்றார்.

அங்கே...!

அந்த ஆலயத்தை சுற்றி இருந்த திகிலூட்டும் பட்டு போன மரங்கள் யாவும் அகற்றப்பட்டு,அவ்விடமும் ஆலயமாகி இளவரசர் தனதிரு கரம் கொண்டு செதுக்கிய சிவலிங்கம் வழிப்பாட்டிற்குரிய தெய்வமாகி போனது.

அந்தப் பரம்பொருளை கரம் கூப்பி வணங்கிக் கொண்டிருந்தனர் ஆதித்யாவும்,யாத்ராவும்!!

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

பிந்து வினோத்தின் "என்றென்றும் அன்புடன் - 02..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்க தவறாதீர்கள்..

"எத்தனை வருடம்!உங்களுக்கான ஆராதனையை உங்களுக்கு கொடுக்கறதுக்குள்ள எத்தனை சோதனை!கடைசியா,என் தவம் பூர்த்தியானது!!உங்களோட ஆசி இல்லைன்னா இது சாத்தியமாகி இருக்காது."-மனதுள் வேண்டினான் அவன்.வழிப்பாடு முடிந்து இருவரும் வெளிவர,சில அடி தொலைவினில் அவர்களை வரவேற்றது பைராகி நதி!!

யாத்ராவின் பாதங்கள் தன்னிச்சையாக அந்நதியை நோக்கி நகர தொடங்கின.அந்நதியை காணும் சமயத்தில் மனதுள் ஒரு வித புத்துணர்வு தோன்றிவிடும் அவளுக்கு!!அந்நதிக்கரையில் அமர்ந்தாள் அவள்.சற்று தூரத்தில் மொட்டவிழ்ந்திருந்த கமலங்கள் அவளது கவனத்தை ஈர்க்க,அதிலிருந்து ஒரு தாமரையை எடுத்து அதனோடு மௌன சம்பாஷணை நிகழ்த்திக் கொண்டிருந்தாள் அவள்.

"என்ன மேடம்?என்ன யோசனை?"

"ஆ..!ம்ஹூம்!"-அவன் அவளருகே அமர்ந்தான்.

"பல கால கனவு!இந்த நதிக்கரையில் உன் கூட தனிமையில உட்கார்ந்திருக்கணும்னு!ரொம்ப காலம் கழித்து இன்னிக்கு நிறைவேறி இருக்கு!"

"ம்...இந்த ஊருக்கு வந்தே 6 மாசம் தான் ஆகுது!அதுக்குள்ள ரொம்ப நாள் கனவா?"-ஆதித்யா அவளை ஆழமாக பார்த்தான்.

"உனக்கு புரியாது!உனக்காக எத்தனை வருடமா காத்துட்டு இருக்கேன்னு உனக்கு தெரியாது!நீ இல்லாம எவ்வளவு வேதனைகளை அனுபவித்தேன்னு உனக்கு புரியாது!"-அவன் கூறியதன் இரகசியம் அவளுக்கு புலப்படவில்லை.

"என்னங்க!"-நதியை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தவனின் தோளின் மீது கை வைத்தாள் யாத்ரா.

"ம்..!"

"என்னாச்சு?"

"கிளம்பலாமா?"

"ம்..!"-இருவரும் எழுந்து கிளம்பினர்.அவர்கள் செல்வதையே ஆனந்தமாக மிதமான சலனத்தோடு பார்த்துக் கொண்டிருந்தது பைராகி நதி!!!

முற்றும்!

Episode # 18

{kunena_discuss:969}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.