(Reading time: 11 - 22 minutes)

01. நானும் அங்கே உன்னோடு... - பூஜா பாண்டியன்

Naanum ange unnodu

அன்பார்ந்த சில்ஸி வாசகர்களுக்கு, வணக்கம். நான் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக சில்ஸியின் வாசகியாக மட்டும் இருந்து வந்துள்ளேன். அதில் வரும் தொடர் கதைகளை மிகவும் விரும்பி படிப்பேன். சில நாட்களே கொட்டும் குற்றால அருவியை போன்ற சிறு கதைகளை விட வற்றாத ஜீவ நதியான கங்கையை போன்ற தொடர்கதைகளே எனது விருப்பம்.

சில்ஸியின் சிறுகதை போட்டி அறிவிப்பு ,  நாமும் எழுதலாம் என்ற எண்ணத்தை என்னுள் விதைத்தது........ எழுதிய பின் வந்த வாசகர்களின் பாராட்டுக்கள் என்னை இமயத்தின் உச்சியில் வைத்தது என்றால், நான் எழுதிய ஒரே காரணத்திற்காக அதை படித்த என் மகனது, தமிழ் வாசிப்பு எனக்கு சொர்கத்தையே காட்டியது......  அதனால் மூன்று சிறு கதைகளை முடித்து இதோ ஓர் தொடர் கதை ஆரம்பம்.

நானும் அங்கே உன்னோடு....... கதையின் தலைப்பில் உள்ளது போல் நாயகன், ஒன்று, நாயகி இருக்கும் இடம் தேடி செல்லவும் , இல்லையெனில் நாயகியை தானிருக்கும் இடத்திற்கு வரவழைக்கவும் செய்யும் குறும்புகளை, நல்ல குடும்ப காதல் காவியமாக எழுத விழைந்துள்லேன்.  தங்கள் விமர்சனத்திற்காக காத்திருக்கும் உங்கள் அன்புத்தோழி  பூஜா பாண்டியன்...........

ஐந்து கரத்தனை ஆனைமுகத்தனை

இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை

நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினை

புந்தியில் வைத்து அடி போற்றுகின்றேனே.  

பூஜை அறையில் விநாயகரை நினைத்து, கண் மூடி ,மனமுருகி பாடி முடித்த போது................ , “பூர்வி........ என்ற அம்மாவின் அழைப்பு, பூர்விஜாவை கண் விழிக்க வைத்தது........

பூர்வஜாவை வர்ணிக்க போவதில்லை........ படிக்கும் உங்களுக்கு எந்த பெண்ணின் முகம், உருவம் மிக மிக அழகுன்னு நினைக்கறிங்களோ அது  தான் நம் கதாநாயகி.........

“ இதோ வர்றேன் அம்மா” என ஹாலை அடைந்த பூர்விஜா, அங்கு விளையாடி கொண்டிருந்த, மூன்று வயது அக்கா மகள் ஜனனியை, தூக்கி மடி மீது அமர்த்தி, அப்பா பீஷ்மரின் அருகே சோபாவில் அமர்ந்தாள்.

அப்பொழுது ஜாகிங் முடித்து,  மூத்த மகள் சியாமளாவும் , அவளது கணவர் டாக்டர்.செல்ல துரையும் உள்ளே நுழைந்தனர்.

அங்கு காபி கப்புகளுடன் வந்த அவளது அம்மா சரோஜினி, அனைவருக்கும் காபியை வழங்கினார். இது தான் இவர்களது சிறிய குடும்பம்.

செல்லதுரை,” மாமா பூர்வியும் படித்து முடிச்சுட்டா....... அவளுக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிக்கலாமா?

பீஷ்மர், “ உங்கள மாதிரி நல்ல பிள்ளை யாராவது இருந்தா சொல்லுங்க  மாப்பிள்ளை”...........

சரோஜினி, “ நம்ம வீட்டோட இருக்க மாப்பிள்ளையா பாருங்க...........

ஷ்யாமளா, “ அதுக்கு அவள்  எங்களை போல் காதல் திருமணம் தான் செய்ய வேண்டும் “

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

புவனேஸ்வரியின் "மூங்கில் குழலானதே" - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்..

Dr.செல்ல துரையும், ஷ்யாமளாவும் காதலித்து மணந்து கொண்டவர்கள். டாக்டரின் பெற்றோர் மூத்த மகனது குடும்பத்துடன் மதுரையில் வசிப்பதால், இவர்கள் சென்னையில் ,  பீஷ்மரின் இல்லத்திலேயே வசிகின்றனர்.

