(Reading time: 10 - 20 minutes)

18. நிர்பயா - சகி

Nirbhaya

னதின் ஆக்ரோஷ நிலை உயிரைக் குடிக்கும் சக்தி பெற்றது.நாம் பல நேரங்களில் தனிமையை அதிகமாய் ஏற்றிருப்போம்!விரும்பியவர்கள் நம்மை நீங்கி இருப்பர்.நமது.தனிப்பட்ட விருப்பம் சபை நடுவே நம்மை சிரம் தாழ வைத்திருக்கும்!இன்னும் பல சூழல்களில் மனமானது ஆக்ரோஷம் கொள்கிறது!!அச்சமயம் அதனை கட்டுப்படுத்த அந்தப் பரம்பொருளாளும் இயலாமல் போய்விடுகிறது!!அத்தகு சந்தர்பங்களில் தவறிழைக்க துவங்குகிறோம்.அது நம் மனதை வேறு பாதையில் கொண்டு செல்கிறது!!யாவரும் தனது தவறுகளை ஒப்புக் கொள்வதில்லை.அவர்கள் ஒரு பொய்யான முகமூடியை அணிந்து வாழவே விருப்பம் கொள்கின்றனர்.ஆனால் உண்மை முகம் அழகானது!!நாம் தான் நமது தீய குணங்களால் அதனை மறைக்க முயல்கிறோம்!!இது விதி விலக்கு என்று எவரும் இல்லை என்று தான் கூற தோன்றுகின்றது!சிந்தித்து தான் பாருங்களேன்...

அந்த அறையின் கதவை அவள் எவர் கூறியும் திறக்கவில்லை.மனம் முழு வேதனையில் உழன்றுக் கொண்டிருந்தது!!

"இனி என்ன இருக்கிறது இந்த வாழ்வில்?ஏன் எனக்கு இவ்வாறு சோதனைகள்?இதற்கு தான் உயிர் பிக்ஷை நல்கினானாஅந்த பரந்த மனம் கொண்ட இறைவன்?எனை வேதனையுற செய்வதில் அவனுக்கு என்ன இவ்வளவு ஆனந்தம்??"-அழுது.புலம்பினாள் அவள்.

"ஏ...நிர்பயா!"-வெகு நேரம் தட்டி பார்த்து பொறுமை இழந்தவராய் கதவை திறந்து உள்ளே வந்தார் பார்வதி.அறைமுழுதும் கும்மிருட்டு!!அனைத்து விளக்குகளையும் அணைத்திருந்தாள் அவள்.திரைச்சீலைகளின் உதவியோடு சாளரத்தின் வழி வரும் வெளிச்சமும் தடை செய்யப்பட்டிருந்தது.

தரையில் அமர்ந்தப்படி கண்களை மூடி இருந்தவளின் கண்ணீர் மட்டும் கன்னங்களில் வழிந்தப்படி இருந்தன.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

தேவியின் "பாயும் மழை நீயே..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்க தவறாதீர்கள்..

"மா!என்னடா ஆச்சு?"-பதறியப்படி அவளருகே சென்றார்.

"என்னை கொஞ்ச நேரம் தனியா விடுங்க பாட்டி!எந்தக் கேள்விக்கும் பதில் சொல்ற நிலையில நான் இல்லை!"

"..............."-எந்த பெருந்துன்பத்திலும் இதுபோன்ற வார்த்தைகளை அவள் உதிர்த்ததில்லை.ஆனால் இன்று...??

"என்னம்மா ஆச்சு?ஏன் இப்படி உட்கார்ந்திருக்க?"-சில நொடிகள் அங்கு கனத்த மௌனம்!!

அந்த மௌனத்தின் பின்அவள் என்ன நினைத்தாளோ தனது பாட்டியை அணைத்துக் கொண்டு அழ ஆரம்பித்துவிட்டாள்.

"என்னம்மா?என்னாச்சு?ஏன் அழுற?"

"..........."

"சொல்லும்மா!"

"நா...நான் சோர்ந்து போயிட்டேன் பாட்டி!எனக்கு மட்டும் ஏன் இந்த சோதனைகள் எல்லாம் நடக்குதுன்னு புரியலை!"

"என்ன ஆச்சு?"

"எனக்கு நடந்த ஆக்ஸிடண்ட்ல நான் தாய்மை அடையுற தகுதியை இழந்துட்டேன்!"-அவள் அவ்வாறு கூறியதும் தூக்கிவாரி போட்டது பார்வதிக்கு!!

"எ...என்னம்மா சொல்ற நீ?"

"கொஞ்ச நாளா வயிற்று வலி அதிகமாக இருந்தது.அதனால,2 நாள் முன்னாடி கைனகாலஜிஸ்ட்ட போனேன்.கடைசியில,ஸ்கேன் ரிபோர்ட்ல இப்படி...."-அவள் பேச முடியாமல் திணறினாள்.

"ஏன் பாட்டி?எனக்கு ஏன் எந்த சந்தோஷமும் கிடைக்கவே மாட்டுது?நான் என்ன பாவம் பண்ணேன்?"

"..............."

"அவர்கிட்ட இந்த விஷயத்தை எப்படி சொல்வேன்?அவர் எப்படி இதை தாங்கிப்பார்?"-அவளது எந்தக் கேள்விக்கும் பார்வதியிடம் விடையில்லை.

அவளது நிலையை சீர் செய்யும் மார்க்கம் அவருக்கு புலப்படவில்லை.என்ன தான் தீமைகளை எதிர்த்து போரிடும் துணிவு பெற்றவளாய் இருக்கட்டும் அவளும் பெண் தானே!எத்தனை வலிகளை தான் அந்த மனம் தாங்கும்??

தையோ இழந்தவனை போல் அமர்ந்திருந்தான் ஜோசப்.

ஒரு வாரமாக அவளிடமிருந்து சரியான உரையாடல்கள் வரவில்லை.அவனிடமிருந்து அவள் நன்றாக விலகுகிறாள் என்பது அவனுக்கே புரிந்தது.ஆனால்,காரணம் விளங்கவில்லை.

என்னவாயிற்று அவளுக்கு?ஏன் இவ்வாறு செய்கிறாள்??அவன் உண்ண மறந்தான்,உறங்க மறந்தான்.சதா சர்வ காலமும் எதையோ பறிக்கொடுத்தவனாய் அமர்ந்திருந்தான்.அவன் அழைப்பு விடுத்தாலும் அவள் ஏற்கவில்லை.ஒன்றும் புரியாமல் தலையணையை அணைத்தப்படி அவன் சாய்ந்திருக்க,அவன் கைப்பேசி அலறியது!!ஏதோ புத்துணர்வோடு எடுத்துப பேசினான் அவன்.

"ஹலோ அம்மூ!"

"............."

"ஏ..என்னடி ஆச்சு உனக்கு?ஏன் என்னை அவாய்ட் பண்ற?"

"நா..நான் வைத்தியநாதன் பேசுறேன்பா!"

"தாத்தா நீங்களா?ஸாரி நான் அம்மூன்னு நினைத்து.."

"பரவாயில்லைபா!உன்கிட்ட கொஞ்சம் பேசணும்!வீடு வரைக்கும் வர முடியுமா?"-அவன் மனம் வேகமாக துடிக்க தொடங்கியது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.