(Reading time: 11 - 21 minutes)

ச்சமயம், இன்டர்காமில் அழைப்பு வந்தது, ஜி.எம் ன் , காரியதரிசி நவைலா பேசினாலள். “ உங்க மூன்று பேர்க்கும், welcome டின்னர், சேர்மன் இந்திரஜித் சார்பில் கொடுக்கபடுகிறது ...........அதனால் ,  பீச் சைடு வந்துடுங்க, அங்க தான் dinner என கூறி அழைப்பை துண்டித்தாள்.

பூர்விக்கு, அதற்கு செல்லவே விருப்பம் இல்லை. ஆனால் மறுத்தால் , இவர்கள் இருவருக்கும் காரணம் சொல்ல வேண்டி வரும்........... அதற்கு இவர்களுடன் சென்றே வரலாம் நினைத்தாள்............ அவனை பார்ப்பதை மட்டும் கொஞ்சம் தவிர்த்தால் போதும். 

அதற்கு அடுத்து,  ஹெலனாவும், ஸ்ருதியும் , என்ன உடை உடுத்தி செல்வது என கூடி பேசி ஒரு முடிவுக்கு வர அரை மணி நேரம் ஆனது......... அதில் பூர்வி கலந்து கொள்ளவில்லை, அவளுக்கு பெரிதாக எந்த ஈடுபாடும் இல்லை........... போட்டிருந்த உடையிலேயே சென்றிருப்பாள், ஆனால் அது ரெசார்ட் சீருடை என்பதால் தனது அறைக்கு சென்று குளித்து உடை மாற்றி கிளம்பினாள்.

பூர்வி கிளம்ப அதிக நேரம் எடுத்து கொண்டதால் மற்ற இருவரும் வந்து இவளது அறை கதவை தட்டினர்...........பூர்வி கதவை திறந்ததும்,

ஸ்ருதி, அழகான டிசைனர் சுடிதாரிலும், ஹெலனா, அவர்கள் வழக்கப்படி பார்ட்டி கவுன் அணிந்து வந்திருந்தாள்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

மீராவின் "புத்தம் புது காலை..." - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்..

ஸ்ருதி, “ என்ன பூர்வி, இவ்வளவு நேரம் ஆனதை பார்த்து, ஏதோ அற்புதமா கிளம்பரன்னு நினைச்சா, நீ இப்படி டல் கலரில் டாப்சும், சாயம் போன ஜீன்சுமாய் நிக்கர, இதுக்கா இவ்வளவு நேரம் எடுத்துகிட்ட?  நீ இப்படி எல்லாம் டிரஸ் பண்ற ஆள் இல்லையே. என்ன ஆச்சு? ஏதாவது பிரச்சனையா?

பூர்வியும், சே, சே ........ அதெல்லாம் ஒன்னும் இல்லை.......... உன் டிரஸ் ரொம்ப அழகா இருக்கு , போகலாமா? என கேட்டு அந்த பேச்சுக்கு முற்று புள்ளி வைத்தாள்...........

எழு மணியளவில், கடற்கரையை  ( மேலே போட்டோவில் இருக்கும் இடத்திற்க்கு) அடைந்தனர் மூவரும்..............

ஸ்ருதி, “நம்ம ஊரில் பீச்க்கு போகனும்ன, கிளம்பி அந்த டிராபிக்கில் ஊர்ந்து, பொல்யூஷனில் இருந்து காப்பாற்ற, முகத்தை மூடி, கிளவுஸ் போட்டு , ஏதோ கொள்ளைக்காரன் ரேஞ்ச்க்கு கிளம்பி போகணும். அதுவும் ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆகிடும்............ ஆனா இங்க பார், நம்ம ரூமிலிருந்து கிளம்பி, மூன்றே நிமிஷத்தில் இங்க வந்துட்டோம்..........

ஹெலனா, “முக்கியமான, ப்ரஷ் ஏர், பொல்யூஷன் ப்ரீ. மொத்தத்தில் ஐ லவ் திஸ் பிளேஸ்..............

