(Reading time: 7 - 14 minutes)

13. மனதோர மழைச்சாரல் நீயாகினாய் - சகிManathora mazhaichaaral neeyaaginaai

இது என்னுயிரே உனக்காக கதையின் மூன்றாவது பாகம்.

முதல் பாகம் 'என்னுயிரே உனக்காக' படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.

இரண்டாம் பாகம் 'சதி என்று சரணடைந்தேன்' படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

"ங்களம் பகவான விஷ்ணும்!மங்களம் கருடத்பஜ!மங்களம் குண்டரீக்கார்ஷூ!மங்களாய தனோ ஹரி!"-புரோகிதர் மந்திரங்கள் பாட,வரனானவன் நெய்யினை அக்னியில் வார்த்துக் கொண்டிருந்தான்.அவனது முகம் கல்லாய் இருந்தது.அது எந்த உணர்ச்சியும் இல்லை!!துளியும் ஆனந்தமில்லை!!அவன் எவ்வளவோ போராடினான்.ஆனால்,அவன் தந்தையை மீறி அவனால் ஏதும் செய்ய இயலவில்லை.திருமணத்தை தடைச் செய்யும் போராட்டத்தில் பகிங்கரமாக தோல்வியுற்றான் அவன்.

"பொண்ணை கூட்டிட்டு வாங்க!"-புரோகிதர் கூறிய சில நிமிடங்களில் தோழியர் புடைச்சூழ இறங்கி வந்தாள் கீதா.அவர்களில் எந்தப் பரிகாசமும் அவளது செவிகளில் விழவில்லை.மௌனமாக அவன் அருகில் வந்தமர்ந்தாள் அவள்.

"கற்பூரகாரம் கருணாவதாரம் ஸந்சாரஸாரம் பிஜஹேந்த்ரஹாரம்! ஸதானஸந்தம் ஹிருதயான விந்தே!பவன் பவானி சஹிதம் நமாமீ!"-அவர் மீண்டும் ஸ்தோத்திரம் கூற,இருவரும் ஒருசேர அக்னியில் நெய் வார்த்தனர்.

மீண்டும் சில மந்திரங்களை படித்தவர்,

"கெட்டிமேளம்!கெட்டிமேளம்!"என்றார்.மங்கல நாதங்கள் விண்ணவரையும் தன்பால் ஈர்ப்பதாய் முழங்கின.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

நிஷாலக்ஷ்மியின் "வானவிழியழகே..." - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்..

பவித்ரமான மாங்கல்யத்தை புரோகிதர் தாம்பூலத்தில் வைத்து நீட்ட,அதை கரத்தில் எடுத்தவன்,மெல்ல கீதாவின் அருகே கொண்டு சென்று அவளது கழுத்தில் அணிவித்தான்.

"ஸர்வ மங்கல மாங்கல்யே!ஷிவே ஸர்வார்த்த ஸாதிக்கே!ஷரண்யே த்ரியம்பஹே கௌரி நாராயணி நமேஸ்துதே!"-சக்தி வாய்ந்த மாங்கல்ய மந்திரம் ஓதப்பட்டு அத்திருமணம் இனிதே முடிந்தது.கீதாவின் கண்கள் மௌனமாக துளிக் கண்ணீரை சிந்தின.ஒரு பெரும் பொறுப்பினை முடித்த திருப்தி அங்கிருந்த பெரியோர்களின் முகத்தில் பளிச்சிட்டது.

சபையோரின் முன்னிலையில் அவளது கரத்தினைப் பற்றியவன்,பவித்ரமான அக்னியை மும்முறை வலம் வந்து,அந்த அக்னியை தங்களின் பந்தத்திற்கு சாட்சியாக்கி,அப்பந்தத்திற்கு அங்கீகாரம் வழங்கினான்.

"இனி வாழ்வனைத்தும்,எத்துயரம் எதிர் வந்தாலும்,எவர் என்ன கூறிடினும்,அகண்டமே எதிர் நின்றாலும் உனைக் காக்கும் பொறுப்பினை நான் ஏற்கிறேன்!"-என்ற வாக்கு மௌனமாய் அவனால் வழங்கப்பட்டது.

னிமையில் அமர்ந்திருந்த ருத்ராவின் கண்கள் தன்னிச்சையாக காரணமின்றி கலங்கின.பெரும் பொக்கிஷத்தை நழுவவிட்ட வலி இதயம் முழுதும் பரவி வலித்தது.

"அப்பா!"

