(Reading time: 12 - 23 minutes)

08. நின்னை சரணடைந்தேன் - ஸ்ரீ

கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் காதல் முகம் கண்டுகொண்டேன்

 

கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் காதல் முகம் கண்டுகொண்டேன்

விரல் தொடும் தூரத்திலே வெண்ணிலவு கண்டுகொண்டேன்

வெண்ணிலா வெளிச்சம் கிண்ணத்தில் விழுந்து நிறைந்தால் வழிந்தால் மகிழ்ச்சி

வெண்ணிலா வெளிச்சம் கிண்ணத்தை உடைத்தால் உயிரை உடைப்பாள் ஒருத்தி

என் கண் பார்த்தது என் கை சேருமோ

கை சேராமலே கண்ணீர் சேருமோ

கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் காதல் முகம் கண்டுகொண்டேன்

 

மலர்மஞ்சம் விழி கெஞ்சும் மனம் அஞ்சுமல்லவா

உயிர் மிஞ்சும் இவள் நெஞ்சம் உன் தஞ்சமல்லவா

உன் தனிமைக் கதவின் தாள் நீக்கவா

கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் காதல் முகம் கண்டுகொண்டேன்

ஞாயிற்றுகிழமை காலையிலேயே கீதா பரபரப்பாக வேலை செய்து கொண்டிருந்தார்..மோகன் தன்னாலான சின்ன சின்ன உதவிகளை செய்தபடி இருக்க அங்கு ஷரவந்தியோ நகத்தோடு சேர்த்து விரலையே கடித்து துப்பிவிடுவது போல் இருந்தாள்..

ஹே ஷரவ் எதுக்கு இப்படி இல்லாத மூளையே போட்டு பிச்சுகிட்டு இருக்க??-ஷரவன்..

டேய் வேண்டாம்டா உன்கூட சண்ட போடுற மூட்ல நா இல்லஒழுங்கா போய்டு..

அவளருகில் வந்து அமர்ந்தவன்,ஏண்டி இவ்ளோ அலுத்துக்குற அவர பிடிச்சுருக்குனா பிடிச்சுருக்கு சொல்லு இல்லனா வேண்டாம்நு சொல்லிடு என் உன்ன நீயே வருத்திக்குற..

இதுதான்டா பிரச்சனையே என்னசுத்தி எல்லாருமே நல்லவங்களா இருக்கீங்க அண்ணாவும் என் விருப்பம்தான் முக்கியம்நு சொல்றாரு நீயும் என்ன புரிஞ்சு எனக்காக பேசுற அப்பா அம்மாவும் ஒண்ணும் சொல்ல மாட்டாங்கதான் இருந்தாலும் நீங்கலா பாத்து வைக்குற மாப்பிளைய விடவா நா நல்ல செலக்ட் பண்ணிற போறேன் அதான்டா அவர்ட்ட என்ன சொல்லனு தெரியாம இருக்கேன்..

அவளின் மனவோட்டத்தை புரிந்தவன்,சரி உனக்கு அவர பிடிச்சுருக்கா இல்லையானு என்கிட்ட சொல்லு மத்தத நா பாத்துகுறேன் நீ அவர்ட்ட பேசவே வேணாம்..

என்னடா பண்ண போற???

நா கேட்டதுக்கு மட்டும் பதில் சொல்லு??

பிடிக்கலநு சொல்றதுக்கு ஒரு காரணமும் இல்லதான்..பேசின வர நல்லவரா தான் தெரியுதுஆனாலும்

அம்மா தாயே விடு இது போதும் நானே பாத்துக்குறேன்..நீ விரலை கடிச்சு துப்புரத கண்டினியூ பண்ணு என கண்ணிமைக்கும் நேரத்தில் வெளியேறியவன் அடுத்து சென்று நின்றது தன் தமையனிடம்..

அண்ணா அவளுக்கு பிடிச்சுருக்குதான் ஏனோ அவளே அவள குழப்பிக்குறா??நாம எதாவது பண்ணிணாதான் உண்டு என விஷயத்தை சொல்ல அடுத்த சில நிமிங்களில் நடக்க வேண்டியதை திட்டமிட்டு கொண்டனர்..

கார்த்திக் சஹானாவை அழைக்க அழைப்பு ஏற்கப்பட்டு அமைதி நிலவியது..

ஹலோ சஹி..ஆர் யு தேர்..??

சில நிமிடங்களுக்கு பின் சின்னதாய் ஒரு ம்ம்ம் கேட்க,சஹி என்ன பண்ற நீ உடம்பு சரியில்லையா??

கார்த்திக்க்க் ஏன் இப்படி எர்லி மார்னிங் கால் பண்ணி என்னென்னவோ கேட்குற என அரைகுறை தூக்கத்தில் உளற..

அடிப்பாவி மணி ஒன்பதாவது இது எர்லி மார்னிங்கா??ஒரு நிமிஷம் பயந்தே போய்ட்டேன்..எங்க வீட்டுக்கு வர ஐடியா இருக்கா இல்லையா??

ஐயையோ மணி 9ஆ??என்ன கார்த்திக் நீ இப்படி பொறுப்பில்லாம இருக்க சீக்கிரமா எழுப்பி விட்டுருக்கலாம்ல??

எல்லாம் என் நேரம்மாநீ இங்கதான வர போற இரு கவனிச்சுக்குறேன்..ஒழுங்கு மரியாதையா சீக்கிரம் கிளம்பி வரவழிய பாரு..உனக்கு இங்க ரெண்டு சர்ப்ரைஸ் காத்துட்டு இருக்கு..

ஹே கார்த்திக் எனக்கு சஸ்பென்ஸ்லா தாங்காது ப்ளீஸ் ப்ளீஸ் என்னனு சொல்லிடேன் என் செல்லம்ல..

நோ வே மை டியர் நீ இங்க வந்தே தெரிஞ்சுக்கோ பை..என அழைப்பை துண்டித்துவீட்டு தம்பியோடு சேர்ந்து போட்ட திட்டத்தை செயல்படுத்த சமையலறை நோக்கிச் சென்றான்..

வா கார்த்தி காபி எதுவும் சாப்டுறீயாப்பா??

அதெல்லாம் வேணாம்மா..நா எதுவும் ஹெல்ப் பண்ணவாப்பா??

இல்லடா அதெல்லாம் முடிஞ்சுது-மோகன்..

பாரு பையன் நீ வந்து கேக்குற இந்த சின்ன கழுத எங்க இருக்காநு கூட தெரில நாளைக்கு கல்யாணம் ஆகி மாமியார் வீட்டுக்கு போயும் இப்படியிருந்த என்ன இல்ல தப்பு சொல்லுவாங்க-கீதா

தன் வேலையை சுலபமாக்கிய அன்னையை மனதினுள் கொஞ்சியபடி மெதுவாய் பேச்சை ஆரம்பித்தான்..ம்மா நீங்க சொன்னவுடனே தான் நியாபகம் வருது நானே உங்க ரெண்டு பேர்கிட்டயும் பேசணும்னு இருந்தேன்..நம்ம ஷரவ்க்கு ஒரு வரன் வந்துருக்குப்பா..

நல்ல விஷயம்தான் யாருப்பா??உனக்கு தெரிஞ்சவங்களா??

உங்களுக்கும் தெரியும்ப்பா சஹானாவோட அண்ணன் சிவா இருக்காறே அவருதான்ப்பா..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.