(Reading time: 11 - 21 minutes)

பூர்வி, தவழ்ந்து வந்த தென்றலை ரசித்து கொண்டிருந்த போது , காற்றுடன் கலந்து வந்த Perfume ஸ்மெல், நிச்சயம் இது Azzaro தான். அந்த Perfume ஸ்மெல்லுடன் சேர்ந்து இந்திரஜித்தும் வந்து சேர்ந்தான்...........

இந்திரஜித், “ welcome to Paradaise Island Resort” என கூறி மூவரையும் வரவேற்றான்.........

welcome ட்ரிங்க்ஸ் வர, ஒவ்வொருவரும்க்கும் அவரவர்க்கு பிடித்த ஜூஸ் வந்தது.  பூர்விக்கு பிடித்த Litchi lemonade இரண்டு க்ளாஸ்களில் இருந்ததது , மற்றொன்று யாருக்கு என ஆர்வமாக பார்த்து கொண்டிருந்தாள்.

முதல் ஒன்று இந்திரஜித் கைகளுக்கு சென்றது........ அதை பார்த்தவுடன், முடிவு செய்து விட்டாள், அவனுடன் சேர்ந்து அதை குடிக்க கூடாது என்று.....

அவனை விட்டு தள்ளி இருக்க வேண்டும் என நினைத்ததால் கடைசியாக அமர்ந்திருந்தாள. இறுதியாக வந்ததால் அந்த ட்ரேவில் அந்த ஒரு கிளாஸ் மட்டும் இருந்தது.........  

வெய்டரிடம், நோ, தேங்க்ஸ் என கூறி அழகாக மறுத்து விட்டாள். வேறு ஜூஸ் எதுவும் வேண்டுமா என கேட்டதற்கும்,  வேண்டாம் என்றே கூறினாள்.............

இந்திரஜித் , “scuba diving எங்கே படிச்சிங்க ? என்று ஹெலனாவிடம் கேட்டான்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

தீபாஸ்ன் "பெண்ணே என் மேல் பிழை" - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்..

“PADI , Texel, Netherland ல் “ என ஹெலனா கூறினாள்...........

“ அங்க எப்படி இருந்தது? இங்க எப்படி பீல் பன்றிங்க?

“ அங்க கடல் தண்ணி ரொம்ப சில்லுன்னு இருக்கும்” ஆனா இங்க அப்படி இல்லை. அதனால இங்க கூட கொஞ்சம் நேரம் அண்டர் வாட்டர் diving செய்யலாம்........என ரசித்து கூறினாள் ஹெலனா.

ம்ம்ம்.......”உங்க தோழிகள் டைவ் செய்வாங்களா?” என பூர்வியை பார்த்து கொண்டே ஹெலனாவிடம் கேட்டான்.........

“யா , செய்வாங்க, பேசிக் கோர்ஸ் செய்திருக்காங்க”...........ஹெலனாவே கூறினாள்........

“பைன், நாளைக்கு வெல்கம் ட்ரிப்பாக , ஷார்க் Feeding போகலாம் எல்லோருமா சேர்ந்து” என அனைவருக்கும் சேர்த்து இந்திரஜித்தே முடிவு செய்தான்..........

Shark Feeding என்பது, நாம் oxygen cylinder, அண்டர் வாட்டர் சூட் அணிந்த கடலுக்கடியில் சென்று சுறா மீன்களுக்கு உணவு கொடுப்பதாகும்.......

உடனே பூர்வி, வேண்டாம் நான் வரலை, கடல் ஓரத்தில் தினமும் மாலை 5 மணிக்கு ஸ்டிங் ரே மீனுக்கு உணவு கொடுப்பதையே பார்த்து கொள்கிறேன் , என கூறினாள்..........

பூர்வி , அவ்வாறு அவசரமாக கூறியதை கேட்ட இந்திரஜித், “சோ , நீங்க தான் பூஜாவா?? என அவள் புறம் திரும்பி கேட்டான்...............

