(Reading time: 8 - 15 minutes)

12. நிழலாய் உன்னை தொடரும்... - வளர்மதி

Nizhalaai unnai thodarum

ரூபனின் வீடு

ப்போதைக்கு வினிதாவின் பாதுகாப்பைக் கருதி ரூபனின் அப்பா வினிதாவையும் அவளுக்கு துணையாக யாரவதும் மண்டபத்தில் தாங்கிக்கொள்ள சொல்லியிருந்தார். மேலும், மற்றவர்கள் தங்குவதற்கு ரூமை காண்பிக்க அனைவருமே உறங்க சென்றனர்.

மகேனுக்கு மட்டும் தூக்கம் தழுவவில்லை. மனதில் ஓர் ஓரத்தில் தென்றலின் குடும்பத்தை நினைத்து கவலைப்பட்டான். அவன் திரும்பி படுக்கையில் ரூபன் தன் தலைக்குமேல் இருக்கும் சுவற்றை வெறித்து பார்த்துக் கொண்டிருந்தான். அவனும் உறங்கவில்லை என தெரிய, “உனக்கும் தூக்கம் வரலையா?” என கேட்டான் மகேன். ரூபன், “இல்லே டா.. யோசிக்கிறேன்..”என்றான். அவன் மொட்டையாக யோசிக்கிறேன் என்று சொன்னதை கேட்டு அவனையும் இழுத்துக்கொண்டு அவ்வேளையில் காரைக் கிளப்பினான் மகேன்.

எங்கே செல்ல வேண்டும் என்றே தெரியவில்லை.. அந்த அதிகாலை நேரத்தில் யாரை தேடி போவது என தெரியாமல் அவன் பயணிகையில், அவனுக்கு ஏதோ தோன்ற ரூபனை பார்க்க அவனோ மேகத்தை பார்த்துக் கொண்டு வந்தான். “டேய் நீயும் கொஞ்சமாவது யோசிடா.. நீ எந்த பக்கம் போய் விசாரிக்க போற?”

“என்னத்தை விசாரிக்கணும்..? நீ தான் என்னை தூங்கவிடாமல் இழுத்துக்கொண்டு வந்த!” என அவன் கடுப்புடன் சொன்னான்.

“ஹேய் நீ இன்னுமா அங்கு நடந்ததை நம்பவில்லை?” மகேனின் குரலிலும் முகத்திலும் அதிர்ச்சி அப்பட்டமாக தெரிந்தது.

“இல்ல..!! இதுல ஏதோ கண்டிப்பா மாயாஜாலம் இருக்கு... லைட் ஆப் அண்ட் ஒன் ஆகுது சுவிட்ச் பாக்ஸ் பக்கத்துலே யார் உட்கார்ந்து இருந்தான்னு தெரியல!!... அங்கே யாரோ உட்கார்ந்து இருக்கணும் ஆனா இல்லே... அது எப்படி ஒரு ஆள் அந்தரத்துலே மிதக்க முடியும்.. கிராவிட்டி நம்மளை கீழே தானே இழுக்கும், ஆனா இது என்ன அப்படியே மிதக்குது.!! தண்ணீர்ல மட்டும் நம்மால் மிதக்க முடியும்.. இது கண்டிப்பா என் அப்பாவின் தில்லு முள்ளு வேலையே தான்!!! இவருக்கு தான் வேலை வெட்டி இல்லனா, தேவை இல்லாமல் நம்ம நேரத்தையும் வீணாக்குகிறார்”என கோபமாக சொல்லிக்கொண்டு இருந்தவனை பார்க்கையில் மகேனுக்கு இன்னும் இவனுக்கு எப்படி சொல்லி விளக்குவது என தெரியவில்லை.

காரை சாலை ஓரமாக நிறுத்தியவனுக்கு அடுத்து என்ன என்பதுபோல் இருந்தது. கண்களை மூடி யோசிக்கையில் அவனுக்கு தீபனின் நினைவு வந்தது. அவன் போலீசாக இருப்பதால் சற்று சீக்கிரமாக தகவல் கிடைக்கும் என்பதால் தன் கைதொலைபேசியில் அவனுக்கு அழைத்து விபரத்தை தெரிவித்தான். இவன் செய்வது அனைத்தையும் முக சுளிப்புடன் பார்த்துக்கொண்டு இருந்தான் ரூபன்.

