(Reading time: 48 - 95 minutes)

ப்போது விவனுக்கு பசி தெரிந்தது…..வாட்சை திருப்பி மணி பார்த்தான்….சப்பாட்டு நேரம் கடந்து போயிருந்தது….

‘ ரியு பசில இருக்காளோ…..? ஓ பசியில தான் அவளுக்கு இவ்ளவு கோபம் வருதா…? கன்சீவாகி இருக்கப்ப பசிச்சா ரொம்ப கஷ்டமா இருக்கும்னு சொல்வாங்கல்ல….. ‘ இவன் மனம் சடசடவென அவளுக்காக இரங்க

இத்தனை நேரத்துக்குள் சற்று தணிந்திருப்பாள் என்ற நம்பிக்கையில்

“ரியு என்ன சாப்டுறமா?...” என அடுத்து அவன் கேட்கும் போது அதில் அவனது வழக்கமான இதம் கெஞ்சல் கொஞ்சல் எல்லாம் கலந்தே இருந்தது…… ஆனால் ‘டைம் ஆகிட்டு பக்கத்துல ஹோட்டல் போலாமா?’ என தொடர்ச்சியாய் அவன் கேட்க நினைத்ததை கேட்கும் முன்னும் வெட்டி வெடித்துக் கொண்டு வருகிறது ரியாவின் வார்த்தை..

“தெரியாது…..!!!!”

“ எனக்கெல்லாம் ஒன்னும் வேண்டாம்….!!!!”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ஜான்சியின் "அமிழ்தினும் இனியவள் அவள்..." - அவனுக்கு அவள் கிடைப்பதற்கரிய அன்புச்சுரங்கம் அவளுக்கோ அவன்...?

படிக்க தவறாதீர்கள்..

அவள் அதை  அடமென்ட்டாய் கத்தி சொன்ன விதத்தில் காரை ரோட்டின் ஓரமாக நிறுத்திவிட்டான் இவன்.

அதோடு “ரியுமா….ஐ’ம் வெரி சாரி…. நான் என்ன செய்தது உனக்கு பிடிக்கல..…ஏன் இவ்ளவு கோபபடுறன்னு எனக்கு தெரியல…. ஸ்டில் தப்பு என்னோடதுன்னா ஐ’ம் சாரி….” என அவன் சரண்டரின் சர்வ லட்சணங்களுடன்  இவள் கண்ணோடு கண் பார்த்து சாரியும் கேட்டான்…

கூடவே “கோபத்த சாப்பாட்ல காமிக்காத ரியு…” என ஒரு ரிக்வெஸ்ட் வேறு…..

அவ்வளவுதான் அவ்வளவேதான்….. நீ லவ் பண்ணாட்டாலும் நான் உன்ன லவ் பண்ணுவேன்டா….. என நினைத்து வைத்திருந்தவளின் மனம் இங்கு சாஷ்டாங்கமாய் தலை குப்புற விழுந்தது தன்னவனிடம்….

‘எதுக்கு இப்ப நான்  கோபபட்டுட்டு இருக்கேனாம்…? பாவம் அவன்….உண்மையிலேயே அவன் என்னதான் தப்பா செய்துட்டான்….? காலைல இருந்து எனக்கு என்ன பிடிக்கும்…..எது செய்தா நான் சந்தோஷமா இருப்பேன்னு என்னையவே சுத்தி சுத்தி வந்துறுக்கான்…..’ அவன் மேல் அத்தனை அத்தனையாய் உருகியும் போனாள்….

கூடவே ‘ஆனா நான் என்ன செய்துட்டு இருக்கேன்….. என் மூட் ஸ்விங்கிற்கெல்லாம் அவன போய் காஞ்சுகிட்டு இருக்கேன்…. பாடா படுத்துறேன்…’ என குற்ற மனப்பான்மையும் தலை தூக்க….

இப்பொழுது வெகு பரிதாபமாய் அவனைப் பார்த்து… “சாரிப்பா…. ரொம்பவும் சாரி….  பசிக்குது…..ஆனா நிஜமா என்ன சாப்டன்னே தெரியலை….. இட்லி சாப்டனும் போல இருக்கு…..” என உண்மையில் அவளுக்குள் அரங்கேறிக் கொண்டிருந்ததை சொன்னாள்….

