(Reading time: 21 - 42 minutes)

ரு நாள் சரயூவே என்னோட காதலை ஏத்துக்குவா போலும் ஆனா உனக்கு இதையெல்லா நான் புரியவைக்க பிரம்ம பிரயத்தனம் செய்யனுமாயிருக்கு.  நீ சொன்ன மாதிரி சரூட்ட இன்னைக்கு வெட்கத்தை பற்றி பேசினா நீ சொன்ன அதே பதில் வந்தாலும் வரலாம்.  எல்லா பொண்ணுக்குமே அவளுக்கு பிடிச்சவன் மனசுக்குள்ள வந்ததும் இந்த வெட்கமும் வந்துரும்.  பொண்ணுங்களை பொறுத்த வரைக்கும் அவங்களோட மனதின் மன்னவனும் வெட்கமும் இரட்டை பிறவி..

இப்போது மறுபடியும் குறுக்கிட்ட மனம்,

அது என்ன? பொண்ணுங்களை பொறுத்த வரைக்கும்.. சிக்னல்ல வண்டியை கிளப்பறப்போ உன்னோட முகத்துல ஏதோ பாத்தேனே… அதுக்கு பேரென்ன? ஜெய்யை சீண்டியது மனம்.

அந்த நேர சுகம் இப்போதும் தன்னுள் படற வெட்கம் அவன் முகத்தை எட்டியது.  ஒத்துக்குறேன்! வெட்கம் பொண்ணுகளுக்கு மட்டும் சொந்தமில்லை… சரணடைந்தான் ஜெய். 

அப்படி வா வழிக்கு! வெட்கம் பையனுங்களுக்கு வரும்னு எனக்கு தெரியாதா? என்று பெருமை கொண்ட மனம் மேலும், நீ ரொம்ப பாவம் ஜெய்! இங்க நீ வெட்கபட்டுட்டிருக்க சரூவோ காலைலிருந்து உங்கிட்ட பேசாம முகத்தை திருப்பிட்டிருந்தா… போதா குறைக்கு இன்னைக்கு வேதிக்கை உனக்கு அவளுக்கு இடையில உட்கார சொல்லிட்டா… மனம் இதை சொல்லவும் சரயூவின் நடவடிக்கைகள் கண்முன் விரிகிறது.    

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

அனிதா சங்கரின் "அவளுக்கென்று ஒரு மனம்..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்க தவறாதீர்கள்..

ன்று காலேஜுக்கு வந்ததிலிருந்து முகத்தை திருப்பி கொண்டு தன்னிடம் பேசாமலிருக்கும் சரயூவை ஒரு குழந்தையாகக் கண்டான் ஜெய்.  வழக்கம் போல் காலேஜுக்கு வந்தவுடன் ஹாய் சொன்ன ஜெய்யிற்கு அவளிடமிருந்த எந்த பதிலும் இல்லை.  அது போதாதென்று அவன் வருவதற்கு முன்னரே வேதிக்கை தன் பக்கத்தில் உட்கார வைத்திருந்தாள் சரயூ.

“என்ன?” என்று ஜெய் தன் கண்களால் அவளை சுட்டிக்காட்டி வேதிக்கிடம் கேட்ட போது இடம் வலமாக தலையை அசைத்து உதட்டை பிதுக்கி தனக்கு எதுவும் தெரியாது என்று சமிக்ஞை செய்தான் வேதிக்.

“அங்க என்ன சைகை பண்ணிட்டிருக்க வேதிக்?” வார்த்தைகளில் அத்தனை காரம் ஏறியிருந்தது.

“அது….சும்மா! இங்க ஒரு கொசு காதுகிட்டயே சுத்திட்டிருந்ததா….அதான்….” வேதிக் முழுதாக சமாளிக்கும் முன்

“போதும் பொய் சொன்னது!” மிரட்டினாள் சரயூ.

நடந்த வேடிக்கையை கவனித்த ஜெய் வாய்விட்டு சிரித்தான்.

“இப்போ எதுக்கு கெக்க பெக்கன்னு சிரிச்சுகிட்டு? நிறுத்த சொல்லு வேதிக்.  இது ஒன்னுதா குறை; எப்ப பார்த்தாலும் இப்படி சிரிக்க வேண்டியது… என்னன்னு கேட்டா மட்டும் பதிலே வராது” ஜெய்யிடம் நேரிடையாக பேசாது அதே சமயம் தன் கோபத்தையும் அதற்கான காரணத்தையும் தெரிவித்தாள் சரயூ.

இதை கேட்டவனோ மேலும் சிரிக்க… சரயூ, “ஒரு முறை சொன்னா புரியாதா வேதிக்? அது…..” 

அவளின் பேச்சில் குறுக்கிட்டான் வேதிக், “அம்மா தாயே! உங்க சண்டைல காலைல என் தலைய உருட்டாம விட்டுடுங்கம்மா.  ஆனாலும் ஒரு ஃப்ரெண்டா நான் உனக்கு என்ன சொல்றேன்னா மச்சா…பிரச்சனை என்னன்னு எனக்கு தெரியலைன்னாலும் தப்பு உன் மேலதா இருக்கும்.  ஸோ நீ இப்பவே சரயூக்கு சாரி சொல்லி சரண்டர் ஆயிடு”

“உன்னை காப்பாத்திக்க என்னை மாட்டிவிடற? பரவாயில்ல விடு… பொழச்சுப்போ!” வேதிக்கிற்கு பதிலளித்த ஜெய் சரயூவை நோக்கி

“சாரி சரூ! வேணும்னே அப்படி பண்ணலை.  மைதியோட அண்ணன் கூப்பிடவும் அவசரமா போக வேண்டியிருந்தது”

எல்லாவற்றையும் கேட்டு கொண்டிருந்தவள் ஜெய் மன்னிப்பு கேட்கவும் அவனுக்கு முதுகு காட்டி திரும்பி உட்கார்ந்து அவனின் மன்னிப்பை புறக்கணித்தாள்.

வளின் செயலை நினைத்து இப்பொதும் ஜெய்யின் முகத்தில் சிறு புன்னகை பூத்தது.

“உன்னை எப்படி சரி செய்யனும்னு நல்லா தெரியும் சரூ.  நாளைக்கு நீயே வந்து எங்கிட்ட பேசுவ” தனக்கு தானே சொல்லி கொண்டான் ஜெய்.

கருடா மாலின் ஸ்கேரி ஹௌஸ் முன்னால் நின்றிருந்தனர் நால்வரும்.  ராகுலின் மேலிருந்த கோபத்தினால் மூன்று நுழைவுச் சீட்டுகளை மட்டும் வாங்கியிருந்தாள் மைத்ரீ. 

இதையறிந்தவுடன் ஜெய், “என்ன மைதி இது? நீ பண்ணியிருப்பது கொஞ்சங்கூட சரியில்லை.  நாம நாலு பேருன்னு தெரியாதா?” தோழியை கடிந்துகொண்டவன் மற்ற இருவரிடம்,

“சாரி ராகுல்! சாரி சரூ! நான் போய் இன்னொரு டிக்கெட் வாங்கிட்டு வரேன் இருங்க!”

சரியாக அந்த சமயத்தில் ராகுல் ஃபோன் சிணுங்கியது.  அதன் திரையைப் பார்த்தவனோ, “நில்லு சஞ்சய்! ஒரு முக்கியமான கால்… யூ கய்ஸ் கார்ரி ஆன்” அழைப்பை ஏற்று பேசியபடி அங்கிருந்து நகர்ந்தான் ராகுல்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.