(Reading time: 12 - 24 minutes)

32. பாயும் மழை நீயே - தேவி

Paayum mazhai neeye

ராணுவ உயர் அதிகாரியின் உத்தரவின் பேரில் அர்ஜுன், சுறா, ராகுல், நிஷா நால்வரும் லடாக் பகுதியில் இருந்து கார்கில் அடிவாரம் சென்றனர்.

அங்கே சென்ற பின் அர்ஜுன் , ராகுல் தனியாக பிரிந்து , சுபா, நிஷா இருவரையும் வேறு ஒரு ராணுவ பாதுகாப்பு குழுக்களோடு லே பகுதிக்கு அனுப்பி வைத்தனர்.

ராணுவ உயர் அதிகாரி அர்ஜுன், ராகுல் இருவரையும் தனி தனி குழுக்களாக பிரித்தார். அர்ஜுன் தலைமையில் கிட்டத்தட்ட பத்து பட்டாலியன் களும், ராகுல் தலைமையில் ஏழு பட்டாலியன் களும் , உயர் அதிகாரியின் தலைமையில் ஒன்பது பட்டாலியன் களும் இயங்க ஆரம்பித்தது.

இவர்கள் மூவரும் இணைந்து தங்கள் திட்டங்களை சுபத்ரா உருவாக்கின app மூலம் பரிமாறிக் கொண்டனர். தங்கள் கீழ் உள்ள வீரர்களை தயார் நிலையில் வைத்து இருந்தனர். பரத், மிதுன் இருவரின் தகவலுக்காக காத்து இருந்தனர்.

இவர்கள் மீட்டிங் முடிந்து வந்த முதல் இரண்டு நாட்கள் தாக்குதலுக்காக தயாராக இருந்தனர். ஆனால் சரியான உத்தரவு வராததால் முன்னேறாமல் நின்றனர்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

மீராவின் "புத்தம் புது காலை..." - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்..

மூன்றாம் நாள் காலை முதல் தகவல் மிதுன் இடம் இருந்து வந்தது. மிதுன் தன் மொபைல் மூலம்

“ஆபரேஷன் விஜய் – காஷ்மீர் போராளிகளுக்கும் ஆக்கிரமிப்பாளர்களுக்கும் சம்பந்தம் இல்லை. இங்கே முற்றிலும் எதிரி நாட்டு வீரர்கள் தான் இருக்கின்றனர். “

என்ற தகவல் அனுப்பி வைத்தான்.

இந்த தகவல் சுபத்ரா மூலம் மற்ற அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதை பார்த்து திடுக்கிட்ட இந்திய அதிகாரிகள்

“தகவல் சரிபார்க்கப்படும் வரை காத்து இருக்கவும்”

என்று அனுப்பி வைத்தனர்.

அடுத்த ஒரு மணி நேரத்தில் இந்திய அதிகாரிகளிடம் இருந்து

“தகவல் சரியானது. ஆபரேஷன் விஜய் வில் ஸ்டார்ட் from now”

என்ற சிக்னல் கொடுக்கப்பட்டது.

அர்ஜுன் யார் பெயரையும் தெரியபடுத்தாமல்,

“லே highway, திராஸ், tiger ஹில் “

என்ற தகவல் கொடுக்கவும், யார் எங்கே போக போகிறார்கள் என்று குழம்பினாள் சுபத்ரா. அவளுக்கு தெரிந்த வரை மூன்று பிரிவாக பிரிந்து தாக்குதல் நடத்த போகிறார்கள் என்பது மட்டுமே. இப்போ யார் , யார் எங்கே என்று யாரிடம் கேட்பது என்று தெரியவில்லை.

இந்த தகவலை அவள் எப்படி மற்ற அதிகாரிகளுக்கு கொடுப்பது என்றும் தெரியவில்லை. வெகு நேரம் யோசித்து விட்டு, நேரடியாக அர்ஜுனுக்கோ, ராகுலுக்கோ தொடர்பு கொள்ள முடியாது என்பதால். பரத்க்கு பேச எண்ணியவள் , அவன் எதிரி நிலை அறியும் முயற்சியில் இருப்பதால் , பரத்தை trace பண்ண வாய்ப்பு அதிகம் என்று கைவிட்டாள்.

பின் மிதுன்க்கு அடித்தவள், இவர்கள் பர்சனல் கால் பேச தனி மொபைல் வைத்து இருப்பதால் அதில் அடித்தவள், மிதுன் எடுக்கவும்,

“பாஸ் .. உங்ககிட்ட ஒரு டவுட் கேட்கணும் “

“அட.. சுறா வுக்கே டவுட் ஆ ? முதலில் இதை BBC லே breaking நியூஸ் போட ஏற்பாடு செய்து விட்டு உன் சந்தேகத்தை தீர்க்கிறேன்..”

“பாஸ் .. எனக்கு இதுதான் முதல் வேலை.. அதான் கொஞ்சம் செய்யறதுக்கு முன்னாலே யோசனை கேட்கலாம் பார்த்தேன்.. ரொம்ப ஒட்டுனீங்க .. என்ன செய்யணுமோ செஞ்சுட்டு அப்புறம் பதில் சொல்லும் நிலைமை வந்தா ஹாயா உங்கள கை கட்டிட்டு போய்டுவேன்.. எப்படி வசதி..?”

“ஆத்தா ... மகமாயி.. உன் சந்தேகத்தை கேளு..”

அர்ஜுன் மெசேஜ் பற்றி சொல்லி விட்டு,

“இதில் யார். யார் எங்கே என்று தெரியபடுத்த வேண்டாமா.. மிதுன் சார்..?”

“வேண்டாம் சுபா.. யார் பெயரும் இப்போதைக்கு வெளியே தெரியகூடாது.. நீ அப்படியே போட்டு விடு “

“ஏன் சார்.. ? நம்ம சைடு information safe தானே..”

“இந்த நிலைமையில் எதையும் safe என்று நினைக்க முடியாது சுபா... எதிரி நமக்குள்ளும் இருக்கலாம்.. அதனால் அநேகமாக இனி வரும் தகவல்கள் எல்லாமே இதே போல் மொட்டையாகதான் வரும்.. & நீயும் அதை அப்படியே forward பண்ணி விடு.. புரிய வேண்டியவர்களுக்கு புரியும்..”

“சரி.. மிதுன் சார்.. வைத்து விடுகிறேன் “ என்றவள் ஒரு நிமிடம் தயங்கி விட்டு “சார்... கேப்டன் க்கு எந்த ஆபத்தும் இல்லையே.. நம் மக்கள் எல்லோரும் safe தானே..?” என்று வினவினாள்.

சுபாவின் உணர்வுகள் புரிந்தவனாக “இப்போ வரை எந்த பிரச்சினையும் இல்லை மா.. இது இப்படியே தொடரும் என்று நம்புவோம் .. நிச்சயம் வெற்றி நமக்குதான் “ என்று முடித்தான் மிதுன்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.