(Reading time: 16 - 32 minutes)

04. நின்னை சரணடைந்தேன் - ஸ்ரீ

 

வேறென்ன வேறென்ன வேண்டும்

ஒரு முறை சொன்னால் போதும்

நிலவையும் உந்தன் கால்மிதியாய் வைப்பேனே வைப்பேனே

சொல்லவும் கூட வேண்டாம் கண்ணிமைத்தாலே போதும்

கேள்விகளின்றி உயிரையும் நான் தருவேனே ..

மௌனம் மௌனம் மௌனம் மௌனமேன் மௌனமேன்

வேறென்ன வேண்டும் வேண்டும் செய்கிறேன் செய்கிறேன்

 

இவன் யாரோ இவன் யாரோ வந்தது எதற்காக

சிரிக்கின்றான் ரசிக்கின்றான் எனக்கே எனக்காக

என்னாச்சு எனக்கே தெரியவில்லை

என் மூச்சின் காய்ச்சல் குறையவில்லை

அட என்ன இது என்ன இது இப்படி மாட்டிக்கொண்டேன்

இது பிடிக்கிறதா பிடிக்கலையா யாரிடம் கேட்டு சொல்வேன்

வன் எண்ணியபடியே அடுத்து வந்த வாரங்களில் சஹானாவை பார்ப்பதை தடுப்பதற்காக சேகரின் வீட்டிற்கு செல்வதை தடுத்தான்..ஏதோ காரணம் கூறி அவரை ஆபீஸிலேயே பார்த்து வேலையை முடித்து கொடுத்தான்..ஒரு மாதத்திற்கு பிறகு அடையாரில் ஒருவரை சந்திக்க வேண்டிய வேலையை முடித்துவிட்டு திரும்பும் போது தற்செயலாய் சாலையின் மறுபுறம் பார்க்க முகம் முழுக்க பரபரப்பும் லேசாய் பயமுமாய் நின்றிருந்தாள் அவள்..அப்படியே போய்விட எண்ணியவன் மனது கேட்காமல் வண்டியை திருப்பி கொண்டு வந்து அவள்முன் நின்றான்..சின்னதே சின்னதாய் ஒரு நிம்மதி அவள் கண்களில்,ஆனால் அடுத்த நொடி பார்வையை எங்கோ திருப்பி கொண்டாள்..

ஹாய் சஹானா என்ன இங்க நிக்குறீங்க எனி ப்ராப்ளம்..

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ராசுவின் "என்னை ஏதோ செய்து விட்டாய்..." - நெஞ்சுக்குள் நீ மட்டும். எல்லாம் மறந்தேன். எனை என்ன செய்தாய்...

படிக்க தவறாதீர்கள்..

யாரும் என் மேல அக்கறை பட வேண்டாம்..ப்ரெண்ட்நு சொல்லிட்டு ஒரு மாசமா பாக்கல..மெசெஜ்க்கு ஒரு ரிப்ளை கிடையாது..இப்போ என்ன திடீர் கரிசனம் ஒண்ணும் தேவையில்ல..நீங்க போலாம்.,

அவனுக்கோ சிரிப்புதான் வந்தது..சரி அப்பறமா நாம சண்ட போடலாம் இங்க ஏன் தனியா நிக்குறீங்க அத சொல்லுங்க மொதல்ல..இந்த ஏரியா கொஞ்சம் மோசம்..எப்போ என்ன நடக்கும்நு தெரியாது..அப்பறம் உங்க இஷ்டம்..

