(Reading time: 18 - 36 minutes)

45. மருவக் காதல் கொண்டேன்... - மீரா ராம்

Maruva kathal konden

தி தயக்கத்துடன் உள்ளே செல்ல, பிரஜாபதியோ யாகத்தில் அமர்ந்திருந்தார்….

வேள்வித்தீயினை வளர்த்துக்கொண்டிருந்தவர், மகளைக் கண்டதும் சைகையில் அமர சொல்ல, அவளும் தயக்கத்துடனே அமர்ந்தாள்…

பின் அவர் அவளைப் பார்க்க, அவள் இரு கைகூப்பி, கண்களை மூடினாள்…

“சுக்லம் பரதரம் விஷ்ணு….”

மந்திரத்தை சிரத்தையுடன் பாடினாலும், அவ்வப்போது தன் தந்தையைப் பார்த்து கண் கலங்கியபடி இருந்தாள் அவள்…

யாகம் முடிந்து அவரும் எழுந்து கொள்ள, மந்திரங்கள் ஓதி முடித்து அழுது கொண்டிருந்தாள் அவள்…

நடக்க முனைந்தவர், மகளின் அழுகுரல் கேட்டு, என்னவென்று வினவ, அவள் பதில் கூறவில்லை..

அவரே அவளின் கைப்பிடித்து எழுப்பிவிட்டு, அவளின் அழுகைக்கு காரணம் என்ன என்று கேட்டறிந்தார்….

“வந்தவர் நந்தி என எனக்கு தெரியாது தந்தையே… நான் யாதொரு தவறும் செய்யவில்லை தந்தையே என்னை நம்புங்கள்…”

அழுகையினூடே அவள் கூற, அவரோ அதை ஆமோதிப்பது போல் தலையசைத்தார்…

“யாம் நன்கு அறிவோம் மகளே… தவறு உனதுடையதல்ல…”

“ஆனாலும் தந்தையே… தமது கோபப்பார்வை?...”

“அது எனது கோபத்தின் வெளிப்பாடு… ஆயினும் அது உன் மீதல்ல… இங்கு வருகை தந்த நந்தியின் மீதே எனக்கு கோபம்…”

“கடந்த சில நாட்களாக நிகழ்ந்துவிட்ட சம்பவங்கள் அனைத்தும் எனது சங்கடத்திற்கே வழிவகுத்து நிற்கின்றது தந்தையே… இத்தொடர் வேதனைகள் என்னை நெருங்குவதும் ஏன் தந்தையே… கேள்விக்குறியாகவே தெரிகிறது அனைத்தும்… இதற்கு முற்றுப்புள்ளியே கிடையாதா?... தங்களின் மகள் சந்தோஷத்தை தொலைத்தவளாய் ஆனேன் தந்தையே…”

அவள் தனது மனக்குமுறலை வெளிப்படுத்த,

“நிகழ்ந்ததில் உனது தவறு ஏதுமில்லை மகளே… நீ கவலை கொள்ளாதே… “ என்றவர் மகளின் அருகில் வந்து,

“என்னை மீறி எந்த ஒரு துன்பமும், கேள்விக்குறியும், வேதனையும் உன்னை நெருங்கிடுவது அவ்வளவு எளிதல்ல மகளே…”

“அவர் அன்று இங்கு வருகை தந்த காரணம் என்ன தந்தையே?... அவர் என்னதான் எதிர்பார்க்கின்றார்?... எதற்காக வந்து என் அமைதியான மனதில் சங்கடத்தை விதைத்தார்?...”

“இதோ என் மகளான உன் முகத்தில் இன்று தென்படும் இந்த பயத்தைக் காணத்தான் மகளே… உனது இந்த பயத்தினை போக்கும் வழியை யாம் அறிவோம்….”