“கொஞ்ச நாளில் ஐ லவ் திஸ் பீபில்ன்னும் , சொல்லுவிங்க என்றபடி அங்கு வந்து சேர்ந்தான், Hadwin..............

அவனை பார்த்து அசந்து தான் போனாள் ஹெலனா............. எப்பொழுதும் sports Centre ல் , ஷார்ட்ஸ்சும் , டி ஷர்ட்டும் அணிந்து கலைந்த தலையுமாக (அங்கே அடிக்கும் காற்றில்)  இருக்கும் Hadwin, இன்று , லைட் ப்ளு காட்டன் காஷுவல் ஷர்ட்ஸ்ம் , டார்க் ப்ளு ஜீன்ஸ்ம் என கலக்கலாக வந்திருந்தான்...................

மற்ற இருவருக்கும் மாலை வணக்கம் கூறி விட்டு , ஹெலனாவை பார்த்து, இந்த ட்ரஸில் நீ ரொம்ப அழகா இருக்க ஹெலனா என்றான். (Hadwin எப்படி தமிழ் பேசறான்னு நீங்க கேட்கறது நியாயம்....... ஆனா அவன் இங்கிலீஷ்ல தான் பேசறான், நான் தான் உங்களுக்காக தமிழ்ல எழுதறேன்......)

அடுத்து, ஜி.எம் மும் , நவைலாவும் வந்தனர்........

அன்று தான் இவர்களுக்கு நவைலாவுடன் பேச நேரம் கிடைத்தது.......... இவர்களை பற்றி கேட்டு , இவர்களுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை  என்பதில்  ஆச்சரியமடைந்து , தன்னை பற்றி கூறினாள்...... “ எனக்கு இரண்டு முறை திருமணமாகி விவாகரத்தும் ஆகி விட்டது என சாதரணமாக சிரித்து  கொண்டே கூறினாள்............ அவளுக்கும் ஏறக்குறைய இவர்களுது வயது தான் இருக்கும்........

மூவருக்கும் ஆச்சரியமாக இருந்தது........ இந்த நாட்டை சேர்ந்தவர்களுக்கு திருமணம் செய்வது எவ்வளவு எளிதோ அதே போல் விவாகரத்து செய்வதும் அவ்வளவு எளிது..............

திருமணம் ஒரே நாளில் பதிவு செய்யப்படும், விவாகரத்து ஏழு நாளில் கிடைத்து விடும்.  கின்னஸ் world ரெகார்ட் படி உலகத்திலேயே முதல் இடம் வகிக்கிறது விவாகரதிற்காக ..........  

“அவ்வளவு மோசமா? உங்க நாட்டு ஆண்கள்” என கேட்டதற்கு , “ இல்லை அவ்வளவு நல்லவர்கள்” என கூறி எங்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தினாள்.

“எப்படி?” என கேட்டதற்கு .............

“உங்கள் நாட்டில் விவாகரத்தான ஆணிற்கு இரண்டாம் திருமணம் எளிதாக நடக்கும், ஆனால் பெண்ணிற்கு அப்படியா?

“ஆனால், எங்கள் நாட்டில் விவாகரத்தான பெண்ணிற்கும் எளிதாக திருமணம் நடக்கும். ஆண்கள் அப்பெண்களை ஏற்று கொள்வார்கள். அனைவருமே காதல் திருமணம் தான் செய்வர். வாழ்ந்த பின் பிடிக்கவில்லை எனில் விவாகரத்து தான்........

அவங்க கல்ச்சரே அப்படிதான். அந்த நாட்டில் தான் கொலையும் நடக்காது, கற்பழிப்பும் நடக்காது......... ஏன் பெண்களை தெருவில் கேலி செய்வது கூட கிடையாது. இவற்றையெல்லாம் நவைலா மூலம் அறிந்து ஆச்சரியபட்டனர்  மூவரும்........

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.