(Reading time: 7 - 13 minutes)

14. நிர்பயா - சகி

Nirbhaya

றைவனை பொருத்தவரையில் பெண்மை என்பது இரண்டாவது பாலினம் மட்டுமன்றி,தனித்துவம் பொருந்திய தெய்வீகமாகும்.எந்த ஒரு இறைவனும் பெண்மையை அடிமையாக எண்ணியதில்லை.அதனால்,அவன் பெண்ணினை சக்தி வடிவமாக மண்ணில் படைத்தான்.அவளுக்கு உலக உயிர்களை ஸ்ருட்டிக்கும் மாபெரும் பொறுப்பை அளித்தான்.ஒருவேளை,இந்த சமூகத்தின் எதிர்கால அமைப்பை அவன் முன்னரே அறிந்திருந்தால்,விண்ணுலகிலே பெண்மையை தக்க வைத்திருப்பான்.மனிதக்குலம் தனது மற்றொரு பாகத்தை தெளிவாக அழித்துக் கொண்டிருக்கிறது.மனிதனின் எண்ணங்களில் பெண்ணாகப்பட்டவள் இச்சூழலில் வெறும் பொம்மை!உயிருள்ள பொம்மை!(அனைவரையும் குறிப்பிடவில்லை.)இதையெல்லாம் படிக்கும் மாத்திரத்தில் என் மீதும் தவறான அபிப்பிராயம் பலருக்கு வருவது இயற்கை!!இவளும் பெண் தானே,அதனால் தான் பெண்ணியம் பிதற்றுகிறாள் என்றெல்லாம் வசைகள் மறைமுகமாக எனை அடையும் அதில் ஐயமில்லை.

ஆனால்,அவர்களிடம் கேட்கவே சில வினாக்கள் உண்டு....

1.உண்மையில் இந்த சமூக அமைப்பு சீராக உள்ளதா??

2.வலைத்தளங்கள் முதலில் இருந்து காணும் திரைப்படங்கள்,தொடர்கதைகள் வரை ஐம்பது சதவீதமாவது பயனுள்ளவையாக இருக்கிறதா?

3.திரௌபதியானவள் ஐந்து ஆண்மகனை கணவனாக ஏற்றவள் என்றும் பழிக்கும் இந்த சமூகம் அதன் ஆணிவேரை ஆராயமல் விடுத்ததன் காரணம் அறியவே விழைகிறேன்!!

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

பிந்து வினோத்தின் "என்றென்றும் அன்புடன் - 02..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்க தவறாதீர்கள்..

4.குழந்தைகள் என்பவர்கள் இறைவனின் பிரதி பிம்பம் ஆவர்!ஆனால்,இன்று இருக்கும் பிஞ்சுகளின் நெஞ்சத்தில் நஞ்சினை விதைத்தவர் யார்??

5.பெண்ணாகப்பட்டவள் முழுதுமாக சுயநலவாதியா?இல்லை...சுயநலவாதியாக வாழுவதற்கு அவள் கட்டாயப்படுத்தப்படுகிறாளா??

விடை தெரிந்தால்,கட்டாயம் கூறுங்கள்..நினைவு தெரிந்த நாள் முதல் இதற்கான விடைகள் என்னிடம் சிக்க மறுக்கின்றன...

"ஸாரி சார்!அவங்க இறந்துட்டாங்க!"-மருத்துவர் பெரும் இடியை தலையில் தூக்கிப் போட்டார்.

"டாக்டர்?"

"நாங்க ரொம்ப போராடினோம் சார்!ஆனா,அவங்க மனசுல வாழணும்னு துளிக்கூட ஆசை இல்லை!வி ஆர் ஸாரி!"-கையை விரித்துவிட்டு அவர் அமைதியாக சென்றுவிட்டார்.

ஜோசப் ஆடிப்போய் அமர்ந்துவிட்டான்.அழுவதற்கும் அவனிடம் சக்தி இல்லை.

