(Reading time: 11 - 22 minutes)

ன்று மீட்டிங் முடிக்கும் போது “சுபத்ரா நீயும் இவர்களோடு கார்கில் மலை அடிவாரத்திற்கு செல்.. அதோடு உன்னுடைய மொபைல் தான் சர்வர் ஆக use செய்ய போறோம்.. ஏன் என்றால் அதில் எதாவது ப்ரோப்லேம் என்றால் எப்படியாவது எல்லாருக்கும் தகவல் சென்று சேர்க்க வேண்டியது உன் பொறுப்பு “ என,

சுபா மனதுக்குள் வாவ் என்றபடி வெளியில் “எஸ் சார் “ என்றாள்.

இவர்கள் மீட்டிங் முடித்து வெளியே வரவும் நிஷா வரவும் சரி ஆக இருக்க, எல்லோரையும் பார்த்து ஆச்சர்யபட்ட நிஷா வேகமாக அருகில் வந்தவள் மற்றவர்கள் கண்களில் இருந்த கவனத்தை பார்த்து தானும் விறைப்பாக எல்லோருக்கும் சல்யுட் வைத்தாள்.

“சார்.. I am  நிஷா.. reporting as CSD incharge for deputation ..” என,

அவளிடம் இராணுவ தளபதி “எஸ் நிஷா.. இங்கே ஏற்கனவே உள்ள CSD யில் சில problem இருக்கு. அதை நாங்க சரி செய்ய முயற்சிக்கிறோம்... ஆனால் அதுக்குள்ளே இங்கே அவசர நிலை ஏற்படும் போல் இருப்பதால், எங்களுக்கு நம்பிக்கையான CSD incharge தேவை.. நீங்க உண்மையாவும், சரியான சமயத்தில் தேவையான பொருட்கள் கிடைக்கவும் ஏற்பாடு செய்யணும்.. எந்த காரணமும் எங்களுக்கு சொல்ல கூடாது.. “ என,

“எஸ்..சார்.. I will do my best சார் “ என்றாள்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

பூஜா பாண்டியனின் "நானும் அங்கே உன்னோடு" - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்..

பெரிய அதிகரிகள் அனைவரும் கிளம்பவும், சிறியவர்கள் நின்றிருக்க

ராகுல் நிஷாவை பார்த்து இருக்க, நிஷாவோ “ஹேய் ..சுறா. உன்னை ரொம்ப மிஸ் பண்ணினேன் டா .. ரொம்ப ஹாப்பி ஆ இருக்கு “

“அடிபாவி .. உன் நினைப்பிலே உருகிட்டு இருக்கிற உன் லவர் இங்கே நிற்கிறேன்.. நீ என்னடா என்றால் அந்த வாலு கிட்டே டயலாக் சொல்றியே.. இது நியாயமா ?”

“பச்ச்.. போங்க ரகு.. உங்க கிட்டே அப்போ அப்போ பேசிட்டு இருக்கேன்.. ஆனால் சுறா கிட்டே பேசியே எவ்ளோ நாள் ஆச்சு..?”

சுறா.. நிஷாவிற்கு hifi கொடுத்த படி “ஹலோ .. ப்ரோ.. நானும் வந்ததுலேர்ந்து பார்த்துட்டு இருக்கேன்.. ஆபீசர்ஸ் முன்னாடி நல்லா சீன் போட்டுட்டு இப்போ வந்து உருகுறேன்.. மருகுறேன் ன்னு ரீல் விடுறீங்களோ ..” என்று சொல்ல,

“மை டியர் சிஸ்டர்... நோ மா.. மீ பாவம்.. “

இதை பார்த்துக் கொண்டு இருந்த பரத் “அட பாவி.. இது எப்போலேர்ந்து .. எங்கிட்ட சொல்லவே இல்லை. . அம்மாடி சுறா.. நீ கூட இந்த அண்ணன் மறந்துட்ட பார்த்தியா ?” என

“௦௦7.. உங்களுக்கு இவங்க குரூப்லே யார் எல்லாம் தெரியும்நு எனக்கு தெரியாதே.. தெரிஞ்சி இருந்தா வந்த அன்னிக்கே  70 mm ரீல் ஒட்டிட்டு இருக்க மாட்டேன்..” என, எல்லோரும் சிரித்தனர்.

“அது சரி.. என்ன ஆபரேஷன் க்கு விஜய் ன்னு பேர் வச்ச?”

“ஏன் அங்கியே சொன்னேனே.. விஜய் என்றால் வெற்றி என்று “

“ஆனால் அதோட அந்த அப் க்கு picture உம bow & arrow வச்சிருக்க.. அர்ஜுனனுக்கு இன்னொரு பெயர் விஜயன் தானே.. அத வச்சிருப்பயோன்னு நினைச்சேன்.. “

“அதுவும் தான் காரணம்.. அவர்தானே இந்த ஆபரேஷன்க்கு கிட்டத்தட்ட லீடர் மாதிரி.. அதுதான் அந்த பேர் வைச்சேன்..”

எல்லோரும் கோரசாக ஒஹ் என்றனர்.

பின் எல்லோரும் கிளம்ப அர்ஜுன், ராகுல், நிஷா , சுறா இருவரும் ஒரு ஜீப்பிலும், மிதுன் தனியாக ஒரு ஜீப்பில் லடாக் நோக்கியும், பரத் தனியாக வேறு ஒரு ஜீப்பில் மற்றொரு ஊருக்கும் சென்றனர்.

போகும் வழியில் ராகுலும், நிஷாவும் ஒருவரோடு ஒருவர் பேசிக் கொண்டு வர, சுபா அர்ஜுனிடம்

“கேப்டன்.. இப்போ இந்த அப் உங்களுக்கு ஓகே யா..?”

“பெர்பெக்ட் சுபா.. நல்ல டிசைன் பண்ணிருக்க.. ஆமாம்.. நீ visual communication தானே படிச்ச.. அப்புறம் எப்படி இந்த programming எல்லாம் எப்படி தெரியும்.. ?”

“எனக்கு சாப்ட்வேர் இண்டரஸ்ட் உண்டு.. இன்ஜினியரிங் சேர்ந்தா எக்ஸ்ட்ரா ஒரு இயர் போகுமேன்னு BSC சேர்ந்தேன்.. ஆனால் பிரைவேட் சாப்ட்வேர் programming படிச்சேன்.. அதுதான் இப்போ கை கொடுத்தது.. “ என,

“வாவ்.. சுறாக்குள்ளே இவ்ளோ திறமைகளா.. ? இது எனக்கு தெரியாம போச்சே?”

“ஹா.. நாங்கலாம் யாரு.. ? சூரியனுக்கே டார்ச் அடிச்ச பரம்பரைலே வந்தவங்க..”

“சஸ்.. இப்போவே கண்ணை கட்டுதே..”

சுறா அவனிடம் “அர்ஜுன்.. “ என்று பத்திரம் காட்டினாள்.

கொஞ்சம் கொஞ்சமாக தன்னை அறியாமல் அர்ஜுனிடம் நெருக்கம் காட்ட ஆரம்பித்து இருந்தாள் சுபத்ரா.. அர்ஜுன் மனதில் இந்த ஆபரேஷன் முடியும் முன் தன் மனதில் உள்ளதை சுபத்ராவிடம் சொல்லி விடலாமா என்ற எண்ணம் தோன்ற ஆரம்பித்து இருந்தது.

மழை பொழியும்

Episode 30

Episode 32

{kunena_discuss:1031}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.