(Reading time: 11 - 22 minutes)

ண்டைன்னு வந்தா நாலைஞ்சு சட்ட கிழியறதுதான் சப்பாணி.....”

“சாரங்கபாணி........ சப்பாணி சொல்லாத.... அடியேய் கிழியற சட்டை உன் சட்டையா இருக்கணும்.... அடுத்தவன் சட்டைய எடுத்துக் கிழிக்க கூடாது”

“ச்சே இது என்ன பேச்சு சப்பாணி.... உன் சட்டை என் சட்டைன்னு..... நாம என்ன அப்படியா பழகறோம்....  ஆமாம், நான் இழுத்தபோது இந்த அளவுக் கிழியலையே... நீயே பெருசா கிழிச்சுட்டு வந்து அம்மாக்கிட்ட என்னை மாட்டி விடறியா....”

“இந்த கோக்குமாக்குத்தனமான பேச்செல்லாம் வேணாம்..... அம்மா அவளுக்குத்தான் வண்டி இருக்கில்லை.... எதுக்கு என்னோட செல்லத்தை எடுத்தான்னு கேளுங்க....”

“ஏண்டி உன் வண்டி இருக்கும்போது எதுக்குடி அவன் வண்டியை எடுத்த....”

“அம்மா கார்த்தால சீனியரைப் பார்த்து பேசிட்டு என் காபின்க்கு போகும்போது என் பேகை அவர் ரூம்லேயே மறந்து வச்சுட்டேன்ம்மா.... அங்க போய் அதை எடுத்துட்டு போறதுக்குள்ள பொன்னான எத்தனை நிமிஷம் வேஸ்ட்டா போய்டும்.... அதான் பக்கத்துல இவன் இருந்தானா... டகால்ன்னு இவனோட வண்டி சாவி எடுத்துட்டேன்.....”

“அப்படி என்னத் தலை போற அவசரம் உனக்கு.... சீனியர் ரூம்க்கு போக முடியாத அளவுக்கு.....”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சுபஸ்ரீயின் "கிருமி" – காதல் கலந்த விறு விறு தொடர்...

படிக்க தவறாதீர்கள்..

“நேரு நகர்ல பயங்கர கலவரம்மா.... நான் போய்தான் மேலும் பெரிசாகாம தடுத்தேன்....”

“ஏம்மா எங்க ஆபீஸ் என்ன மைசூர் பேலஸா.... இருக்கறது மூணு ரூம்.... இவ சொல்ற கதை நம்பறா மாதிரியா இருக்கு..... எடுத்தது கூட ஓகேம்மா, ஆனா அதை  எவ்ளோ ஸ்பீடா ஓட்டினா தெரியமா.... ரெண்டு மூணு ஸ்பீட் பிரேக்கர்ல வேகத்தை குறைக்காம டமால் டமால்ன்னு ஏத்தி இறக்கினா..... என் செல்லத்துக்கு எப்படி வலிச்சிருக்கும்.... அதோட இல்லாம ஒரு இடத்துல தண்ணில இறக்கி அழுக்கு வேற பண்ணிட்டா.....”

“அதுவும் உன்னை மாதிரி தீவிளிக்கு தீவிளிதானே குளிக்குது சப்பாணி.... பேசாம இன்னைக்கு போனாப் போகட்டும்ன்னு குளிக்க வச்சுடு...”, பாரதி கால் ஆட்டியபடியே நக்கலாகக் கூற, சாரங்கன் அவளை அடிக்கத் துரத்தினான்..

“அம்மா இவளோட தொல்லை நாளுக்கு நாள் அதிகமாய்ட்டே போகுது.... ஒண்ணு இவளுக்கு கல்யாணம் பண்ணி வீட்டை விட்டு துரத்துங்க.... இல்லைன்னா எதானும் முதியோர் இல்லத்துல சேர்த்துடுங்க......”

“என்னை சேர்க்கணும்ன்னா அது முதியோர் இல்லம் இல்லை சப்பாணி.... குழந்தைகள் காப்பகம்.....”

