(Reading time: 48 - 95 minutes)

18. அதில் நாயகன் பேர் எழுது - அன்னா ஸ்வீட்டி

ANPE 

டுத்து கைனகாலஜிஸ்ட் அப்பாய்ண்ட்மென்ட்…  விவன் செயலிலோ அல்லது அவனைப் பற்றிய இவளது முடிவிலோ என்னவோ ஓரளவு இயல்பாகியே இவள் உள்ளே செல்ல…..டாக்டரது ரூமுக்குள் போனதிலிருந்து டாக்டர்ருடன் பேசும் மொத்த வேலையையும் விவனே எடுத்துக் கொண்டான்…..

“எங்க ரெண்டு பேர் சைடும் பெரியவங்க யாரும் கிடையாது டாக்டர்….இது எங்க ஃபர்ஸ்ட் பேபி….கண்டிப்பா ரொம்ப அன்ஸியஸா இருக்குது….ஒவ்வொன்னுக்கும் சின்னது பெருசுன்னு எல்லா விஷயத்துக்கும் நாங்க உங்களத்தான் கேட்போம்….தயவு செய்து தப்பா எடுத்துகாம நீங்க தான் ஹெல்ப் பண்ணனும்….” என அவன் கொடுத்த இன்ட்ரோவிலே டாக்டர் ரெடியாகிவிட்டார் போலும்…

அடுத்து அவன் “ரியுக்கு என்ன சாப்ட கொடுக்கலாம்…என்ன கொடுக்க கூடாது” என்பதில் ஆரம்பித்து….”இந்த டைம் ரியு நெயில் பாலிஷ் போடக் கூடாதுன்றாங்களே  அப்டியா ?” என்பதுக்கு இடையில் கேட்ட  ஒரு நூறு கேள்விகளுக்கு….. திட்டாமல் சிரிக்காமல் டாக்டர் பதில் கொடுக்க….

அந்த கான்வர்ஷேஷன் எல்லாத்தையும் அவன் மொபைல்ல வேற ரொம்ப சின்சியரா ரெக்கார்ட் பண்ணி வைக்க……

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

அனிதா சங்கரின் "அவளுக்கென்று ஒரு மனம்..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்க தவறாதீர்கள்..

இதில் ரியா என்ன செய்வதாம்? இவளுக்கு இடப்புறமாய் அமர்ந்திருந்தவனை நோக்கி சில டிகிரி கோணம் முகம் திருப்பி…….சிந்தாமல் சிதறாமல் அவன் கண்… அது இமைக்கும் விதம்……முக பாவம்….. லிப் மூவ்மென்ட் என முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள் அவள்…..

என்னதான் அவன் குழந்தைக்காக என கேட்டுக் கொண்டிருந்தாலும்…. ரியு இத சாப்டலமா? ரியுக்கு இத செய்யலாமா? என அவன் வார்த்தைகள் எல்லாம் ரியு மயம்….  அவன்  அப்படி இவள் பெயர் சொல்லும் ஒவ்வொரு முறையும் இவளுக்குள் ஏதோ சுக வருடல்….

இப்படியாய் இவளுக்குள் மீதி இருந்த கொஞ்ச நஞ்ச டென்ஷன், அந்த மறுகல் எல்லாம் சுத்தமாய் மறைய….

இதுல ஒரு வழியா “நீ கேட்கனும்னு நினைக்கிறத கேளு ரியு…” என இவளுக்கு வேறு சான்ஸ் கொடுத்தான் அவன்…

ஆப்பர்சுனிட்டிய ஆப்டா பயன்படுத்தி “அடுத்த அப்பாய்மென்ட் எப்ப வரனும் டாக்டர் ?” என கேட்டு ஒரு வழியா டாக்டருக்கு விடுதலை வாங்கி கொடுத்தாள் இவள்..….

இதில் இவளை திரும்பி அவன் ஒரு பார்வை பார்க்க…. இவள் அவனைப் பார்த்து  ஈஈஈஈஈஈ….

இப்போ டாக்டரோ சிரிப்புடன்…”சார் ஆன்சியஸாகிறதுக்கு இதுல ஒன்னுமில்ல…..உங்க வைஃப் போல்டா இருக்காங்க….அவங்க அப்படியே இருக்க மாதிரி பார்த்துகோங்க… “ என தேவையில்லாம நீ பயந்து உன் வைஃபை வேற பயங்காட்டி வைக்காதேன்ற ரேஞ்சில் ஒரு அட்வைஸ் கொடுக்க….

