(Reading time: 12 - 24 minutes)

"நீங்க ஏதோ டிஸ்டர்ப் ஆகி இருக்கீங்கன்னு நினைக்கிறேன்"

"இருக்கலாம் சார்"

"ஏன்னு தெரிஞ்சிக்கலாமா?"

"நீங்க ரொம்ப பெரிய ஸ்பான்சர். எவ்வளவோ அறிவாளிகளை பார்த்திருப்பீங்க. உங்களை என்னால திருப்திபடுத்த முடியுமான்னு பயம் சார்"

ஃபிளெம்மிங் சிரித்தார். "இது அறிவாளிகளுக்கான உலகம் கிடையாது வசந்த். இது முட்டாள்களுக்கான உலகம்"

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

பிந்து வினோத்தின் "மலர்கள் நனைந்தன பனியாலே..." - காதல் என்பது இரு மனமுடிச்சு... εїз!

படிக்க தவறாதீர்கள்..

"புரியல சார்"

"இப்போ இருக்க தொண்ணுறு சதவீத மக்கள் அறிவாளிகளா தான் இருக்காங்க. எப்போதும் அறிவா தான் யோசிக்கிறாங்க. அதனால தன்னுடைய இயல்பை மறந்து, சிரிக்க மறந்து, ஒரு ரோபோ போல வாழுறாங்க. ஆனா அந்த ரோபோக்கள் ஒரு முட்டாள் காமெடியனை பார்த்து தான் சிரிக்குறாங்க. மொத்த அறிவாளிகளோட டென்ஷனையும் அந்த முட்டாள் தான மறக்க வைக்கிறான். அப்போ இது முட்டாளுக்கான உலகம் தானே?"

ஃபிளெம்மிங்கும் ஜெசிகாவும்  சிரித்தார்கள். ஆனால், வசந்தின் சிரிப்பில் ஒருவித நாடகத்தன்மை இருந்தது.

"ஓகே மிஸ்டர் வசந்த். நான் எப்போதும் எல்லோருக்கும் ரெண்டு வாய்ப்புகளை கொடுப்பேன். முதல் வாய்ப்ப தக்க வச்சிக்க முடியாதவங்க, ரெண்டாம் வாய்ப்ப தக்க வச்சிக்க முயற்சி பண்ணலாம் "

வசந்த் அமைதியாக இருந்தான்.

"நம்ம முதல் சந்திப்பு எனக்கு திருப்தியா இல்லை. அதனால நாம அடுத்து சந்திக்கிறப்போ நீங்க என்னை கவர்ந்துட்டீங்கன்னா என்னால உங்களுக்கு உதவ முடியும்"

"நன்றி சார். அடுத்த சந்திப்பு நிச்சயம் நீங்க சொல்லுறது போல நடக்கும். இன்னைக்கு உங்க நேரத்தை நான் வீணாக்கிட்டேன்னு நினைக்கிறேன்"

"நோ மிஸ்டர் வசந்த். என் நேரம் என்னைக்கும் வீணாகாது"

"ஓகே சார். நாங்க கிளம்புறோம்" என்று வசந்த் ஃபிளெம்மிங்குடன் கை குலுக்கினான். ஜெசிகாவும் விடைபெற்று வசந்தோடு சென்றாள்.

சாலையில் வசந்தின் கார் வேகமாய் சென்றுகொண்டிருந்தது.

"என்ன ஆச்சு வசந்த் உனக்கு? நீ இப்படி நடந்துப்பேன்னு நினைக்கல. எவ்வளவு பெரிய வாய்ப்பு தெரியுமா? அதை மொத்தமா கோட்டை விட்டுருக்க. உனக்காக எத்தனை தடவை என் பிரண்ட் கிட்ட கெஞ்சி இந்த வாய்ப்பை வாங்கி கொடுத்தேன் தெரியுமா? ஆனா நீ பண்ணது எல்லாமே முட்டாள்தனம்"

வசந்த், அவள் பேசுவதை காதில் வாங்கிக்கொள்ளாமல் காரை வேகமாய் செலுத்திக்கொண்டிருந்தான்.

"முட்டாள் முட்டாள். நீ மட்டும் முட்டாள் ஆகல. என்னையும் முட்டாள் ஆக்கிட்ட. இனி இந்த ஜென்மத்துக்கு உனக்கு ஹெல்ப் பண்ணப்போறது இல்லை. இது தான் கடைசி. அவரு எவ்வளவு பெரிய மனுஷன்? உன்னால போன் கட் பண்ணிட்டு வர முடியாதா? அப்படி என்ன முக்கியமான போன் கால் அது?"

"அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக்"

தொடரும்...

Episode # 14

Episode # 16

{kunena_discuss:983}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.