“இல்லை என் பேரு பூர்வஜா ............ என அழுத்தம் திருத்தமாக கூறினாள்......

“நடுவில் “வா” ன்னு சொல்றிங்களா? நீங்க சொன்னா கண்டிப்பா வர வேண்டியது தான்.......சொன்ன பொழுது அவன் கண்களில் குறும்பு கூத்தாட மட்டும் செய்யாமல் டிஸ்கோ, பாலே, சல்சா என அத்தனை ஆட்டத்தையும் போட்டது............

பூர்வி , கோபத்தில் எரிமலையாகவே மாறி போனாள்.......... என் பேர சுருக்க இவன் யாரு? என்ற கோபம் தான்..........

பூர்வியை கண்டு கொள்ளாமல் , ஸ்ருதியிடம் திரும்பி , “ஹை ஸ்ருதி, இங்க கேம்ப் fire க்கு பதில் உங்க தோழியையே அந்த குழிக்குள் இறக்கிடலாம் போல இருக்கே, அவ்வளவு சூடா இருக்காங்க”............ என கேலி செய்து கொண்டிருந்தான்..........

ஸ்ருதியும், அவனது கிண்டலை ரசித்து கொண்டே அவளுக்கு அப்படி யாரும் சுருக்கி கூப்பிட்டால் பிடிக்காது சார், பூர்வின்னு சொன்னா ஓகே...... என்று கூறினாள்...........

ஸ்ருதிக்கு ஆச்சரியமாக இருந்தது.......... எவ்வளவு பெரிய பணக்காரன், கொஞ்சம் கூட கர்வம் இல்லாமல் எல்லோரிடமும் எளிதாக பேசுகிறானே என்று இருந்தது........

“சோ, உங்க வருங்கால கணவர் என்ன செய்யரார்? என இந்திரஜித் கேட்டதற்கு, ஸ்ருதி,” சார் உங்களுக்கு எப்படி? என வியந்து கேட்டாள். அவனும் லேசான புன்முறுவலுடன், “ என்னோட ஊழியர்களை பற்றி தெரிந்து கொள்வது அவசியம்னு எப்போவும் நினைப்பது தான்.......

“இப்போ, புதுசா நீங்க மூனே பேர் தான, சோ ஈஸி தான்......... உங்க பர்சனல் பைலில் , உங்க face புக் ஐடி இருந்தது, சோ, face புக் போனா தான் உங்க ஸ்டேடஸ் , engaged வித் புருசோத்தமன்னு, இருந்ததே.............

“ ஆமா சார், அவர் துபாயில் ஒரு கம்பெனியில் சீப் ஏலக்ட்ரிஷியனா வொர்க் பண்றார்  சார்.......... என இந்திரஜித்தின் கேள்விக்கு பதில் கூறி கொண்டிருந்தாள்.........

அனைவரும், பழரசத்தை அருந்தி முடித்திருக்க, அங்கு போப்பே முறையில் விருந்து டேபிளில் அடுக்கி வைக்க பட்டிருந்ததால், இந்திரஜித்தும், அனைவரையும் உணவை எடுக்க கோரினான்............

அனைவரும் நகர்ந்ததும் , அவனை தாண்டி செல்ல முடியாததால், பூர்வியும், சற்று நிதானித்தாள்.

தன் கையிலிருந்த பாதி குடித்து மீதி இருந்த ஜூஸ்சை , அவளிடம் நீட்டி “உனக்காகவே வரவழைக்க பட்ட லிச்சி ஜூஸ் பூஜா, இந்த பாதிக்காக் தான அந்த முழு கிளாசை வேண்டாம்னு சொன்ன? என இந்திரஜித் கூறிய போது , பூர்வி ருத்ர தாண்டவத்துக்கு ரெடியாகினாள்.................

நாமும் அங்கே அவளோடு அடுத்த அத்தியாயத்தில்

Episode 01

Episode 03

{kunena_discuss:1103}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.