“என்னால் முடிந்தவரைக்கும் டீடெயில்ஸ் கலெக்ட் செய்து வைக்குறேன்” என்று தீபன் சொல்லிய பின்னரே மகேனுக்கு சற்று நிம்மதியாக இருந்தது. அதன் பின்னர் அவர்கள் ரூபனின் வீட்டுக்கு சென்று விட்டனர்.

கட்டிலில் படுத்த வேகத்தில் ரூபன் உறங்கிவிட, மகேன் அடுத்து என்ன செய்ய வேண்டும் என மனதில் திட்டம் போட்ட பின்னரே அவனால் உறங்க முடிந்தது.. இருந்தும் அவனின் மனக்கண்ணில் “குட்டிம்மா” வந்து நின்றாள். தூங்கி எழுந்த பின்னர் கண்டிப்பா வீடுக்கு சென்று அவளிடம் பேச வேண்டும் மனதில் நினைத்துக்கொண்டான்.

ன்று இரவு தீபன் அவர்களின் வீட்டுக்குவர, அவர்கள் வராண்டாவில் அமர்ந்து பேசினர்.

“நோட் மச் டீடெயில்ஸ் மகேன். நீ சொல்லுகின்ற ஆதியை யாரோ ஒருவர் அவரோட காரில் ஏத்தி வந்து ஹாஸ்பிடல் எமெர்ஜெண்சி வாட்டில் இவருக்கு அச்சிட்டேன்ட் ஆகிறிச்சின்னு சொல்லி அட்மிட் பண்ணி இருக்கார். காரை பார்க்கிங்கில் விட்டு வரேன் என்று சொல்லிட்டு போனவர் திரும்ப வரல.!”

“ஹாஸ்பிடலில் யாருமே இவருடைய டீடெயில்ஸ் கேட்கவில்லையா?” - மகேன்

“கேட்டு இருக்காங்க.. அடிப்பட்டவர் எனக்கு மிகவும் வேண்டியவர். அவர் பேர் ஆதின்னு மட்டும் சொல்லி இருக்கார். நீங்க ட்ரீட்மெண்ட் குடுங்க நான் காரை பார்க் செய்து பணம் எடுத்துட்டு வரேன்னு சொல்லிட்டு போனவர் , ஆள் எஸ்கேப்!!”.

“சீசீடிவி ரெகார்ட் இல்லையா??” - ரூபன்

“இது ரொம்ப பழைய கேஸ் ரூபன். ஹாஸ்பிடல் மேனேஜ்மென்ட் தான் போலீஸ்க்கு தகவல் கொடுத்து இருக்காங்க ஆனா ரிப்போர்ட் பண்ணலை... ஜஸ்ட் கால் அண்ட் இன்போர்ம் டு போலீஸ் அவ்வளவு தான். ஆனா போலீஸ் ரொம்ப ஸ்லொவ், யாராவது மிஸ்ஸிங்ன்னு கம்ப்ளைன்ட் பண்ணா பார்க்கலாம்னு வெயிட் பண்ணி இருக்காங்க. ஹோஸ்பிட்டல் மேனெஜ்மென்ட் சீசீடிவி பூட்டேஜ் கொடுக்கவில்லை.. அவங்களும் கேட்கவில்லை. முறையான ரிப்போர்ட் பதிவு ஆகலை அதான் மெயின் ரீசன். அண்ட அந்த நபர் சொன்ன ஏரியாவில் உள்ள எல்லா சீசீடிவியிலும் செக் செய்து இருக்காங்க. நோ யூஸ்புல் இன்போர்மெஷன்.”

“சீசீடிவில எதுவுமே இல்லையா.. அதாவது எப்படி ஆக்சிடன்ட் அண்ட் யார் அவரை மோதியதுன்னு?” - ரூபன்

“இல்லை. அவர் குறிப்பிட்டு சொன்ன இடத்தில் எந்த ஒரு ஆக்சிடண்ட்டும் நிகழவில்லை. ஹாஸ்பிட்டல் பார்க்கிங்கல இருந்த அந்த கார் நம்பரை ட்ரேஸ் பண்ணதுல அது ஒரு திருட்டு கார்ன்னு தெரிஞ்சு இருக்கு”.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.