என்றவர் விரைந்து தமது மந்திரியை அழைத்து, பிரஜைகளை யாம் இன்றே சந்திக்க விரும்புவதாக கூற, அவரும் சரி என்று அதற்கான ஏற்பாடுகளை கவனிக்க செல்ல,

மகளிடம் திரும்பியவர், “இந்த பிரபஞ்சத்தின் அனைத்து சக்திகளும் பிரஜாபதியான உன் தந்தையின் முன்னே தோற்று போய் நிற்பதை இன்று நீ காண்பாய் மகளே… இனி உனக்கு வீண் கவலைகள் வேண்டாம்…”

தீர்மானமாக அவர் கூற, அவள் அழுத கண்களுடன் தந்தையினையே பார்த்துக்கொண்டிருந்தாள்…

ப்பொழுது, அங்கே கயிலாய பர்வதத்தில், நந்தி சோர்வாக செல்ல, அவனைப் பின் தொடர்ந்து வந்தனர் அந்த இரு சீடர்களும்…

“நீ பிரயத்தனம் செய்து தொலைவிலிருந்து அந்த தாமரை மலர்களை கொண்டு வந்தாய்… இருந்தும் மகாதேவர் அதனை ஏறெடுத்தும் காணவில்லை… நீ அதனால் வேதனை கொண்டிருப்பாய்… எனினும் கவலை கொள்ளாமல் மனதினை தேற்றிக்கொள் நந்தி…”

“என்ன பாக்கியம் செய்தோமே… இன்று நாம் அனைவரும் அவருடன் இங்கிருக்கிறோம்… ஒருநாளாவது அவரைப் பற்றி யோசித்திருப்பீர்களா?..”

“அவர் குறித்து நாம் ஏன் கவலைப்படவேண்டும்… அவர் தான் நமக்கு துன்பம் வராமல் சிந்திக்க வேண்டும்…”

“உங்களைப் போன்றவர் இங்கிருந்து அகன்றாலே போதும், தேவி இங்கே வர வழி கிடைத்துவிடும்…”

“இவனை எல்லாம் திருத்தவே முடியாது… மகாதேவருக்கு எந்த தேவியின் உதவியும் தேவைப்படாது… அதை நீ முதலில் உன் மனதில் பதிய வைத்துக்கொள்…”

என அவர்கள் இருவரும் சிரிப்புடன் கூற,

“நான் கூறிய வார்த்தைகளின் அர்த்தம் எனக்கு தெரியும்…” என நந்தி கோபமாக கூற, அவர்கள் இருவரும் திகைத்து நின்றனர்…

“எனது வார்த்தைகளின் பொருளினை நான் நன்கு அறிவேன் மகாதேவா… தங்களை நான் திருமண பந்தத்தில் காண வேண்டும்… அதில் எனக்கு உதவி செய்ய யாரும் முன்வரவில்லை… எனினும் என்னை கேலி செய்யவே இங்குள்ளவர்கள் முயலுகிறார்கள்…” என ந்ந்தி வருந்திக்கூற,

“நீ வருந்துவதை என்னால் பார்க்க முடியவில்லை ந்ந்தி… நிச்சயம் இங்கு ஒரு ஸ்திரீ வரவேண்டும்… அதற்கு வழி என்ன என்று நான் யோசிக்கிறேன்…” என ஒருவன் கூற,

“ஆம்… எனக்கும் ஒரு வழி தோன்றுகிறது… தாமரை மலரில் என் பெயரையும், இவன் பெயரையும் எழுதினால், அதனைப் பார்த்து யாரேனும் ஒரு ஸ்திரீ இங்கு வர நேரிடலாம்.. அன்று எங்கள் வாழ்விலும் மகிழ்ச்சி பெருகுமே….” என மற்றொருவனும் கேலியுடன் கூற,

“நிறுத்துங்கள்…” என கத்தினான் நந்தி…

“சதி தேவி நிச்சயம் இவ்விடம் வருவார்… மகாதேவர் அவரை ஸ்வீகரிக்கும் நாள் தொலைவில் இல்லை… எனக்கு அந்த நம்பிக்கை இருக்கிறது….” என நந்தி அவர்கள் இருவரிடமும் ஆத்திரத்துடன் உரைத்துவிட்டு அகல, அவர்களிருவரும் திருதிருவென்று முழித்துக்கொண்டிருந்தனர் ஒருவரை ஒருவர் பார்த்தபடி…”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.