"ம்...!என்ன செல்லம்?"

"எதுக்கு அழுறீங்க?"

"அ...அழலை!தூசி விழுந்துடுச்சு கண்ணா!அதான்!"

"நான் ஊதி விடட்டா?"-என்றவன் உயரப் பற்றாக்குறையால் தன் தந்தையின் மேல் ஏறி,அவன் கண்களில் ஊதினான்.அவ்வளவு நேரமும் அவன் மனம் கொண்ட சஞ்சலம்,நொடி பொழுதில் அம்மழலையின் செய்கையால் முழுதும் தொலைந்தது.

மெல்லியப் புன்னகை அவனது இதழோரத்தில் மலர்ந்தது.பல ஆண்டுகளுக்குப் பின் திரும்பிய புன்னகை அது!!!

"அப்பாக்கு சரியாயிடுச்சு!"-என்றான் புன்னகை மாறாமல்!!

"ம்...நீங்க கண்ணாடி போட்டுக்கோங்க!அப்பறம்,தூசி விழவே விழாது!"

"ம்...சரிங்க சார்!போட்டுட்டா போச்சு!"-தன் மகனை இறுகப் பிடித்தவன்,அப்படியே மெத்தையில் சாய்ந்தான்.அவனை அப்படியே தூக்க,அக்குழந்தை ஆனந்தத்தில் கத்தினான்.

பெரும் மாற்றம் தான்!!இவையனைத்தும் நிகழ்ந்ததிற்கு பெரும் காரணம் அவள் தான்!!

அனைத்து மாற்றங்களையும் நிகழ்த்திவிட்டு,சென்றுவிட்டாள்!!உண்மையில் அவள் கரம் பற்றியவன்,பெரும் பாக்கியவான் தான்!!இனி,அவன் வாழ்வில் அவள் என்றும் நுழைய வாய்ப்பில்லை!!!

ரவு நேரம் தனிமை அவளை வெகுவாகக் கொன்று கொண்டிருந்தது!!இனி எதுவும் சாத்தியமில்லை என்ற உணர்வு,அவளை வெகுவாக பாதித்தது!!ருத்ரா அவள் வாழ்வில் வராதிருந்திருந்தால்,இந்த இல்லற வாழ்வு இனிதாய் துவங்கி இருக்கும்!!இறைவன் என் வாழ்வை சிவாவோடு கணக்கிட்ட வேளையில் எதற்காக விதி ருத்ராவை என் வாழ்வில் அறிமுகப்படுத்த வேண்டும்??மனம் வலித்தது!!

இனி நிகழப் போவது என்னும் எண்ணமே பெரும் கலக்கத்தை வெளிப்படுத்தியது.ஏதேதோ சிந்தித்துக் கொண்டிருந்தவளின் கவனத்தை கலைத்தது கதவு திறக்கும் ஓசை!!சட்டென இதயம் உச்சத்தை அடைய,செய்வதறியாது திகைத்து நின்றாள் கீதா.

சில நொடிகள் கரைய,அவளருகே பெரும் இடைவெளி அளித்து வந்து நின்றான் சிவா.

அவள் மெல்ல நிமிர்ந்து அவனது முகத்தைக் கண்டாள்.அதில்,எந்த சலனமும் இல்லை.

"இரண்டு நாள்ல ஆஸ்ரேலியா கிளம்புறேன் கீதா!"

".............."

"நான் எவ்வளவோ முயற்சி பண்ணேன்!என்னால இதை தடுக்க முடியலை!உன் கனவுகள் எல்லாத்தையும் அழிச்சிட்டேன்!மன்னித்துவிடு!"-அவன் வார்த்தைகள் அவளது இதயத்தை சதக்கூறிட்டன.

"நீயும் இப்போ என் கூட வர கட்டாயத்துல இருக்க!கவலைப்படாதே!என்னால உனக்கு எந்தத் தொல்லையும் இருக்காது!மூணு மாசத்துல உனக்கு டிவோர்ஸ் கொடுத்துடுறேன்!இந்த நாடகத்தை ஒரு முடிவுக்கு கொண்டு வந்துடுறேன்!"-என்றான் புன்னகையோடு!!

அவன் முகத்தை நேரடியாக சந்தித்தவளின் மனம் திக்கென்றது!!

ஆம்...!அவள் கண்டாள்!அவனது அந்தப் புன்னகையில்,அவன் விழிகளில் அவனதுக் காதலை முழுதுமாக கண்டாள்!!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.