“நான் கரெக்டாதான் சொன்னேன்..... உன்னை மாதிரி நூத்துக் கிழவியை எல்லாம் குழந்தைகள் காப்பகத்துல சேர்த்துக்க மாட்டாங்க உனக்கெல்லாம்  ஒன்லி முதியோர் இல்லம்”

“ஏம்ப்பா சாரங்கா... இவளை கல்யாணம் பண்ணி வீட்டை விட்டு அனுப்ப சொல்றியே..... போற இடத்தை பத்தி யோசிச்சியா.... அங்க இருக்கறவங்க நிலைமை என்னாகறது....”

“அதை பத்தியெல்லாம் நாம கவலைப்படக்கூடாதும்மா..... சில சாதனைகள் செய்யணும்ன்னா இந்த மாதிரி சோதனைகளை எல்லாம் தாங்கித்தான் ஆகணும்.....”

“சாதனையா......”

“இவளோட ஜென்மம் முழுக்க இருக்கப்போறதே ஒரு சாதனைதானே.....”

“போற்றுவார் போற்றலும்.... தூற்றுவார் தூற்றலும் போகட்டும் பாரதிக்கே....”, மறுபடி பாரதியே, அதுவும் சீர்காழி கோவிந்தராஜன்  வாய்ஸில்.....

“பாரதி மரியாதையா இங்க வந்து உக்காரு.... எப்ப பாரு அவனோட என்ன வம்பு வேண்டி இருக்கு.... அவன் வண்டிய எடுத்துட்டு வந்ததுக்கு punishment, ஒழுங்கா போய் அவன் பைக்கை துடைச்சு கிளீன் பண்ணு.... இல்லை ராத்திரிக்கு சோறு கிடையாது உனக்கு....”, பாரதியால் பேசாமல் கூட இருந்துவிட முடியும் ஆனால் சாப்பிடாமல் இருக்க முடியவே முடியாது.... ரூபா பாரதியின் மெயின் வீக் பாயிண்ட்டில் கை வைத்ததால் முணுமுணுத்தபடியே வண்டியைத் துடைக்க கிளம்பினாள் பாரதி.

அவள் கிளம்பவும் சாரங்கனின் கைப்பேசி சரியாக ஒலித்தது....  அழைத்தது அவர்களின் சீனியர் சந்திரன்...

“ஏண்டா எங்கடா போய்த் தொலைஞ்சீங்க ரெண்டு பேரும்.....”

“இந்த பாரதி என் செல்லத்தைக் கடத்திட்டா சீனியர்... அதைக் காப்பாத்த நான் அவளை சேஸ் பண்ண வேண்டியதாப் போச்சு.... அந்த சேஸிங் கடைசியா வீட்டுல வந்துதான் முடிஞ்சிருக்கு..... so இப்போ வீட்டுல இருக்கோம்.....”

“த்தூ வெக்கமா இல்லை.... ஏழு கழுதை வயசாச்சு ரெண்டு பேருக்கும்... இன்னும் துரத்தி விளையாடறீங்க.....  உன்னை நாளைக்கு கேஸ்க்கு பாயிண்ட்ஸ் எடுத்து வைக்க சொன்னா இங்க இருந்து எஸ் ஆகிட்டு கதை பேசறியா.....”

“சீனியர் இதெல்லாம் அநியாயம் சொல்லிட்டேன்.... ஒரு புகழ் பெற்ற ஜுனியரை எப்படி நீங்க கழுதைன்னு சொல்லலாம்....”

“கரெக்ட் சொல்லக்கூடாதுதான்..... கழுதை கேட்டா ரொம்ப வருத்தப்படும்... என்னடா நம்மளை இவங்க கூட சேர்த்து பேசறாங்களேன்னு....  இங்கப் பாரு நாளைக்கு முக்கியமான கேஸ் ஹியரிங்க்கு வருது நியாபகம் இருக்கு இல்லை... இன்னும் அரை மணிநேரத்துல இங்க இருக்க.... உன்னோட இன்னொரு கழுதை சுத்துமே அதையும்  சேர்த்து இழுத்துட்டு வா.... பாயிண்ட்ஸ் எடுக்கணும்....”,சந்திரன் ஆர்டர் போட்டுவிட்டு கைப்பேசியை வைக்க.... எல்லாருக்கும் நான்தான் தொக்காப் போயிட்டேன்... என்று புலம்பியபடியே பாரதியை அழைக்க சென்றான் சாரங்கன்....

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.