அதனாலேயே பூர்வஜாவும் கல்யாணத்திற்கு பின்பும் தங்கள் வீட்டில் வசித்தால் நன்றாக இருக்கும் என சரோஜினி ஆசை பட்டார்.......

பூர்விஜா, “ நான் கல்யாணமே செய்ய போறது இல்லை. முதலில் எனக்கு கிடைச்சிருக்க வேலையில் போய் சேரனும். அதனால் ஒரு வருஷத்துக்கு கல்யாண பேச்சே வேண்டாம்.......... நான் படித்து முடித்த  MBA டூரிசம் அண்ட் ஹோட்டல் மேனேஜ்ட் வகுப்புக்கு ஏற்ற வேலை Maldives ல் உள்ள Paradaise Resort ல்  கிடைத்துள்ளது. இந்த மாத கடைசியில் சென்று சேர வேண்டும்.

சரோஜினி, “ என்ன பூர்வி, அது எங்க இருக்கு?

“இங்க இருந்து இரண்டரை மணி நேரம் தான் மா விமானத்தில்”........... சார்க் நாடுகளில் ஒன்று. என்னோட தோழிகள், ஸ்ருதியும் , ஹெலனாவும் , என்னோட வருகிறார்கள். இப்போ தான் மெயில் பார்த்தேன், அதான் சாமி கும்பிட்டு முடித்த பின் உங்களுக்கு சொல்லலாம்ன்னு நினைத்தேன்.

பீஷ்மரும், மற்றவர்கள் ஏதும் கூறும் முன், “சரி பூர்வி , ஆனால் அந்த ஒரு வருடம் கழித்து கல்யாணத்திற்கு எந்த தடங்களும் சொல்ல கூடாது” என்று கூறி தனது சம்மதத்தை தெரிவித்தார்...........

பூர்வியும், BBA படிக்கும் போதே , கோர்சின் கடைசி 6 மாதங்கள் சுவிட்ஸர்லாந்து சென்று, இன்டென்ஷிப் முடித்து வந்திருந்ததால், அவருக்கு எந்த ஒரு தயக்கமும் ஏற்படவில்லை, தற்பொழுது MBA கூட முடித்து விட்டாள்.

பூர்வஜாவும் தனது மடி கணினியை எடுத்து வந்து அனைவருக்கும் அந்த ரெசார்டின் புகைப்படங்களை காண்பித்தாள். அது ஒரு 5 ஸ்டார் ரெசார்ட்.  அங்கு வரும் டூரிஸ்ட் எல்லாம், ஐரோப்பில் இருந்து வருபவர்கள் தான்.  பூர்வியும் , டச், பிரஞ்ச, ஜெர்மனி என அதிக படியான மொழிகளை கற்றிருந்தது , இந்த வேலை கிடைக்க உறுதுணையாக இருந்தது........

பூர்வியின், ஆசையே உலகம் முழுவதும் சுற்ற வேண்டும். வேறுபட்ட நாடுகள்........ அங்குள்ள மனிதர்கள்,.......... அவர்களின்  கலாச்சாரம், மொழி, உணவு வகைகள் என அனைத்தையும் அறிந்து கொள்ள வேண்டும் என்பது தான்........

அதற்காகவே டூரிசம் சார்ந்த இந்த கோர்ஸில் சேர்ந்து இருந்தாள். வேலையில் சேருவதற்காக வேண்டிய துணிகள், மற்ற சாமான்கள் வாங்க இரண்டு நாட்களாக அக்காவுடன் சேர்ந்து ஷாப்பிங் என்று அலைந்து கொண்டிருந்தாள்.

அன்றும் ஷாப்பிங் முடித்து வீட்டிற்குள் நுழைந்த போது, தோட்டத்தில் இருந்து அம்மா, அப்பாவின் பேச்சு குரல் கேட்டதால் இருவரும் அங்கு சென்றனர்........

ஊஞ்சலில் அம்மா, அப்பாவின் மடியில் கால் வைத்து படுத்திருந்தார்......

பூர்வி, “ என்ன மா.....  எல்லோரும் மடியில் தலை வைத்து தான் படுப்பார்கள், ஆனா நீங்க என்னடானா அப்பா மடியில் கால் வைத்து படுத்து இருக்கீங்க?”

அம்மா, “ தலை வலித்தால் தலை வைக்கணும், கால் வலித்தால் கால் தானே வச்சி படுக்கணும், அப்ப தானே அப்பா நல்லா பிடித்து விடுவார்........

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.