(Reading time: 8 - 15 minutes)

30. பாயும் மழை நீயே - தேவி

Paayum mazhai neeye

சுபத்ரா தன் வேலையை முடித்து விட்டு ரா அதிகரிக்காக காத்து இருந்த பொழுது அவரே அவளை தேடி வந்தார். லடாகில் உள்ள ராணுவ அலுவலகத்தில் சுபாவிற்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டு இருந்தது.

சீப் ஆபீசர் விக்ரமனோடு ஆர்மி ஜெனரல் அவள் இடத்திற்கு வந்தார்கள்.

சுபத்ராவை அறிமுகபடுத்திய விக்ரமன்,

“சுபா.. நாம் discuss செய்தபடி சாப்ட்வேர் உருவாக்கி விட்டீர்களா?”

“ எஸ் சார்.. இப்போவே டெமோ பார்க்கலாம் சார்.”

“குட்.. இன்னும் half அன் அவர் லே ஒரு மீட்டிங் arrange செய்துர்க்கோம்.. நீங்க அங்கே டெமோ காண்பிங்க...”

“ரைட் சார்.”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

பிந்து வினோத்தின் "மலர்கள் நனைந்தன பனியாலே..." - காதல் என்பது இரு மனமுடிச்சு... εїз…!

படிக்க தவறாதீர்கள்..

அவர் சொன்ன அரை மணி நேரத்தில் அந்த பில்டிங் விட்டு சற்று தள்ளி ஒரு டென்ட் போடப்பட்டு இருந்தது.. விக்ரமன் அங்கே தான் மீட்டிங் என்று சொல்லி விட்டு சென்றதால், சுபாவும் அங்கே சென்றாள்.

வெளியில் பார்க்க சாதாரணமாக தெரிந்த அந்த டெண்டிற்குள் சென்ற சுபத்ரா அசந்து விட்டாள். அது ஒரு MNC conferrence ஹால் க்கு சமாமாக இருந்தது. மிகபெரிய ப்ரொஜெக்டர் ஸ்க்ரீன், கிட்டத்தட்ட ஒரு இருபது பேர் அமரும் அளவிற்கு டேபிள் chair, அதோடு வெளிச்சத்திற்கு லைட் செட்டிங்க்ஸ் எல்லாம் பக்காவாக இருந்தது.

வெளிப்புற கர்டைன் எளிதில் தாக்குதலுக்கு உட்படாத வண்ணம் கனத்த துணியால் இருந்தது. அதுவே உள்ளே நடப்பது வெளியில் கேட்காத வண்ணம் பாதுகாப்பாகவும் பயன்பட்டது.

pmn

தற்போது சுபத்ராவிற்கு இந்த டென்ட் பெரிய அளவில் உபயோகம் இல்லை என்றாலும், மற்ற இடங்களில் இது மிக பெரும் பயனாக இருக்கும் என்று எண்ணினாள்.

தன் வெப்சைட் டிசைன் explain செய்ய தேவையான முன்னேற்பாடுகளை செய்து வைத்தாள். அவள் முடிக்கவும் , எல்லோரும் வரவும் சரியாக இருந்தது.

அவள் எதிர்பார்த்தது விக்ரமன் சார், அவரோடு ஆர்மி ஜெனரல் இன்னும் சில அதிகரிகள் தான். ஆனால் வந்ததோ கிட்டத்தட்ட பதினைந்து பேர்.. அவளுக்கு சட்டென்று பதட்டம் ஏற்பட்டது.

ராணுவ மந்திரியோடு, தளபதி , உளவுத்துறை அதிகாரி விக்ரமன், அவர்களோடு கூட அர்ஜுன், ராகுல், பரத், மிதுன் இவர்கள் தவிர இன்னும் சில கேப்டன் எல்லோருமே வந்தனர்.