அவளது  சாரிப்பாவில் இருந்த அன்யோன்யம் மைசூர்பாவாய் அவன் மனதில் கரைய அதையும் தாண்டி ‘இந்த நேரத்தில் இட்லியா….? அது எங்க கிடைக்கும்..? என்ற ரேஞ்சில் விவன் அந்த நொடியே யோசிக்க தொடங்க….இவளோ….

“ஆனா இட்லி மாதிரி அது ட்ரையாவும் இருக்க கூடாது…..கொஞ்சம் வெட்டா வேணும் போல இருக்கு….” என இன்னும் பரிதபமாக தலையை ஆட்டி உதடு பிதுங்க மீதியை தொடர…...இப்போது அவன் ‘ஹான்’....

”அது இனிப்பாவும் இருந்தாதான் நல்லா இருக்கும்  போல இருக்கு….” அவளோட டிஸ்க்ரிப்ஷன் ஃபார்  ஃபூட் இன்னும் தொடர….

இப்ப விவன் ‘பே’…

இனிப்பா ஈர இட்லிக்கு எங்க போகனும் மக்களே…???

“அதான்…..எனக்கு நிஜமா என்ன சாப்பாடு வேணும்னு சொல்ல தெரியல……” பரிதாபமாய் தன் நிலையை சொன்ன அவனது ரியு…… “வயித்ல இருக்க உங்க பாப்பா என்ட்ட ரொம்ப இப்டி விளையாடுது” என அதே பரிதாப பாவத்தோடு சொல்லி முடித்தாள்….

சாப்பாடைப் பற்றி அவள் பேசியதை கேட்டு என்ன சொல்வதென தெரியாது திகைத்திருந்த  விவனுக்கு அவளது கடைசி வரி எப்படி இருக்கிறதாம்…. ?

வெடித்து கிளம்புகிறது எதோ ஒரு  சிலீர் களேபரம் அவன் உள்ளும் புறமும்….. ரத்த நாளங்கள் எங்கும் மெத்த சுகசாம்ராஜ்யம்…. கர்வம்?!

 ஆண் என்ற நிலையிலிருந்து தந்தை எனும் ஸ்தானத்துக்கு இடம் பெயரும் மனோற்பவம்….. ஆயிரம் கிளைபரப்பி தனக்கானதை தற்காக்க துடிக்கும் தலைமைத்துவம் தாள் முதல் தலை வரைபட்ட எல்லையெங்கும்…..உற்சவம்

மனைவி கருவுற்றிருக்கும் செய்தியை முதன் முதலாக அறியும் கணவனது மனநிலைக்கு போனான் அவன்….….

 குழந்தையை எப்போதோ மனதளவில் அவனதாய் அவன் தத்தெடுத்திருந்தான்தான்….. ஆனால் இந்நொடி அது தத்துக் குழந்தை என்பதுதான் மறந்து போகிறது…..

சொல்லிவிட்ட ரியாவுக்குமே இது என்னதாய் இருக்கிறதாம்? எதோ ஒரு வேகத்தில்…. இப்படி பேசினால் விவனுக்கு பிடிக்குமே என்ற ஏதோ ஒரு புரிதலிலோ..… ஹர்ட் ஆகி இருக்கும் அவனை சந்தோஷபடுத்திவிட வேண்டும் என ஒரு ஃப்ளோவிலோ சொல்லிவிட்டாளே தவிர…..

சொன்ன பின்தான் தன் வாயிலிருந்து தன் காதில் விழுந்த அவ்வார்த்தையை உணர்ந்தாள் அவள்…. அவள் இதயத்தில் ஆயிரம் ஆயிரம் இலகு நிலையையும், விவனோடு இன்னுமாய் ஒரு நெருங்கிய பிணைப்பையும் அழகாய் உற்பத்திவிக்கிறது அது….. சட்டென எங்கும் சூழ்கிறது நிம்மதி பெருங்கடல்….

விவனை காதலனாய்……கணவனாய் கூட அவள் உணர்ந்ததுண்டு…..ஆனால் இந்நொடி ஒற்றை மனிதனான அவனை தன் மொத்த குடும்பமாய் உணர்ந்தாள் பெண்….. மிதந்தாள்…

ஸ்கேன் பொழுதில் இவள் தவித்த காரணமும் கூட இப்போது புரிகிறது……

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.