சட்டென ஒரு அடி அவனருகில் வந்து நின்றவள்,விழிகளில் மருட்சியோடு இருபுறமும் பார்க்க வெற்றி புன்னகை அவனிடத்தில்..கார்த்திக் இங்க இருக்குற ஒரு ஆர்பனேஜ்க்கு வந்தேன் அப்பா செங்கல்பட்டுக்கு வேலையா போய்ருகாங்க சோ ஆட்டோல தான் வந்தேன்..என் பர்ஸ் எங்கேயோ மிஸ் ஆய்ட்டுச்சு மொபைல் கூட அதுலதான் இருக்கு அதான் என்ன பண்றதுநு தெரியாம நிக்குறேன் என்று கவலையாய் கூற அத்தனை வைராக்கியத்தையும் தாண்டி இளகிவிட்டது அவனுக்கு..அவன் விளையாட்டு போல் கூறினாலும் அந்த இடத்தில் ஆள்நடமாட்டம் சற்று கம்மியாகத்தான் இருக்கும் அந்த நிலைமையில் அவளை அங்கு விட்டு செல்வது சரியில்லை என,தனியா வரீங்க இப்படியா கேர்லெஸ்ஸா இருப்பீங்க..சரி வாங்க போலாம் என பைக்கை ஸ்ட்டார்ட் செய்ய ஏனோ சற்று தயங்கியவாறு ஏறி அமர்ந்தாள்..

ஆர்பனேஜ் எங்கயிருக்கு??அங்க போய் செக் பண்ணி பாக்கலாமா??என்றவாறு வண்டியை கிளப்பினான்..

இல்ல நா அங்க பாத்துட்டுதான் வந்தேன் ஷுவரா இல்ல..ஆட்டோல தான் போய்ருக்கும்..வீட்டுலயிருந்து வந்த ஆட்டோ ரிப்பேர் ஆய்டுச்சு சோ இங்க இருக்குற ஒரு ஆட்டோ ஸ்டாண்ட்ல தான் செகண்ட் ஆட்டோ பிடிச்சேன் கைலயே அமௌண்ட் வச்சுருந்ததால பர்ஸ் இருக்காநு பாக்காமயே விட்டுட்டேன்..அதற்குள் அந்த ஆட்டோ ஸ்டாண்ட் வந்துவிட இதோ இதோ இங்கதான்என்று அவன் தோளை தட்டி நிறுத்தினாள்..

சற்று தள்ளி அவளை நிற்க வைத்துவிட்டு அவன் சென்று விசாரிக்க அங்கிருந்த டிரைவர்களில் ஒருவர் அவள் பர்ஸை அவனிடம் கொடுத்து ஏதோ பேசி கொண்டிருந்தார்..அவனின் செயலில் தன் தந்தையை நினைத்தாள் இன்றும் கூட அவர் அப்படிதான் சில இடங்களுக்கு சென்றால் அம்மாவையோ இவளையோ அதில் நேரே ஈடுபடுத்த மாட்டார்..உதாரணமாக இளநீர் சாப்பிட இறங்கினால்கூட இவர்களை காரைவிட்டு இறங்க வேண்டாம் என்பார் சற்று தூரத்தில் நிறுத்திவிட்டு தானே இரண்டு மூன்று முறை அலைந்து வாங்கி வருவார்..இப்போது கார்த்திக்கும் அவ்வாறு செய்வது ஏனோ இனம்புரியா மகிழ்ச்சியை தந்தது..

பர்ஸை வாங்கி வந்தவன் அவள் முன் கையசைத்து அவளை நினைவிற்கு கொண்டு வந்தானன்..என்னங்க பகல் கனவா??இந்தாங்க உங்க பர்ஸ் ஆட்டோல தான் விட்டுடீங்க போல அவருக்கு ஏதோ அவசர வேலைநு ஸ்டண்ட்ல இருக்குறவங்ககிட்ட கொடுத்து நீங்க வந்தா கொடுத்துற சொல்லிருக்காரு..இனியாவது கேர்புல்லா இருங்க இவரை மாறியே எல்லாரும் இருப்பாங்கநு சொல்லமுடியாதுல..

தேங்க் யு சோ மச் கார்த்திக்..நீங்க வரலனா நா என்ன பண்ணிருப்பேன்னு தெரில..

பரவால்ல சஹானா பர்ஸ் கிடச்சுருச்சே ஆட்டோல போறீங்களா இல்ல நானே ட்ராப் பண்ணிடவா..??

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.