அதை பார்த்ததும் சுபத்ராவிற்கு சட்டென்று ஒரு பயம் பிடித்து கொண்டது. முதல் முதலாக இதை போல் ஒரு மீட்டிங் என்பதால் மிகவும் படபடப்பாக இருந்தது. அவள் பார்வை எல்லோரையும் சுற்றி வர, அர்ஜுன் கண்டதும் அவனை நேராக பார்த்தாள். அர்ஜுன் அவளின் முக பாவனைகளை வைத்து அவள் மன நிலையை கண்டவனாக யாரும் அறியாமல் கண் மூடி திறந்து தைர்யம் சொன்னான். அதை ஏற்றவளாக தன் பார்வையை மற்றவர்களிடம் திருப்பினாள் சுபத்ரா..

அந்த நிலையிலும் நம்ம சுபத்ரா மனதில் “அட.. அட.. என்ன ஒரு செட் up.. சாண்டில்யனின் யவன ராணி கதையில் வரும் கரிகாலன் காட்டுக்குள் கூட்டும் மந்திர ஆலோசனை சபை மாதிரி இருக்கு.. இதில் இரும்பிடர் தலையர் ஆக மந்திரி, அடிகளார் ஆக விக்ரமன் சார், இளஞ்செழியன் ஆக அர்ஜுனும் கற்பனை செய்து கொண்டாள். மன்னர் ராஜ்ஜியம் முடிந்து விட்டதால் கரிகாலன் போஸ்ட்க்கு தான் ஆள் சிக்கவில்லை..” என்று கவுன்ட்டர் பார்ட் நடத்திக் கொண்டு இருந்தாள்.

அவளின் முகபாவம் பார்த்த அர்ஜுன், “ஐயோ .. மனசுக்குள்ளே யாரை ஓட்டிட்டு இருக்களோ” என்ற எண்ணம் ஓடியது.

விக்ரமன் அவளை எல்லோருக்கும் மீண்டும் அறிமுகபடுத்தி விட்டு, அவளின் டெமோ ஆரம்பிக்க சொன்னார்.

அவளின் டிசைன் எல்லாம் explain பண்ணி முடிக்கும் வரை யாரும் எதுவும் நடுவில் கேட்கவில்லை. அவள் முடிக்கவும் முதலில் விக்ரமன்,

“ஓகே.. guys.. இப்போ இதிலே உங்களுக்கு வரும் சந்தேகங்கள், மற்றும் ஆலோசனைகள் சொல்லலாம்.” என , அர்ஜுன் எழுந்தான்.

“சாரி.. சார்.. எனக்கு இந்த கான்செப்ட் அச்செப்ட் செய்ய முடியல.. “  என்று கூற, எல்லோரும் திடுக்கிட்டாலும் , முதலில் சுதாரித்த சுபத்ரா மனதிற்குள் “கேப்டன் பிரபாகரா.. என் டிசைன் நீ குறை சொல்றியா? இரு .. இவரை தனியா கவனிக்கலாம்..” என்று எண்ணியவள்,

வெளியில் “மேஜர்.. ஏன் இந்த டிசைன் உங்களுக்கு பிடிக்கல..?” என்று கேட்டாள்.

அர்ஜுன் “நான் வெப்சைட் டிசைன் பத்தி சொல்லல... அதோட அந்த கான்செப்ட் தப்பு என்று சொல்கிறேன்..”

மனதிற்குள் மீண்டும் “என்ன குற்றம் கண்டீர்.. சொல்லிலா.. அல்லது பொருளிலா?  நக்கீரர் மாதிரி கேள்வி கேட்கலாமா ?”  எண்ணிய சுபத்ரா

வெளியில் அமைதியாக “நீங்கள் கூறுவது புரியவில்லை மேஜர் .. ?” என்றாள்.

அவளின் மனம் கொடுக்கும் கவுன்ட்டர்களை எண்ணி உள்ளுக்குள் சிரித்தவனாக ,

“உங்களை வெப்சைட் டிசைன் பண்ண சொன்னது யாரு?”

“விக்ரமன் சார்..”

“விக்ரமன் சார்.. நீங்க இந்த வெப்சைட் கான்செப்ட் ஏன் எடுத்தீங்க என்று தெரிஞ்சிக்கலாமா?” என்று வினவினான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.