அதுக்கு மேல அவன் என்ன கேட்பானாம்….? விவன் இவளோடு விடை பெற்றான்…

ரூமை விட்டு வெளியே வரவும் அவன் இவளிடம் எதுவும் சொல்லும் முன்னும்…” இல்ல விவன்….இப்ப லோட்டா ன்னு ஒரு ஆர்கனைசேஷனாம்….வயித்ல இருக்க குழந்தைய பத்தி 20  கொஸ்டியனுக்கு மேல கேட்டா…..அது ஃபீட்டஸ் அப்யூஸ்னு ஸ்டே வாங்கி இருக்காங்களாம்….. கன்டம்ன்ட் ஆஃப் கோர்ட்னு உங்கள யாரும் அரெஸ்ட் செய்துட்டா நான் என்ன செய்வேன்…. அதான்…” என கண்ணை உருட்டி அப்பாவியாய் ஒரு விளக்கம் வேறு சொன்னாள்…..

முறைக்க முயன்ற விவன் தன்னை மீறி  பீறிட்டு சிரித்தான் இப்போது….

“ஹப்பா பாண்டியர் ஒரு வழியா சிரிச்சுட்டார்……” என முனங்கிய படி அவனோடு தங்கள் காரைப் பார்த்து இவளும் நடந்தாள்….

கார் கதவை இவளுக்கு திறந்துவிட்டு….இவள் ஏறி அமரவும்…. தானும் ஏறி காரை கிளப்பிய விவன்…

“ஏன் ரியு ஸ்கேன் அப்ப அவ்ளவு டென்ஷனா இருந்த……?” என அவன் கேட்க நினைத்திருந்ததைக் கேட்டான் இப்போது…. ரிலாக்‌ஸ் ஆகிட்டாளே இப்ப கேட்டு வச்சுகலாம் என நினைத்தான் அவன்…

ரொம்ப காம்ப்ளீகேட்டடான கேள்விகளை அவளை கேட்பதை இவன் தவிர்த்து விடுவான்தான்….அதெல்லாம் டெலிவரிக்கு அப்றம் பேசனும் என்பது அவன் முடிவு….. ஆனா இப்டி ஸ்கேனுக்கே டென்ஷனானா……இன்னும் டெலிவரி வரை இருக்கே….. அதை கோத்ரூ செய்யனுமே….. அதனால் இதை தெரிஞ்சு வச்சுகிறது அவளுக்கு இந்த ப்ரெக்னன்சி டைமில் ரொம்ப உதவியாக இருக்கும் என எண்ணினான் அவன்…

ஆனால் ரியாவைப் பொறுத்தவரை இவளுக்கே அதற்கு பதில் தெரியாது…. ஏதோ அவளை மீறின உணர்வு அது…… இப்போது அவன் கேள்வியில் மீண்டுமாய் அது ஏன் அப்படி ஒரு உணர்வு என அதைப் பற்றி  யோசித்தாள்…

இதற்குள் அவனோ அவள் எதோ தயங்குவதாக நினைத்து “என்ன உன் ஃப்ரெண்டுன்னு  நினச்சுக்க சொன்னேன்…” என ஊக்கினான்…… ‘ஹெஸிடேட் செய்யாம சொல்’ என்பதுதான் அவன் சொல்ல வந்த அர்த்தம்…

ஆனால் ரியாவுக்கோ இது புரிந்த கோணமே வேறு….. அவள் மனதில் ‘இவன் குழந்தைக்காக மட்டும்தான் என்னை மேரேஜ் செய்திறுக்கான்’ என்ற ஒன்று உறுத்திக் கொண்டிருக்கிறதல்லவா அதன் விளைவாய் இப்படி தோன்றிவிட்டது போலும்…..

‘வெறும் ஃப்ரெண்ட்டா இருக்றதுக்கு எதுக்கு மேரேஜ் செய்தியாம்? ‘ என்ற எண்ணம் மனதில் சட்டென வெடிக்க அது வாயில் வேறு வந்தேவிட்டது…..

சிடு சிடுப்பும் மறுப்புமாக “ஃப்ரெண்டா…” என துவங்கியேவிட்டாள் அவள்… அப்பொழுதுதான் அதன் அர்த்தம் என்னவாக இருக்கும் என்பது உறைக்க….. ‘ஆமா இவளே வாயால என்னை லவ் பண்ணு, நான் அதுக்காக தவமிருக்கேன்னு சொல்ற மாதிரிதானே அது…. அதை எப்படி சொல்வாளாம் இவள்…?’ ஆக அந்த பேச்சை அதோடு நிறுத்தியவள்…

“ ஏதோ அப்ப டென்ஷனா இருந்துச்சு…..இப்பதான் என் Lip தியரிபடி எல்லாத்தையும் விட்டுட்டு சந்தோஷமாகிடேனே..” என பதில் கொடுத்தாள்…. கொஞ்சமே கொஞ்சம் சிடுசிடுப்பு இன்னும் கூட குரலில் கலந்து கிடக்கிறதோ?

விவனுக்கோ இப்பொழுது நிஜமாகவே கோபம் வந்திருந்தது….

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.