(Reading time: 35 - 70 minutes)

காதேவா… பரமேஷ்வரா… இந்த இசைக்கலைஞர்களை காப்பாற்றுங்கள் மகாதேவா… இவர்களுக்கு ஏதேனும் நேர்ந்தால், அகிலம் என்னையே குற்றவாளியாக்கிடும்… இவர்கள் இல்லாவிடில் அகிலத்தில் சங்கீதமே அழிந்துவிடும்… எப்படியாவது இவர்களை காப்பாற்றுங்கள் பிரபு… சங்கீதத்தினை மீட்டளியுங்கள் பிரபு… இசை ஞானம் அழிந்திடாமல் காப்பாற்றுங்கள் சுவாமி… இவர்களின் திறமை மீட்கப்படவேண்டியது மகாதேவா…”

நாரதர் கைகூப்பி, கண்களில் நீருடன் கவலையுடன் வேண்டிட, அவரின் முன் வந்து நின்றான் மகாதேவன் வெள்ளைப் புகையின் மத்தியில்…

அவனைக் கண்டதும், மகிழ்வுடன் கண்ணீருமாய் அவனருகில் அவர் செல்ல, அவனோ புன்னகைத்துவிட்டு, நாரதர் சற்று நேரத்திற்கு முன்னர் அமர்ந்து பாடிய பாறையின் மேல், அமர்ந்தான்…

கையில் வீணையை வரவைத்தவன், அதனை அழகாய் இசைத்து, ரம்யமாய் ஆலாபனை பாடிட, நாரதரோ மகிழ்வுடன் கேட்டுக்கொண்டிருந்தார்…

அவனின் இசை, திசையெங்கிலும் பரவ, சதியின் செவிகளிலும் அது நுழைந்தது… வாடிய மலர்கள் எல்லாம் மீண்டும் புத்துயிர் பெற, மூர்ச்சையாகினவர்களும் மெல்ல மெல்ல புத்துயிர் பெற்றனர்…

எழுந்தவர்கள் அவனை வணங்கி நிற்க, அவன் பாட ஆரம்பித்தான்… அதற்கேற்ப அவர்களும் தங்கள் வாத்தியங்களை வாசித்து, ஆடி மகிழ்ந்திட, அவனின் இசையும், குரலும் சதியின் கால்களை அவனை நோக்கி இழுத்தது…

மெய் மறந்து மயங்கி நின்று அதனைக் கேட்டு ரசித்தாள் அவள் கண் மூடி…

கைகளில் நீருடன், இசை வந்த திசையை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தாள் அவள் புன்னகை மயமாக…

அனைத்து ஸ்வரங்களையும் அவன் இனிமையாய் இசைத்து அதற்கு உயிர் சேர்த்திட, சதி தன் க்ரத்தினில் இருந்த நீர்க்குட்த்தினை தவறவிட்டு இசை வந்த திசையை நோக்கி ஓடினாள் வேகமாக…

அந்த இசையோடு கலந்திட துடிப்பவள் போல் வேகமாக ஓடியவள், அவன் இருந்த இட்த்திற்கும் சென்றிட, அங்கே அவனோ கண் மூடி பாடிக்கொண்டிருந்தான் வீணையை வாசித்தபடி…

ஆடிக்கொண்டிருந்த இசைக்கலைஞர்களின் மத்தியில் சென்றவள், அவனையே பார்த்து ஒரு நொடி நின்றவள், பின் தானாக அவன் இசைக்கும் பாடலுக்கும் ஏற்றவாறு பரதத்தினை நிகழ்த்தினாள் தன்னையும் மறந்து…

அவன் தன் பாடலை முடித்துக்கொண்டு கண் திறக்க, அவளும் பரதம் முடித்த கையோடு அவனை தான் பார்த்திருந்தாள்…

அவள் அங்கிருப்பதைக் கண்டவன், பாறை மீதிலிருந்து எழுந்து கொள்ள, அவளின் பார்வை ரசனையோடு அவன் மீதே பதிந்தது…

தன்னையே மறந்து அவள் அவனை ரசித்து நின்றிருக்க, அவனோ சட்டென அவ்விடத்தினை விட்டு அகன்றான் வேகமாய்…

அவன் சென்றதும் ஒரு விரக்தியுடன் அப்படியே நின்றிருந்தவளின் அருகே வந்து, நாரதர் பேச, அவளோ அசையவில்லை…

“தேவி…” என அவர் அழைத்துக்கொண்டே இருக்க, சட்டென தன் மோன நிலையிலிருந்து விடுபட்டாள் அவள்..

“தேவி… இசைக்கலைஞர்கள் தங்களை வணங்குகிறார்கள்…” என்றவர் குரல் கேட்டு அவர்களை பார்த்து வணங்கிவிட்டு, நாரதரையும் வணங்கினாள் அவள்..

“தேவி… இந்த கானகத்தில் என்ன செய்கின்றீர்கள்?... ம்ம்… மகாதேவரின் கானம் தங்களை இங்கு இழுந்து வந்துவிட்டதா என்ன?... இன்னும் சற்று நேரம் நீடித்திருக்குமானால், அவரோடு தங்களுக்கு பரீட்சயமும் கிட்டியிருக்கும்.. அவர் எப்போதும் இப்படித்தான்… கலையில் அதீக ஈடுபாடு உள்ளவர்… தன்னையே அதில் அர்ப்பணித்துக்கொண்டவர்… உங்களைப் போன்ற ஒரு அபிமானி கிட்டினால் அவர் மகிழ்ச்சி கொள்வார்…”

நாரதர் தன் திட்டம் வெற்றியடைந்துவிட்ட மகிழ்வில் கூற,

அவளோ, “இல்லை… எவரின் கானமும் என்னை இங்கு இழுத்து வரவில்லை…” என்றாள் அவள்…

“பின்பு எப்படி இங்கு வந்தீர்கள்?...” என கேள்வி எழுப்பிய நாரதர், அவள் பதில் சொல்ல திணறுவதைக் கேட்டு,

“ஒருவேளை, தாங்கள் இசைக்கலைஞர்களை அரண்மனைக்கு அழைத்து போக வந்திருப்பீர்கள்?..” எனக் கேட்க. அவளும் ஆம் என்றாள்…

பின், இசைக்கலைஞர்களின் ஒருவன், நாரதரிடம், “மகரிஷியே, தாம் ஒரு சிறந்த பாடகர்… ஆயினும், இன்று தாம் அபஸ்வரத்தில் பாடியது ஏன்?...” என வினவ,

“நான் கூறினாலும் உனக்கு புரியாது… இருந்தாலும் கூறுகிறேன் கேள்…” என்றவர், “இன்று நான் அவ்வாறு பாடியதற்கு காரணம் ஒன்றே… அது இந்த உலகத்தை உய்வடைய செய்வதே…” என சிரிப்புடன் கூற,

“நாம் அனைவரும் அரண்மனைக்கு செல்லலாமா?..” என சதி கேட்க, அவர்களும் சரி என்றனர்…

பின் நாரதரிடம் விடைபெற்றுக்கொண்டு சதி, அவர்களை அரண்மனை அழைத்து வர, அங்கே அவளைக் காணாமல் தவித்துக்கொண்டிருந்தனர் அதிதியும், கியாத்தியும்…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.