(Reading time: 7 - 13 minutes)

நேரங்கள் கடக்க மெல்ல சிறு உஷ்ணத்தை அவளது விரல்களில் உணர்ந்தான் ஜோசப்.

மனம் தன்னில் சிறு தடுமாற்றம்!!எனினும் உண்மையை அவன் விலக்க எண்ணவில்லை.மீண்டும் சில நிமடங்களில் சிறு அசைவு!!சட்டென நிமிர்ந்து பார்த்தான்.அவள் அசையவில்லை.

அவளது நெற்றியை தொட்டு பார்த்தான்.சூடாக இருந்தது.

இறந்த சடலத்தில் எவ்வாறு வெப்பம் தங்க இயலும்??

அடுத்த சில நொடிகளில்...

பீப் என்ற சத்தத்துடன் விழித்துக்கொண்டது அந்த இதயத்துடிப்பை அளவிடும் கருவி!!பெருமூச்சுடன் விழித் திறந்து மூடினாள் நிர்பயா.

சில நொடிகள் ஒன்றும் புரியாமல் ஸ்தம்பித்து போனான் அவன்.

அடுத்த நொடி அவளிடம் சிறு அசைவு!!

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

பிந்து வினோத்தின் "என்றென்றும் அன்புடன் - 01..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்க தவறாதீர்கள்..

"அம்மூ...!"-சப்தம் கேட்டு ஓடி வந்தார் மருத்துவர்.அதுவரை விழிகள் காணும் காட்சி பிரமை என்று எண்ணியவன்,

"நர்ஸ்!ஆப்ரேசன் தியேட்டரை ரெடி பண்ணுங்க!"-என்ற குரலில் உண்மையை உணர்ந்தான்.

டுத்த சில மணித்துளிகளில் அனைத்தும் பரபரப்பானது.

கண் இமைக்கும் நேரத்தில் நிகழ்ந்த யாவும் மாயையாக தோன்ற,சிலையென நின்றிருந்தனர் அனைவரும்!!

"டாக்டர்?"

"இது உண்மையிலே அதிசயம் சார்!இதயம் நின்று பதினைந்து நிமிடம் கழித்து மறுபடியும் துடிக்க ஆரம்பித்திருக்கு!எங்களுக்கே ஷாக்கிங்கா இருக்கு!எதுவாக இருந்தாலும் ஆப்ரேஷன் முடித்துவிட்டு சொல்றோம் சார் ப்ளீஸ்..!"-என்று அறுவை சிகிச்சை பிரிவின் உள்ளே நுழைந்தார் மருத்துவர்.

ஐந்தரை மணிநேரம்...

முழுதாக ஐந்தரை மணிநேரம்...

காலம் கடந்தப்பின் வெளியே வந்தார் மருத்துவர்.

"ஷி ஹேவ் ரியல் கரேஜ்.மரணத்தையே எதிர்த்து ஜெயித்திருக்காங்க!இனி எந்தப் பிரச்சனையும் இல்லை.வார்டு மாற்றினதும் நீங்க போய் பார்க்கலாம்!ஆல் தி பெஸ்ட்!"

"தேங்க்யூ டாக்டர்!"

"நன்றியை அந்தக் கடவுளுக்கு சொல்லுங்க!"-என்றவர் புன்னகைத்தப்படி சென்றார்.

றைவன் முன் குவித்த தன் கரத்தை பல்லவி இறக்கவில்லை.

எதிரே,சக்தி ஈந்த வேல் ஏந்திய இறைவன் சுப்பிரமணியனின் சிலையின் முன்னே கரம் குவித்தப்படி அமர்ந்திருந்தார் அவர்.

"முருகா!எனக்கு இருக்கிற ஒரே ஆறுதல் நீ தான்!என் பொண்ணை காப்பாற்று!அவளுக்கு எதுவும் ஆக கூடாது!என் பொண்ணு திரும்பவும் வரணும்!என் மகளை காப்பாற்று முருகா!"-மனமுருக வேண்டினார் அவர்.

"முக்கிய செய்தி: மாவட்ட ஆட்சியர் நிர்பயா உயிர் பிழைத்தார்.இதயத்துடிப்பு நின்று பதினைந்து நிமிடங்கள் கழித்து புணர்ஜென்மம்!!மருத்துவர்கள் வியப்பு!!"-என்றது தொலைக்காட்சி.

செவிகளில் விழுந்த தேனமுதை கேட்டு கூடத்திற்கு ஓடி வந்தார் பல்லவி.

கண்களில் கண்ணீர் ஆறாய் பெருக்கெடுக்க செய்வதறியாது திகைத்து நின்றார் அவர்.

உயிர் பிழைத்த சமயத்திலும் இன்னும் அவள் நேத்திரம் திறக்கவில்லை.மயக்கத்திலே இருந்தாள்.அவள் மனம் இனி அஞ்சாத வண்ணம் அவள் கரத்தை தன் கரத்தோடு பிணைத்து அவளுக்கு பாதுகாப்பை உணர்த்திக் கொண்டிருந்தான் ஜோசப்.

"எப்படி பயமுறுத்திட்ட நீ?உனக்கு என்ன இதில் சந்தோஷம்?செத்து பிழைத்தது நீ மட்டுமில்லை நானும் தான்!இனி,உனக்கு எந்த விதத்திலும் கஷ்டம் வர விட மாட்டேன்.நீ என்னுடையவள்!எனக்கு சொந்தமானவள்.யாராலும் என்கிட்ட இருந்து உன்னை பிரிக்க முடியாது.ஐ லவ் யூ அம்மூ!"-என்றவன் அவளது நெற்றியில் மென்மையாக முத்தமிட்டான்.அந்த ஆழ்ந்த மயக்கத்திலே அவளது பிடி இறுகியது.

"ஜோசப்!"

"வாங்க தாத்தா!"

"நீ வீட்டுக்கு போய் கொஞ்சமாவது ரெஸ்ட் எடுப்பா!"

"இல்லை பரவாயில்லை தாத்தா!நான் அம்மூக்கூட இருக்கேன்."

"4 நாளா நீ சரியா தூங்குறதே இல்லை...நீ போப்பா!"

"இ..ல்லை!"-அவன் ஏதோ காரணத்தை அவரிடம் சொல்ல முடியாமல் திணறினான்.அது வைத்தியநாதனுக்கு புரிந்திருக்கலாம்!

"சரி...நீ இரு!நான் காலையில சீக்கிரம் வந்துடுறேன்!"

"சரி தாத்தா!"-என்றவனின் மனதில் நிம்மதி!!

மனம் கொண்டவளுக்காக,அவளோடு நேரத்தை செலவிடும் சமயம் எழும் நிம்மதி!!

தொடரும்

Episode # 13

Episode # 15

{kunena_discuss:1030}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.