(Reading time: 26 - 51 minutes)

வனை நோக்கி கை நீட்டினாள் அவள் 'கையை குடுங்க...'

இமைதட்டவில்லை அவன். மற்ற எல்லாரையும் வெகு அழகாய் சமாளிக்கிறேன். இவள் அருகில் மட்டும் இப்படி தோற்றுப்போகிறேனே!!! மெது மெதுவாய் அவளை நோக்கி நீண்டது அவன் கரம். பேச்சென்ன, மூச்சே வரவில்லை அவனுக்கு.

'என்ன சொல்றதுன்னு தெரியலை எனக்கு. நிஜமாவே என் கண்ணிலே தண்ணி வந்திடுச்சு. நீங்க... யூ ஆர் கிரேட் பரத்.'. அவன் கையை பற்றி குலுக்கினாள் அவள். அவள் வார்த்தைகளில் பலநூறு மயிலிரகுகளின் வருடல்களின் இதம்.

புன்னகையை அவளுக்கு பதிலாக்கினான் அவன்.

'அப்புறம் பரத்கிட்டே ஒரு சாரி கேக்கணும்.. அன்னைக்கு அருண் உங்களை வீட்டை விட்டு போக சொன்னதுக்கு. அவர் அப்படி செஞ்சிருக்க கூடாது. எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்தது சாரி பரத்.... எதையும் மனசிலே வைச்சுக்காதீங்க பரத்..ப்ளீஸ்..' கெஞ்சலும், தவிப்புமாய் சொன்னாள் அவள்.

தாங்கமுடியவில்லையடி பெண்ணே!!! ஒரே நேரத்தில் பலநூறு பூக்கூடைகளை என் மீது கவிழ்த்துக்கொண்டிருக்கிறாய். மூச்சு முட்டுகிறது எனக்கு!!! அவளையே பார்த்திருந்தான் அவன்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சகியின் "நிர்பயா" - சமூகத்தில் நடக்கும் அநியாயங்களை தட்டிக் கேட்கும் பெண்ணின் கதை...

படிக்க தவறாதீர்கள்..

'எதுவுமே பேசாம இருந்தா என்ன அர்த்தம்???'

'அபர்ணா என்ன சொன்னாலும் சரின்னு அர்த்தம்...' என்றான் புன்னகை மாறாமல்.

'தேங்க்ஸ் பரத்..' என்று தலை அசைத்துவிட்டு அவனிடம் விடை பெற்று விலகினாள் அபர்ணா.

விக்னேஷ்வர பூஜை முடிந்து, பூர்வாங்க வைதீங்கங்கள் முடிந்து, கும்பங்களில் நீர் வைத்து மந்திரம் ஜபித்துக்கொண்டிருந்தனர் வைதீகர்கள். அம்மாவும் அப்பாவும் மணமேடையில் அமர்ந்திருக்க, பட்டு வேட்டி, சட்டை செயின் மோதிரம் என ஜொலித்தபடியே அண்ணனும் தம்பியும் அருகருகே நின்றிருக்க..

அப்போது ஒலித்தது பரத்தின் கைப்பேசி. அழைத்தது அவனது தோழி ஸ்ரீஜா.

'சொல்லுமா.'

'இன்னைக்கு ஈவினிங் ஆடியோ ரீலிஸ் இருக்கு ஞாபகம் இருக்கில்ல. வந்திருவே இல்ல. '

'வந்திருவேன்மா. டோன்ட் வொர்ரி..'  என்றான் பரத்.

'உன்னோட தி பெஸ்ட் ஃப்ரெண்ட்டையும் கூட்டிட்டு வந்து சேரு சரியா வெச்சிடறேன்..' துண்டித்தாள் அழைப்பை.

நான்கு நாட்கள் முன்னால் இவனுக்கு அழைப்பு வந்திருந்தது. அபர்ணாவிடம் சொல்லத்தான் மறந்திருந்தான் பரத்.

'இப்போது அவளிடம் சொல்லி அவளையும் அழைத்து செல்ல வேண்டும்.' யோசித்தபடியே நெற்றியை தேய்த்துவிட்டுக்கொண்டான் பரத்.

மந்திர ஜபம் முடிந்திருக்க, அப்பாவையும் அம்மாவையும் அருகருகே அமர வைத்து குடத்தில் ஜபித்து வைத்த நீரால் அவர்களை நீராட்ட அந்த வீட்டில் வீசிய காற்றில் கூட சந்தோஷம் மட்டுமே கலந்திருந்தது.

.இப்படி ஒரு சந்தோஷமான தருணத்தில் இரண்டு மகன்களும் அவர் அருகே. வாழ்க்கையின் நிஜமான சந்தோஷம் எதுவென முழுவதுமாக புரிந்திருந்தது அம்மாவுக்கு.

உடை மாற்றிக்கொண்டு அம்மாவும் அப்பாவும் மறுபடியும் மணமேடையில் வந்து அமர்ந்திருக்க, அபர்ணாவின் அருகில் வந்தான் பரத்.

'மேடம். இன்னைக்கு ஈவ்னிங் ஃப்ரீயா???

'ஃப்ரீதான் சொல்லுங்க பரத்...'

'அது வேறே ஒண்ணுமில்ல.. இந்த ஊரிலே அபர்ணா, அபர்ணான்னு ஒரு கிரேட் சிங்கர் இருக்காங்க இல்ல அவங்க பாடின பாட்டு இன்னைக்கு ஆடியோ ரிலீஸ் பண்றாங்களாம். அதுக்கு போயிட்டு வருவோமா???

'பாட்டு இன்னைக்கு ரிலீஸ்ஆ??? அதுக்கு அப்புறம் எல்லாரும் கேட்பாங்களா பரத்???' முகம் மலர மலர கண்கள் மின்ன மின்ன கேட்டாள் அபர்ணா.

'கண்டிப்பா கேட்பாங்க...' அவன் இதழ்களில் குளிர் புன்னகை. அதை கற்பனையில் பார்த்துக்கொண்டதை போல் சில நொடிகள் அழகான புன்னகை கலந்த மௌனம் அவளிடத்தில்.

பின் திடீரென கேட்டாள் 'எப்படி திடீர்னு???' அவள் முகத்தில் இன்னமும் வியப்பு மறையவில்லை.

நாலு நாள் முன்னாடியே எனக்கு இன்விடேஷன் வந்தது. உன் நம்பர் நான் அவங்களுக்கு அட்ரெஸ் எதுவும் கொடுக்கலை அதானாலே உனக்கு அவங்க சொல்லலை. அவ்வளவுதான். போலாமா ஈவினிங்???

'அப்பாகிட்டே சொல்லணுமே..'

'சொல்லலாமே. சொல்லிட்டு உன்னை பத்திரமா கூட்டிட்டு போயிட்டு கொண்டு வந்து விட்டுடறேன் ஒகேவா..' அவன் இதமாய் புன்னகைத்த வேளையில் உள்ளே நுழைந்தார்கள் அவர்கள். அருண் குடும்பத்தினர். அருண் அப்பா, அம்மா, இவர்களோடு இந்துஜாவும்!!!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.