(Reading time: 6 - 12 minutes)

தொடர்கதை - விழிகளிலே காதல் விழா - 02 - தேவி

vizhikalile kadhal vizha

ஸ்கூட்டியும், புல்லேட்டும் செல்வதை பார்த்துக் கொண்டிருக்கும்போதே வகுப்பு ஆரம்பிப்பதற்கான முதல் மணி அடிக்க , மாணவ செல்வங்கள் கலைந்து செல்ல ஆரம்பித்தனர்.

ஸ்கூட்டி சாவியை எடுத்து சென்றவன் , தன் நண்பனிடம்,

“டேய்.. மாப்பு.. இன்னிக்கு கொஞ்சம் ஓவரா தான் ஆடிட்டோமோ ?”

“தெரியல மச்சி.. ஆனால் நாம செழியன் சார் கிட்ட போய் மாட்டிகிட்டோமே.. சார் எதாவது தப்பா நினைச்சு இருப்பாரோ...?”

“ஹ்ம்ம்.. தெரியல .. அப்படி தெரிஞ்சா... நாம போய் சாரி சொல்லிடலாம்.. “ என்றான் முதலாமவன்..

அன்று தான் முதல் நாள் என்பதால் எல்லா மாணவர்களும் ஆடிடோரியம் வந்தனர். முதல் வருட மாணவர்களுக்கான வரவேற்புரையும், மற்ற மாணவர்களுக்கான வாழ்த்துரையும் முடித்து அனுப்பி வைத்தனர்.

அவரவர்கள் வகுப்பறைக்கு சென்ற பின், இன்னும் டைம் டேபிள் போடாத படியால் first hour யார் வரபோகிறார்கள் என்று காத்துக் கொண்டு இருந்தார்கள்.

“ஹலோ .. students “ என்ற படி உள்ளே வந்தது செழியன்.. எல்லோரும் எழுந்து அவருக்கு விஷ் செய்ய, அந்த இரண்டு மாணவர்களும் தற்போது முழித்தார்கள்.

எல்லோரையும் அமர சொன்னவன், அவர்கள் இருவரும் நிற்கவும், அவர்களை நேராக பார்த்தான். அவன் பார்வையிலேயே

“சார்.. சாரி சார்.. சும்மா கலாட்டா தான் சார் பண்ண நினைச்சோம்.. “ என்று உளற ஆரம்பிக்க,

“first டே காலேஜ் வரவங்க கிட்டே இப்படி தான் நடந்துக்குறதா.. புதுசா வரவங்களுக்கு பயம், தயக்கம் இது எல்லாம் போகணும்னா சீனியர் உங்க மேலே நம்பிக்கை வரனும்.. ஒருத்தர் ஒருத்தர் கலந்து பழக தான் இந்த கலாட்டா எல்லாம்.. ஆனா ராகிங் எல்லை மீராம இருக்கணும்னு நம்ம காலேஜ் ரூல்ஸ் தெரியாதா.. என்னை தவிர வேற யாராவது lecturer வந்து இருந்தா உங்கள கம்ப்ளைன்ட் பண்ணிருப்பாங்க... அந்த பொண்ணு இந்நேரம் கம்ப்ளைன்ட் பண்ணிருந்தா என்ன ஆகி இருக்கும்? என்னோட students இப்படி நடந்துகுவீங்கன்னு நான் எதிர்பார்க்கலை.. “ என,

“சாரி சார் .. இனிமேல் இப்படி தப்பு பண்ண மாட்டோம்.. “ என,

“ஓகே. .திஸ் இஸ் தி லாஸ்ட் வார்னிங்... நீங்க மட்டும் இல்லை .. நம்ம students யாருமே இந்த மாதிரி தப்பு பண்ண கூடாது. யாராவது அப்படி பண்ணினால் மத்தவங்கள நீங்க கரெக்ட் பண்ணனும்.. சரியா?”

“எஸ் சார்..” என்றனர் மொத்தமாக..

“குட்.. “ என்றவன், அவர்கள் இருவரையும் பார்த்து “ஓகே.. உட்காருங்க.. பிறகு அந்த பொண்ண பார்த்து சாரி கேட்கணும் “ என்றான்.. அதற்கு அவர்கள் சரி என,

“ஓகே .guys .. உங்க லீவ் அனுபவங்கள் பத்தி சொல்லுங்க.. “ என்று சிரித்து பேச ஆரம்பித்தான்.

“சார் நீங்க சொன்ன மாதிரி நாங்க ஒரு பத்து பேர் சேர்ந்து எங்க ஊர் பக்கத்துலே இருக்கிற கிராமங்களுக்கு போய் அங்க உள்ளே மக்களோடு சேர்ந்து ஏரியை சுத்த படுத்தினோம்.. “ என,

“வாவ்.. சூப்பர்.. ரொம்ப நல்ல காரியம் பண்ணி இருக்கீங்க.. கீப் இட் up” என்று வாழ்த்தினான்.

இப்படியே பேசிக் கொண்டு இருக்க, அடுத்த hour ஆரம்பத்திற்கான பெல் அடித்தது.. வேறு ஒரு ஆசிரியர் வர, இவன் கிளம்பினான்.

செழியன் நேராக தங்கள் staff ரூமிற்கு செல்ல, அங்கே அவர்கள் HOD ,

“செழியா.. நம்ம department staff எல்லோர்யைம் பிரின்சிபால் வர சொன்னார் பா..” என,

“சரி சார்.. போகலாம்..” என்றான்.

அவர்களோடு இன்னும் மூன்று பேரும் வர, பிரின்சிபால் அறைக்கு சென்றனர். அவர்களை வரவேற்ற பிரின்சிபால்

“professors.. உங்க department க்கு ஒரு புது அச்சிச்டன்ட் lecturer அப்போயன்ட் பண்ணிருக்கோம்.. ப்ளீஸ் welcome ஹெர் .. & டேக் கேர் ஒப் ஹெர் ..” என்று கூறி அவர்களை அனுப்பி வைத்தார்.

எல்லோரையும் பார்த்து “ஹலோ சார்.. நான் மலர்விழி ...” என்று தன்னை அறிமுகபடுத்திக் கொள்ள,

அவர்கள் HOD அவளிடம் “ஒஹ் .. குட். நேம்.. உங்க qulaification சொல்லுங்க.. “ என

அவள் “ M.A. Public Administration முடிச்சுட்டு, M.Phil முடிச்சு இருக்கேன் சார்.. “என ,

“oh.. அப்போ செழியன் ஒரு Assistant lecturer கேட்டு இருந்தார் .. நீங்க அவரோட join பண்ணிக்குங்க..“ என்று சொல்லி விட்டு

“வாங்க மேடம் .. staff ரூம் போகலாம் “ என்றார்.

“சார்.. மேடம் எல்லாம் வேண்டாம்.. மலர் என்றே கூப்பிடுங்கள்” என்றாள்.

“சரிம்மா.. “ என்றவர், அவர்கள் department வரவும்,

எல்லோருமாக “welcome மலர் மேடம் “ என்று ஒரே குரலில் வாழ்த்தினர்..

அதுவரை பிரின்சிபால் வேறு ஏதோ செழியனிடம் கேட்டுக் கொண்டு இருந்ததால், அவளை கவனிக்காமல் இருந்தவன் , அவர் செல்லவும், இவர்கள் எங்கே என்று பார்க்க, தங்கள் staff ரூம் நோக்கி செல்வதை பார்த்தவன், அவனும் அங்கே சென்றான்.

அவர்களின் குரலை கேட்டு, சிரித்தபடியே உள்ளே சென்றவன், வாசலிலேயே நின்றான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.