(Reading time: 11 - 21 minutes)

"கேந்திரன் சாரோட பிடிவாதத்தை உடைத்தது காதல் இல்லை!அவர் பொண்ணு மாயா!"-அவள் தீர்க்கமாக அர்ஜூனை பார்த்தாள்.

"இன்னும் அவளுக்கு அந்தக் குழந்தைத்தனம் போகலை அதான் உண்மை!"

"..............."

"மாறுப்பட்ட விஷயம் என்னன்னா,சின்ன வயசுல நல்ல விஷயத்துக்காக அவ பிடிவாதம் பிடிப்பாள்.இப்போ பழி வாங்க பிடிக்கிறாள்!"-புன்னகையோடு கூறினான் அவன்.சில நொடிகள் மௌனமாக ஏதோ சிந்தித்தாள் அவள்.சிந்தனை கலைந்த அடுத்த நொடி அவள் எழில் முகம் மீண்டும் இறுகியது!

"கிளம்பு அர்ஜூன்!"-அவன் புன்னகை ததும்ப தீர்க்கமாக அவளை பார்த்தான்.

"அர்ஜூன் குமார் இந்த இடத்தை விட்டு போறதால இதெல்லாம் பொய்யாகாது!எனக்கும் சில ஆசை இருக்கு!மாயாவை திரும்ப பார்க்கணும்!அந்தக் குழந்தைத்தனமா சேட்டை பண்ணிட்டு,சிரிச்சிட்டே எல்லார் மனசையும் சட்டென பறிக்கிற மாயா திரும்பவும் கிடைப்பாளா??"-அங்கு கனத்த மௌனம்.அவள் கூர்மையான அவனையே பார்த்துக் கொண்டிருக்க,அம்மௌனத்தை கலைத்தது அந்தக் காரின் இரைச்சல்!!யாரென்று இருவரும் பார்க்க அவ்வாகனத்திலிருந்து இறங்கிய பிம்பம் அர்ஜூனின் கேள்விகளுக்கு விடை கூறியது!!

"நில்லு!"-உக்கிரத்தின் உச்சமாக ஒலித்த குரலால் நடுங்கி போனாள் மித்ரா.எதிரில் கருவிழிகளில் சினம் மிக,முகம் முழுதும் ரௌத்திரம் பூசி,சண்டி ரூபினியாய் நின்றவளின் மேல் அவளுக்கு அச்சமே விளைந்தது.

"மாயா!அமைதியா இரு!அவங்க அப்பாக்கு மரியாதை செலுத்திட்டு போகட்டும்!"

-பரிந்துரைத்தான் அர்ஜூன்.

"மாயா!ஒரு இரண்டே நிமிடம்மா!"-கெஞ்சினார் காயத்ரி.

"வருடாவருடம் இங்கே வந்து நான் செய்த தவறுக்காக மன்னிப்பு வேண்டுவேன்மா!தயவுசெய்து என்னை தடுக்காதே!"-மாயா படிகளில் பாதம் பதித்து இறங்கி வந்தாள்.

"கிருஷ்ணா!"-அவள் குரல் கொடுக்க பதறியப்படி ஓடி வந்தான் காவலாளி.

"மா!"-அவன் நின்றது தான் தாமதம்,ஓங்கி அவன் கன்னத்தில் அறைந்தாள்.

யாவரும் ஒரு நொடி அதிர்ந்தனர்.

"யாரை கேட்டு கண்டவங்களை இங்கே அனுமதித்தாய்?"

"மா!"

"இந்த இடம் பவித்ரமானது!இங்கே மாயாவோட அனுமதி இல்லாம யாரும் வரக் கூடாதுன்னு தெரியாதா?எந்த தைரியத்துல இதை என்கிட்ட இருந்து மறைத்த?"

"மாயா!நான் தான்மா சொல்ல வேணாம்னு சொன்னேன்!தப்பு என் மேலே தான்!"-அவள் தன் தாயை முறைத்தாள்.அவரை பார்த்தப்படி,

"கடைசி எச்சரிக்கை கிருஷ்ணா!மறுபடியும் இதே தவறு நடந்தா,இங்கேயே உன்னை புதைக்க இன்னொரு குழி தோண்ட வேண்டி வரும்!ஜாக்கிரதை!"

".............."

"போ!"-அவள் ஆணையிட அவன் தலை குனிந்தப்படி சென்றுவிட்டாள்.

"வெளியே போ!"

"மாயா???"

"போ!"

"மாயா!அவர் என்னோட கணவர் மாயா!"

"ஏ...!வாயை மூடு!அடுத்து ஒரு வார்த்தை பேசினாலும் கேவலமா கேட்டுவிடுவேன்!"-அவ்வாறு அவள் கூற சிலையாகி போனார் காயத்ரி.

"மகேந்திர குமார்!என்னோட அப்பா!உனக்கும்,எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை.உன்னால் அவர் அனுபவித்த வேதனை எல்லாம் இன்னும் என் மனசுல தகதகன்னு எரிந்திட்டு இருக்கு!அதோட உஷ்ணம் உன்னை சுடுறதுக்கு முன்னாடி,இன்னும் கொஞ்ச நாள் பூமியில வாழணும்னு ஆசை இருந்தா என் கோபம் எல்லையை மீறுவதற்கு முன்னாடி இங்கிருந்து போ!"

"மிஸ்.மாயா மகேந்திரன்!"

".............."

"இது பொது இடம்!இங்கே யார் வேணும்னாலும் வரலாம்!யாரும் கேட்க முடியாது!"-ஏளனமாக கூறினான் ருத்ரா.

"ருத்ர பிரதாப் ராணா!இது என்னுடைய பொருள்!இந்தக் கிராமத்தை நான் தத்தெடுத்திருக்கேன்!"-அவன் முகத்தில் ஆச்சரியக்குறி.

"என் அப்பா பெயரால நான் உருக்கின ராஜ்ஜாங்கம்!அவர் வாழ்ந்த பூமியை அவர் ஒருத்தருக்கு மட்டும் சொந்தமாக்கி இருக்கேன்!என்னை கேள்வி கேட்க எவனுக்கும் அதிகாரமில்லை."-திருப்பி கொடுத்தாள் மாயா.

"நீ இங்கே எதுக்காக வந்தியோ தெரியாது!அமைதியா இருந்தா உனக்கு நல்லது!"-ஆத்திரத்தில் அவன் ஓரடி முன் வைக்க,அவனை தடுத்தாள் மித்ரா.

"வெளியே போறீயா?இல்லையா?"

"முடியாது மாயா!நான் உன் அம்மாடி!உனக்கு இருக்கிற அதே வைராக்கியம் எனக்கும் உண்டு!"

"வைராக்கியமா"-அவள் வாய்விட்டு சிரித்தாள்.

"வைராக்கியம்..."

"எப்படி!20 வருஷத்துக்கு முன்னாடி விட்டுட்டு போகும் போது இருந்ததே அந்த மாதிரி வைராக்கியமா?"

".............."

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.