(Reading time: 15 - 29 minutes)

05. சர்வதோபத்ர... வியூகம்...!!! - வசுமதி

Savathopathra... Viyoogam

செழுவூர்..

ழகிய மலை முகுடுகள்.. புதிதாய் பிறந்த குழந்தையின் கண்ணிமையை போல் மெதுவாய் பரவசமாய் இதழ் விரித்து மலை முகடுகளின் மறைவிலிருந்து மெது மெதுவாய் மேல் நோக்கி உயர்ந்து தன் இதய ராணியான வானின் நெஞ்சில் ஐக்கியமானன் கதிரவன்..இவர்களின் காதல் சம்பாஷணை கண்ட அல்லிகள் இதழ் மூட, தாமரையோ இதழ் விரிக்க.. நீல வான் பெண்ணிற்கு மஞ்சள் தாலி கட்டி,சுமங்கலி ஆக்கி, தூது வந்த சந்திரனை வீடனுப்பி, உலகிற்கெல்லாம் ஒளி தர, தம்பதி சமேதராய் காட்சி அளித்துக் கொண்டிருந்தான் கதிரவன்.....

செழுவூரில் அழகனின் வரவை அனுபவித்தவண்ணம் தேநீரை அருந்திக் கொண்டிருந்தாள் தியா.. அவளது ஏகாந்தத்தை கலைக்கவென அங்கு வந்து சேர்ந்தனர் எழிலும் மயாவும்..

"எலி.. நீ கேளு..",இது எழிலிடம் மயா..

"நீ என்ன அடி வாங்க வைக்காம விடமாட்டபோலவே..",என்றபடி தியாவை நெருங்கிய எலி,"தி... தியா... ஒண்ணு கேட்கணும்.." ,தயங்கியபடியே..

"என்ன..??"

"அதுவந்து..நீ அன்னைக்கு சருகு காட்டுக்கு ஏன் போன..??"

அவனை யோசனையுடன் பார்த்தவள்," இப்போ நீ அதை தெரிஞ்சுக்கிட்டு என்ன பண்ணப் போற...??"

"நீ ஏதோ திருட்டுத்தனம் பண்ற மாதிரி எங்களுக்கு தோணுது..உன் மேல இருக்கற அக்கறையில் தான் நாங்க இவ்ளோ பொறுமையா என்ன ஏதுன்னு விசாரிச்சுட்டு இருக்கோம்.. அன்னைக்கு மட்டும் நீ எங்க போயிருந்தேனு ஒரு வார்த்தை ஆச்சார்யாக்கிட்ட சொல்லி இருந்த்தோம்னா உன்ன தூக்கிருப்பாரு தெரியும்ல...??"

"..............."

அவளின் அமைதியை பொறுக்க முடியாத மயா,"ஏன் தியா இப்படி பண்ற...நீ ஏதாவது பிரச்சனைல மாட்டிபியோனு பயமா இருக்கு.. உன் மேல அக்கறை இருக்கறதால தான் கேக்கறோம்.. என்னன்னு சொல்லுடி..", கெஞ்சலாக..

கண்களை சிறிது நேரம் மூடி திறந்தவளின் நீல விழிகள் கடல் போல் நிறைந்திருக்க,"எனக்கு மட்டும் உங்க மேல அக்கறை இல்லைனு நினைச்சீங்களா..?? உங்க மெல் இருக்கற அக்கறைல தான் நானும் உங்ககிட்ட இன்னும் சொல்லாம இருக்கேன்.. இங்க பாருங்க.. என்ன சுத்தி முடிச்சுக்கள் நிறைய இருக்கு... நான் இல்லைனு சொல்லல.. ஆனால் அதை உங்ககிட்ட எக்ஸ்ப்லைன் பண்றதுக்கான நேரம் இது இல்ல.. கண்டிப்பா உங்க கிட்ட மட்டும் தான் சொல்லுவேன் அதை..ஆனால் இப்போ இல்ல.."

வர்கள் மூவரும் ஒன்றாய் நிற்பதை கண்ட சுஜன் அவர்களை நெருங்கி," நேத்தோட ரிப்போர்ட்டை சார்கிட்ட காமிச்சாச்சா..??",என்று கேட்டான்..

"ரெடி பண்ணிட்டோம் அண்ணா.. சார் ஒன்பது மணிக்கு வர சொன்னார்..",என்றான் எழில்..

"சரி எழில்.. இந்தாங்க..",என்று ஒரு பைலை கொடுத்து,"இதுல உங்க பையோ டேட்டா இருக்கு.. சரியான்னு செக் பண்ணிட்டு கொடுங்க..",என்றான்..

"சரிங்கண்ணா.. வர்க் எத்தனை மணிக்கு ஸ்டார்ட் ஆகும்..??"

"டென்னுக்கு.. கரெக்ட்டா வந்திடுங்க..",என்றபடி அவர்களிடமிருந்து விடை பெற்றான்..

சுஜன் அங்கிருந்து நகர்ந்ததும் அங்கே சில நொடிகள் மௌனம் மட்டுமே ஆட்சி செய்தது .. கூடவே நேற்று மாலை நடந்ததும் நினைவிற்கு வந்தது அவர்களுக்கு...

முதல் நாள் பாறையை திருப்பி போட்ட பின் ஒவ்வொருவரின் மனநிலையும் ஒவ்வொரு விதமாக இருந்தது.. சுஜன் ஆச்சரியத்துடனும்,மயா அதிர்ச்சியுடனும்,எழில் யோசனையுடனும், தியா ப்ரகாசத்துடனும் அந்த சிலையை பார்த்துக் கொண்டிருந்தனர்..

 அந்த சிலையின் பின் பகுதியில் பூவின் தண்டை சுற்றி ஒரு பாம்பு படர்ந்திருப்பது போல் இருந்தது.. கீழ் பகுதியும் சிறிது சிதிலமடைந்து கிடந்ததால் அவர்களால் அது எந்த வகை பாம்பின் சிலை என்பதை என கணக்கிட முடியவில்லை..

தியாவின் கண்களில் மின்னிய மினுமினுப்பை யார் கண்டர்களோ இல்லையோ எழில் கண்டு கொண்டான்.. டிஸ்கஷன் முடிந்த நிமிடமே தான் கண்டு கொண்டதை மாயாவிடம் போட்டுக் கொடுத்துவிட்டான்..அதற்கான முடிவு தான் இன்று நடந்து கொண்டிருக்கும் இந்த இன்வெஸ்டிகேஷன்..

போனில் "ஹோம் ஸ்வீட் ஹோம்" என்று ஒளிர்ந்தபடியே

ஆயிரம் ஜன்னல் வீடு இது அன்பு வாழும் கூடு

ஆலமரத்து விழுது இதன் ஆணி வேரு யாரு

அடை காக்கிற கோழியப் போலவே

இந்த கூட்டைக் காப்பது யாருங்க..??

என்று ஒலி எழுப்பியத்தில் தன் தலையை குலுக்கி விட்டு சுய நினைவை அடைந்த எழில் திரையை கண்டு புன்னகை புரிந்தான்..

பெண்களை நோக்கி,"இந்தாங்க.. நீங்க ரெண்டு பேரும் செக் பண்ணிட்டு இருங்க.. நான் அதுக்குள்ள போன் பேசிட்டு வந்துடறேன்..", என்று சற்று தூரம் தள்ளிச் சென்றான்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.