(Reading time: 11 - 22 minutes)

பாரதியும், சாரங்கனும் சீனியரைப் பார்க்க கிளம்ப ரூபா தன்னை கோவிலில் விட்டு செல்லுமாறு கூறினார்.... பாரதி தான் ரூபாவை கோவிலில் விட்டுவிட்டு சந்திரன் இல்லம் வருவதாகக் கூற.... சாரங்கன் நேராக அவர் இல்லம் சென்றான்.

“பாரதி இன்னைக்கு வெள்ளிக்கிழமை... அதிசயமா என்னை கொண்டு வந்து விட்டிருக்க... அப்படியே உள்ள வந்து சுவாமி தரிசனம் பண்ணிட்டு போயேன்....”

“அம்மா கூட்டத்தைப் பார்த்தீங்களா..... இவ்ளோ பேர் குறையக் கேட்டு கேட்டு கடவுள் படு டயர்ட்டா இருப்பார்.... இதுல என்னை  வேற வந்து என் சோகக் கதைய கேளு கடவுளேன்னு பாட சொல்றீங்களா....  நீங்களே இங்க வந்திருக்க வேண்டாம்... இந்தக் கடவுளை வீட்டுல இருந்தே கும்பிட்டிருக்கலாம்.... பாருங்க எத்தனை கூட்டம்.... இதுல முண்டி அடிச்சு  பார்க்கணுமா..... அதுவும் இருக்கற கூட்டத்துக்கு நீங்க ஒரு அரை செகண்ட் கூட நிம்மதியா அவரைப் பார்க்க முடியாது போல இருக்கே.....”

“உனக்கு என்னடி தெரியும்.... கோவிலுக்கு வர்றதே நம்மை சுற்றி positive vibration வரணும்கறதுக்காகத்தான்.... உனக்குத்தான் அதுல எல்லாம் நம்பிக்கை இல்லையே....”

“அம்மா அடுத்தவங்களுக்கு கெடுதல் செய்யாம நம்ம மனசுல மத்தவங்களைப் பற்றி நிந்திக்காம இருந்தாலே நம்மை சுத்தி positive vibration இருக்கும்மா”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சித்ரா Vயின் "உன் நேசமதே.. என் சுவாசமாய்..!!" - காதல் கலந்த குடும்பத் தொடர்

படிக்க தவறாதீர்கள்..

“நீ அப்படி இருப்ப.... ஆனா உன்னை சுத்தி இருக்கறவங்களும் அப்படியே இருப்பாங்களா... ஆனா கோவிலுக்கு வர்றவங்க அப்படி இல்லை.... எந்தக் கெட்ட எண்ணமும் இல்லாம, கடவுளை மட்டுமே நினைச்சு வருவாங்க”, இவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே இரண்டு பெண்கள் அவரவர் மாமியாரைத் திட்டியபடியே உள்ளே செல்ல, இதுதான் உங்க positive vibration-ஆ என்று நக்கலாக தன் அம்மாவைப் பார்த்தாள் பாரதி.

“சரி சரி விடு.... இந்த மாதிரி ஒண்ணு ரெண்டு கேஸ் வரத்தான் செய்யும்... அது பத்து பெர்சென்ட்தான்..... மத்த தொண்ணூறு பெசென்ட் நல்லவங்கதான்.....”

“குப்புற விழுந்தாலும் மூக்குல அடிபடலைன்னே சாதிப்பீங்களே.... சரி விடுங்க.... கூட்டம் ரொம்ப அதிகமா இருக்கு... பார்த்து மெதுவாப் போங்க.... வீட்டுக்கு இங்க இருந்து நடக்காதீங்க.... பயங்கற டிராஃபிக்கா இருக்கு.... ஆட்டோல போங்க....”,என்று கூற, அவளுக்குத் தலையாட்டியபடியே கோவிலின் உள்ளே சென்றார் ரூபா.  

ரூபா உள்ளே செல்லவும், சுகுணா வெளியே வரவும் சரியாக இருந்தது... ரூபா உள்ளே சென்றதும் தன் ஸ்கூட்டியைக் கிளப்பிய பாரதி கூட்டம் அதிகம் இருந்ததால் வண்டியை காலால் தட்டித்தட்டி மிக மெதுவாக நகர்த்தி  சென்றாள்.   அவளுக்குப் பக்கத்தில் சுகுணா நடந்து வர சுகுணாவின் இடது புறம் மிக வேகமாக வந்த பைக் அவரை இடித்துக் கீழே தள்ளியது.... ஒரு நிமிடம் இறங்கி அவருக்கு உதவ நினைத்த பாரதி அதற்குள் சுகுணாவை சுற்றி ஆட்கள் கூடுவதைக் கண்டு அந்த பைக்கை துரத்திச்சென்றாள்.

பைக் இரண்டு தெரு தாண்டுவதற்குள் அதைத் துரத்திப் பிடித்த பாரதி,  தன் ஸ்கூட்டியால்   அதை இடிக்க, அதில் இருந்த இரு இளைஞர்களும்  பைக்குடன் சேர்ந்து விழுந்தார்கள்....  

“ஏய் என்ன கண்ணைப் பின்னாடி வச்சு வண்டி ஓட்டறியா.... இப்படி வந்து இடிக்கற...”

“அந்தம்மாவை இடிக்கும் போது உன் நொள்ளக் கண்ணு எந்த பக்கம்  இருந்துதோ அதே இடத்துலதான் என் கண்ணும் இருக்கு....”

ஒரு வழியாக பைக்கின் அடியிலிருந்து எழுந்து அதை தூக்கி நிறுத்தியவர்கள், “ஓ நியாயம் கேக்க வந்திருக்கியோ.... என்னாத் தெனாவட்டு இருந்தா எங்களை தள்ளி விடுவ.... டேய் வாடா இன்னைக்கு இவளை அடிக்கற அடில இன்னும் ஒரு மாசத்துக்கு எந்திரிக்கவே கூடாது...”என்று சொல்லி அடிக்க கையோங்க, பாரதி “வாங்கடா மச்சான்களா.... வந்து வாங்கிட்டுப் போங்க.... ஒரு மாசம் யாரு எந்திரிக்காம இருக்காங்க பார்க்கலாம்”,என்று சொல்லியபடியே அவர்கள் இருவரையும் அடி பின்னி எடுத்துவிட்டாள்.   இருவரும் இனித் தாங்காது என்று பாரதியிடம் மன்னிப்பு கேட்க ... அவள் அவர்கள் இருவரையும் சுகுணா விழுந்த இடம் நோக்கி இழுத்து சென்றாள்.

தொடரும்

Episode 02

Episode 04

{kunena_discuss:1100} 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.