02. நானும் அங்கே உன்னோடு... - பூஜா பாண்டியன்
மறுபடி அந்த வருகை பட்டியலில் அந்த பெயர் இருக்கிறதா என சோதித்தாள். எத்தனை முறை பார்த்தாலும் அவனது பெயர் இல்லை..........
பூர்வியின் , மூளை , மனம் மட்டுமல்லாது , அவளது ஒவ்வொரு செல்லும் கூறியது அவனது பெயரை.......
“இந்திரஜித்” ........ 6 அடி உயரத்தில், தந்த நிறத்தில், அடர்ந்த கேசத்துடன், பெரிய கண்களுடன், கூரான நாசியுடன், கிரேக்க சிற்பம் போல் அகன்ற தோள்களுடன் , கம்பீராமாய்............
கண்களில் Armani-Italian குளிர் கண்ணாடி , கைகளில் Rado வாட்ச் , , Gucci ஷர்ட்டும் , CK ஜீன்ஸ், கால்களில் Louis Vuitton shoes , என உலக branded items களின் மொத்த உருவமாக வந்து இறங்கினான்...............
இவன், இங்கே, எப்படி? ......... செக்யுரிட்டியை கூப்பிட்டு கேட்க சொல்லலாம் என என்னும் பொழுதே, ஜி.எம் நாஷித் எங்கிருந்தோ ஓடி வந்தார்..........
சார், வாங்க........ வாங்க........ நீங்க வர்றீங்கன்னு ஹெட் ஆபிஸ்ல இருந்து மெசேஜ் வரல....... அதான் உங்களை ரிசீவ் பண்ண ஜெட்டிக்கு வரல........ சாரி சார்.........
கூல், நாஷித்....... நான் தான் சொல்ல வேண்டாம்ன்னு சொன்னேன்......... ஒரு சர்பரைஸ் விசிட் வரலாம்ன்னு தான்........ ஆமா இவங்க யார் புதுசா?
சார், இவங்க தான் நம்ம புது ரெசிடண்ட் மானேஜர்.......... பெயர். பூர்வஜா......... வந்த இந்த கொஞ்ச நாளில் அவங்க வேளையில் ஹை ஸ்கோர் பண்ணி இருக்காங்க,........ கெஸ்ட் எல்லோருக்கும் முழு திருப்தி சார்..........
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
புவனேஸ்வரியின் "மூங்கில் குழலானதே" - காதல் கலந்த குடும்ப தொடர்...
படிக்க தவறாதீர்கள்..
ம்ம்ம்ம்.......... “பார்த்தா சின்ன பொண்ணா தெரியறாங்க” ............... சொன்ன பொழுது அவனது கண்களின் ஓரம் குறும்பும் , உதட்டின் ஓரத்தில் , மெல்லிய சிரிப்பும் தென்பட்டது........
அதை பார்த்த பூர்வியின் காதுகளில் புகையே வந்தது கோபத்தில்........... சே........ இதையே தான் மூன்று வருடங்களுக்கு முன்பும் கூறினான்......... இந்த மூன்று வருடத்தில் நாம வளரவே இல்லையா? என எண்ணினாள் பூர்வி...........
இன்னும் இந்த ஜி.எம், வேற, இவன் யாருன்னு சொல்லாமல், இருக்கார்..........
இப்பொழுது பூர்வியின் பக்கம் திரும்பிய ஜி.எம் , இவர் தான் நம்ம PSTP குரூப் ஆப் Resorts ன் சேர்மன் , மிஸ்டர்.இந்திரஜித்.............என அறிமுக படுத்தினார்.
சிறிய புன்னகையுடன், அறிமுகமே இல்லாதவரை பார்ப்பது போல் பார்த்து, கைகளை நீட்டினான் குலுக்க..................
பதிலுக்கு கையை நீட்டாமல், இரு கரம் குவித்து வணக்கம் சொன்னாள்.
உண்மையில் நியாபகமில்லையா? இல்லை, நியாபகாமில்லாதது போல் நடிக்கிறானா? அவன் முகத்திலிருந்து ஒன்றும் தெரிந்து கொள்ள முடியவில்லை பூர்வியால்...........
மூன்று வருடங்களுக்கு முன் இந்திரஜித் ஒரு ரேசர்ட் துவங்க சுவிட்சர்லாந்தில் பயிற்சி எடுத்து கொண்டிருந்தது, தெரியும்.
ஆனால் தற்பொழுது , இந்த Paradaise Resort டன் சேர்த்து Sun Island, Royal Island, Holiday Island, Fun Island என மொத்தம் ஐந்து ரேசர்டுகள், PSTP Group of Resorts க்கு சொந்தமாக உள்ளது என பூர்வி அறிவாள். .......
இந்த மூன்று வருடத்தில், அதீத வளர்ச்சி தான் என நினைத்தாள்........
அத்துடன் அறிமுக படலம் முடிந்ததென விறு விறு என நடந்து அவனது பிரத்யேக காட்டேஜ்க்கு சென்று விட்டான்.........
அங்கு அதற்கு மேல் வேலை ஏதும் இல்லாததால் பூர்வியும் தனது அறைக்கு திரும்பினாள். படுக்கையில் விழுந்து, யோசிக்க ஆரம்பித்தாள்... இங்கு வேலைக்கு வந்தது சரியா, தவறா??????????
எந்த பிரச்சனையில் இருந்து விடுபட நினைத்து, யாரை மறக்க நினைத்து, இவ்வளவு தூரம் குடும்பத்தை விட்டு, பிறந்து வளர்ந்த ஊரை விட்டு இங்கு வந்தாளோ...............
அந்த பிரச்சனையே , அவனே இங்கு கண் முன்னால்......... கண்களில் கண்ணீர் கரிக்க தான் செய்தது, படுத்து சிறிது நேரம் அழுது ஓய்ந்தாள்.
சிறிது நேரம் கழித்து அவளது மனசாட்சியே, கட்டிலின் ஓரம் அமர்ந்து அவளது தலையை கோதிவிட்டு, அம்மா சரோஜினியின் குரலில் பேச ஆரம்பித்தது..........
“பூர்வி, முதலில் அழுகையை நிறுத்து.!!!!!!!!!! நீ யாருக்காக அழுகிறியோ, அவனுக்கு உன் நியாபகமே இல்லை........ உன் கண்ணீருக்கு என்று ஒரு மதிப்பு இருக்கு, அதை வீணாக்க கூடாது.......... என அறிவுரை கூறியது........
அதன் பின் ஒரு வழியாக மன சமாதானமடைந்து முகம் கழுவி வர.........
அவளது தோழிகளும் வந்து சேர்ந்தனர். அதன் பின் ஒரே அரட்டை தான்........
ஸ்ருதி, “ உனக்கு விஷயம் தெரியுமா பூர்வி? நம்ம ஹெலனாவை பார்த்து, அந்த Hadwin ஒரே ஜொள்ளு........ நேத்து staff மெஸ்ஸில், ஹெலனாவிற்க்கு, அவனுக்கு பக்கத்தில் சீட்டெல்லாம் போட்டு வைதான்னா, பாத்துக்கோ..............
ஹெலனா, “ உனக்கு ஏண்டி பொறாமை , நீயும் தான் உன்னோட புருஷோட, சேர்ந்து தினமும் skype ல் பேசிக் கொண்டே சாப்பிடற !!!!!!!! நான் உன்னை எதாவது கேட்டனா?