"அண்ணா!"

"ஜோசப்!"-ஒருவரது சமாதானமும் அவனுக்கு கேட்கவில்லை.

வைத்தியநாதன் நிர்பயாவின் சரீரத்தை காண சென்றார்.இதயத்துடிப்பை அளவிடம் கருவி மொத்தமாக நின்றிருந்தது.

"ஐயோ!இதுக்காகவாம்மா உன்னை வளர்த்தேன்?இதைப் பார்க்கவா அந்த ஆண்டவன் என்னை விட்டு வைத்திருக்கான்?அவனுக்க கண்ணே இல்லை.அவன் ஒரு பாவி!"-இயன்றவரை இறைவனை பழித்தார் அவர்.

"இல்லை...நீ திரும்ப வரணும்!நீ சாதாரண வாழ்க்கையை வாழப் பிறக்கலை.மற்றவங்களுக்கு ஒரு வழிக்காட்டியா நீ திரும்ப வரணும்!உன்னை அழிக்க நினைத்தவங்க நடுங்குற மாதிரி நீ வரணும்!வாம்மா..!திரும்ப வா!என் நம்பிக்கையை உடைக்காதே!வைராக்கியத்தை கை விடாதே!என்னைப் பாரு..!"-கல்மனமும் கரையும் படி அழுதார் அவர்.

"என்னங்க?"-பார்வதியின் குரல் அவரை உலுக்கியது.

"என் ஹனி..!"

"அழாதீங்க!"-எவ்வளவோ தேற்றிப் பார்த்தார் பலனில்லை.

மெல்ல கதவு திறக்கும் சப்தம் கேட்டு திரும்பினர் இருவரும்!!

மனம் வென்றவள் சடலமாய் கிடக்க,சவமாய் அங்கு வந்தான் ஜோசப்!!

"ஜோசப்!"

"நான் கொஞ்சம் தனியா இருக்கணும் தாத்தா!ப்ளீஸ்...."-அவனது மனவலி அவர்களுக்கு புரியாமல் இல்லை.அவனை சமாதானம் செய்யும் உபாயம் அறியாமல் வெளியேறினர் இருவரும்!!

தன் சகத்தின் அருகே அமர்ந்தவனின் விழிகள் கசியந்துருகின.

"இதற்காகவா மீண்டும் வந்தேன்?இதற்காகவா எனை வர கூறினாய்?நான் என்ன தவறிழைத்தேன்?எனை எதற்காக தண்டித்தாய்?எந்த ஆனந்தத்தை நீ எனக்களித்தாயோ,அதை எந்த நியாயத்தின் அடிப்படையில் பிரித்தெடுத்தாய்?யாரை கேட்டு எனை நீங்க துணிவு கொண்டாய்?நீ இல்லாமல் எப்படி வாழ்வேன்?உனக்காக தானே வந்தேன்?"-மௌனமாக கண்ணீர் வடித்தான் அவன்.அவளிடம் அசைவில்லை.

ஜோசப் தன் பாக்கெட்டில் இருந்து ஒரு சிறு பெட்டியை எடுத்தான்.

அதிலிருந்து ஒரு மோதிரத்தை வெளியே எடுத்தான்.

"நம்ம கல்யாணத்துக்காக வாங்கினேன்!உன் நினைவுகளை தவிர உன் சம்பந்தப்பட்ட பொருள் எதுவும் எனக்கு சொந்தம் இல்லைன்னா இது மட்டும் ஏன் இருக்கணும்?உனக்கே தந்துவிடுகிறேன்!"-என்றவன் அதை எடுத்து அவளது மோதிர விரலில் அணிவித்தான்.

"லவ் யூடி!"-அவனால் அடுத்த வார்த்தை உதிர்க்க முடியவில்லை.அவளது கரத்தை தன் நெற்றியில் ஒற்றி அழ ஆரம்பித்தான்.

(ச்சே..!கல் மனம் படைத்த இறைவன்!)

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.