(Reading time: 11 - 21 minutes)

09. ஹேய்..... சண்டக்காரா... - ஜோஷ்னி

Hey sandakkaara

" ய்யோ!!!! உன் மாமன் மக இம்ச தாங்கல சொல்லிட்டேன். வார்ன் பண்ணி வை "

" டேய் அண்ணா!! நான் காண்பது கனவா? அல்ல  நனவா ? எப்டிஎப்டி 'உன் மாமன் மகளா'!! வாடா என் டொமேடோ. மகி என் செல்லம்.. அம்மு.. எக்ஸட்ரா எக்ஸட்ரா இப்படி எல்லாம் சொல்றவனாச்சே நீ. இப்போ என்ன மேன் ஆச்சு? "

" அது எல்லாம் இன்னும் மாறல, அப்படியே தான் இருக்கு. ஆனா அவ வைக்குற ஆப்பு சைஸ் இந்த டைம் கொஞ்சம் பெருசா இருக்கு. அந்த காண்டுல தான் சொல்றேன். நான் இப்போ உன்னை ரொம்ப மிஸ் பண்றேன்டா ஹரி. நீ இருந்த அவ தலைல ரெண்டு குட்டு வைக்க சொல்லி இருப்பேன் "

" கூலிப்படை ரேஞ்சுக்கு ஆயிடிச்சே என் நிலைமை. ஆனாலும் கண்ணா உன் உயர்ந்த எண்ணத்தை நான் பாராட்டுறேன். நீ சொல்லி நான் கேக்க, அவ அடிக்க.. நான் கேக்க அவ அடிக்க.. கடைசில என் பொழப்பு மட்டும் சிரிப்பா சிரிக்கணும். அதானே.. என் விதி. சரி, அப்படி என்ன பண்ணா என் மாமன் மக?

சிரிப்புடனே கேட்டான் ஹரி.

சற்றுமுன் நடந்த கான்வர்சேஷனை 'விட்ட அழுதுடுவேன்' ரேஞ்சுக்கு சொல்லி முடித்தான் கண்ணன்.

" இங்க எல்லாரும் என் பொண்டாட்டிய நாடு கடத்தி,  என்னை போண்டா டீக்கு கூட வழி இல்லாமலாக்க பாக்குறாங்கடா. அதுல முக்கிய புள்ளி மகி தான் "

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

பூஜா பாண்டியனின் "நானும் அங்கே உன்னோடு" - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்..

" அடப்பாவி... ஏதோ நம்ம அம்மா உனக்கு பேரு வச்சு, சோறு வைக்காத மாதிரி பேசுறீயேடா துரோகி "

" ஈஈஈ நான் அப்படி சொல்லல.. ஆனாலும் ஷணுவ இப்போவே அனுப்ப என்ன அவசியம். பொறுமையா வளைகாப்பு வச்சுக்கலாம்ல " கொஞ்சம் பாவமாக ஒலித்தது கண்ணனின் குரல்.

ஹரியிடமிருந்து பதிலில்லாமல் போக, " ஹலோ!!! ஹலோ !! " என்று கத்தினான் கண்ணன்.

" கத்தாதே கண்ணா. இருக்கேன். நீ எப்போ டா இப்டி ஆனா? உன் புலம்பல் கேக்க நல்ல இருக்கு "

" நல்ல இருக்கா?? துரோகி !! "

" ஹிஹி.. நீ அண்ணிய குட்டி பாப்பா போல ட்ரீட் பண்ற. இந்த முயற்சில நீயும் அதையே ரேஞ்சுக்கு மாறிட டா.  இப்போ நீ பேசுறத கேக்குற யாருமே, நீ ஒரு சக்க்ஸஸ்புள் பிசினஸ்மேன் சத்தியம் பண்ணி சொன்னாகூட நம்பமாட்டாங்க. குழந்தை போல அடம்பிடிக்காம அம்மா எதுக்கு சொல்றாங்கனு யோசி "

" ஆஹான்.. எல்லாரும் இந்த ப்பேஸ்க்கு வந்துதானே ஆகணும். என்னை சொல்ற நீ எப்படி இருக்க போறனு நானும் பாக்க தானே போறேன் "

" பாருங்க பாருங்க "

" இப்போ முடிவா என்ன சொல்ற? உன்னால எனக்கு உதவ முடியுமா?இல்லையா? அதை மட்டும் சொல்லு "

" ஷப்பா.. இப்போ என்ன 'மகி விடு தூது'க்கு , என்னை மகிட்ட தூது போக சொல்ற. அதானே? "

" அதே அதே "

" எல்லாரும் தெளிவா தான்டா இருக்கீங்க. செய்ஞ்சு தொலைக்குறேன் "

" தம்பிடா!!!!!! "

" நீ ஒழுங்கா கால் கட் பண்ணிட்டு ஓடிடு டா!!!!!!!! "

பைவ் ஃபோர் த்ரீ டூ ஒன்............ “ஹாப்பி பெர்த் டே செம்பு”

தன்னை சுற்றி இருந்த அனைவரும் சரியாக தன் காதில் கத்தவும் அலறி அடித்து எழுந்தவளுக்கு கொஞ்சம் கொஞ்சமாக அந்த சூழல் புரிய அறையில் இருந்த அனைவரையும் பார்த்து ஒரு புன்னகை உதிர்த்து “தௌசண்ட்ஸ் ஒப் தாங்க்ஸ் டியர்ஸ்” என்றவள் ‘உங்க பாசத்தெல்லாம் கண்டு நான் வியக்கேன்’ என்று சென்டி டயலாக்ஸ் விட்டு கத்தியவளை

 “கத்தாதடி வார்டென் வந்துற போகுது நாங்க பர்மிஷன் வாங்கல” என்று அடக்கியவர் வேற யாரு நம்ம சீனியர் ரேஸ்மி தான்

‘நீங்க வேற அக்கா சும்மாவே நம்ம வார்டென் நின்னுட்டே தூங்குவாங்க இதுல கிரவுண்ட் ஃபுளோர்ல இருந்து செகண்ட் ஃபுளோர்க்கா வர போறாங்க’

வாயி வாயி வாயி உன்னலாம் வாய் இல்லாட்டி நாய் கவ்விட்டு போய்ருக்கும்

ஹா ஹா... ரொம்ப புகழாதீங்கக்கா

ய் – மகி

“யெஸ் ஸ்பீக்கிங்”

“நீ இவ்ளோ ஸ்டடியா பேசுறதா பார்த்தா தூக்கத்துல இருந்து திடீர்னு எழுந்தவ மாதிரி இல்லயே”

“நான் எங்க தூங்குனேன் திடீர்னு எந்திரிக்க”

யு டகால்டி

“ஃபிரண்ட்ஸ்ட சாட்டிங்ல இருந்தேன்டி யாரும் தூங்க விடல லைட்டா கண் மூடுனேன் எல்லாரும் வந்துட்டீங்க பாவம் பிள்ளைங்கணு நானும் ஆக்டிங்க கன்டினியூ பண்ணிட்டேன்”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.