(Reading time: 12 - 23 minutes)

ம் கொட்டி திவ்யா அவன் சொல்லுபவற்றை சுவாரஸ்யமாக கேட்க அனிக்காவும் ஜீவன் என்னதான் சொல்லவருகிறானோ என கூர்ந்துப் பார்த்தாள்.

ஒரு பையன் அழறானேன்னு கொஞ்சமாவது இரக்கம் காட்டுறீங்களா? கதை கேட்க மட்டும் நல்லா ரெடியா இருப்பீங்களே என சலித்துக் கொண்டாலும். சரி சரி எனக்கு நடந்த கொடுமையை நான் சொல்லிடறேன்......... என்னோட சின்னவளான இந்த அனிக்கா என்னையை ஒரு நாளும் மரியாதையா கூப்பிட்டதே இல்ல........டேய் ஜீவா, ஏய் ஜீவான்னு ஏலம் போடுவா. ஆனா நான் இனிமே இவளை அனின்னு கூப்பிட முடியாது. ஏன்னா இவ தான் என் அண்ணி ஆகிட்டாளே.

சோகம் போல நடித்தவன் நான் தான் இனிமே இவளை அணணின்னு கூப்பிடனும், ரெஸ்பெக்ட் கொடுக்கணும். எல்லாம் என் தலைவிதி என போலியாகச் சலித்துக் கொண்டான், அவன் கூறிய பாவனையில் கலகலத்துச் சிரித்தார்கள் அவர்கள் இருவரும்.

அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் நீ என்னை எப்பவும் போல அனின்னே கூப்பிடு என்று சொன்னாள் அனிக்கா.

அனி..... அண்ணி ரெண்டிலயும் ஒன்னும் பெரிய டிஃபரன்ஸ் இல்லியே என திவ்யா சொல்லவும் ஹேய் இதுவும் நல்லாயிருக்கு என ஜீவன் அதை ஏற்றுக் கொண்டான். அந்நேரம் வீட்டின் ஹாலில் யாரோ வந்திருக்கும் சலசலப்புக் கேட்க மனதின் உந்துதலில் ஜீவனின் அறையை விட்டு வெளியே வந்தாள் அனிக்கா. அவள் மனவோட்டம் அவளுக்கு சரியானதையே உணர்த்தி இருந்தது. அவள் வீட்டினர் அனைவருமே அங்கு வந்திருந்தனர்.

உண்மைதானா என்னை என் அப்பாவும் அண்ணாவும் மன்னித்து விட்டார்களா? மனம் தளும்பியது. விரைந்தவள் அப்பாவென அவர் தோளில் சாய்ந்துக் கொண்டாள். கிறிஸ்ஸிம் தங்கையின் மன நிலை அறிந்தவனாக அருகில் வர அவன் கரத்தையும் பற்றிக் கொண்டாள். உணர்ச்சிகரமான சம்பவமாக அது அமைந்திருந்தது. யாருக்கு யார் ஆறுதல் சொல்வதென்றே அங்கு புரியவில்லை. ஊமை நாடகம் போல பேச்சின்றி உணர்வுகள் மட்டுமே பரிமாறப் பட்டுக் கொண்டிருந்தது. அனிக்காவின் கண்களினின்று கண்ணீர் நில்லாமல் சொரிந்துக் கொண்டிருந்தது.

யார் யாரிடம் மன்னிப்பு கேட்கவென்று புரியாமல் அனைவரும் நின்றார்கள். அவர்களைக் காண அவள் உள்ளேயிருந்து வெளியே வரும் பொழுதே அவளுடைய முகத்தின் மலர்ச்சியை கண்டுக் கொண்ட தாமஸ் மற்றும் கிறிஸ்ஸின் கண்கள் தாங்கள் எவ்வாறு அவளது மகிழ்ச்சியை கண்டுக் கொள்ளாமல் செயல்பட்டோம் என்று குன்றலாக உணர்ந்தார்கள். ஆனாலும் இருவருமே தங்கள் வீம்பான மன நிலையினின்று முழுவதுமாக வெளிவந்திருக்கவில்லை.

அனிக்காவிற்கு ஹாஸ்பிடலில் ரூபன் சார்பாக காவலரிடம் தான் பதிலளித்தது.......... அந்நேரம் அவள் எடுத்த முடிவு அவளைப் பொருத்தவரை சரியாக இருந்தாலும் கூட தன்னுடைய அந்தச் செயலால் அப்பாவும் அண்ணாவும் எவ்வளவாக அவமானமாக உணர்ந்திருப்பார்கள் என்கிற குற்ற உணர்ச்சி....... எல்லோரும் அவரவர் இடத்தில் சரியாக இருந்தும் பல நேரங்களில் எல்லாமே தவறாக போய்விடக் கூடும். இப்போது அவர்களின் நிலையும் அவ்வாறே இருந்தது.

என்னதான் தன்னை மகிழ்ச்சியாக காட்டிக் கொண்டாலும் தந்தையையும் அண்ணனையும் பார்த்தவுடன் அவளுடைய உள்ளத்தினின்று எழுந்த ஆறுதலை தூரத்தினின்று கண்டுக் கொண்டிருந்தான் ரூபன். அவள் வீட்டினர் சம்மதம் இல்லையென்றால் இவள் தன்னுடன் முழு மனத்தோடு ஒன்றி வாழ்வது இயலாத ஒன்று என்று தான் எண்ணியது சரிதான் என்று தனக்குள் முறுவலித்துக் கொண்டான் அவனின் எத்த்னையோ முயற்சிகளுக்கு பிறகு, தீபனின் உதவியால் அவர்களை அன்று சாயுங்காலம் நடைபெறவிருந்த அவர்கள் நிச்சய விழாவிற்கு முன்னதாக அனிக்காவை சந்திக்க வைத்து விட்டான். அது குறித்து மிக நிறைவாக உணர்ந்தான். தன் இணையின் மனதை உணர்ந்து நடப்பதில் உள்ள இன்பம் அவன் உள்ளத்தில் வெளிப்பட்டது.

மகளிடம் முன் போல இயல்பாக பேசவிடாமல் தாமஸின் ஈகோ தடுத்தாலும் அவள் கண்ணீரைப் பார்க்கவியலாதவராக அவளை ஆசுவாசப் படுத்தினார். கிறிஸ்ஸிம் தந்தையின் செயலைத் தொடர சற்று நேரத்தில் அவளின் அழுகை மட்டுப்பட்டது. அவள் அவர்களிடமிருந்து விலகி உள்ளேச் சென்று முகம் கழுவி தெளிவாய் வெளியே வர அங்கே அவள் வீட்டினருக்கான உபச்சாரம் நடைப்பெற்றுக் கொண்டிருந்தது. சற்று நேரத்தில் தாமஸிம் கிறிஸ்ஸிம் புறப்பட்டுச் செல்ல அம்மாவுடனும், அண்ணியுடனும் ஒன்றினாள் அனிக்கா. யாருமே கடந்த நாட்களில் நிகழ்ந்த கசப்பானவற்றை மறுபடி அசைபோட விரும்பவில்லை என்பதால் ஒன்றுமே நிகழாதது போல பாவித்து கலகலப்பாக நிச்சயத்திற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டனர்.

ஹாய் ஃபிரண்ட்ஸ் அடுத்த அத்தியாயத்தில் ரூபன் அனிக்கா நிச்சயதார்த்த விழாவிற்கு வருகை தர உங்கள் அனைவரையும் வருக வருகவென வரவேற்கிறேன் :) _/\_

தொடரும்

Episode # 30

Episode # 32

{kunena_discuss:970}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.