(Reading time: 11 - 21 minutes)

16. மனதோர மழைச்சாரல் நீயாகினாய் - சகிManathora mazhaichaaral neeyaaginaai

இது என்னுயிரே உனக்காக கதையின் மூன்றாவது பாகம்.

முதல் பாகம் 'என்னுயிரே உனக்காக' படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.

இரண்டாம் பாகம் 'சதி என்று சரணடைந்தேன்' படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

மைதியாக உறங்கிக் கொண்டிருந்தாள் பார்வதி.அந்த இரவு நேரம் அவளுக்கு ஆழ்ந்த நிம்மதியை வழங்கிக் கொண்டிருந்தது.அவளருகே அவளை இறுக அணைத்தப்படி அழகாய் உறங்கிக் கொண்டிருந்தான் விஷ்வா.பிறப்பிலிருந்து இதுபோன்ற அன்புக் கொண்ட தாய்மையின் தாலாட்டில் அவன் உறங்கியதில்லை.அவன் அனுபவித்த துயரால் இறைவனுக்கும் சற்றே கருணை சுரந்திருக்கலாம்!எனவே தான் கீதாவை அவன் வாழ்வில் அனுப்பி,எவருக்கும் ஆட்படாத ருத்ராவின் ஆட்டத்தினை அடக்கி ஒடுக்கினான்.இன்று,சுயநலமில்லாத பரிசுத்தமான அன்பினை அவனுக்கு பரிசளித்திருக்கிறான்.

"மா!"-உறக்கத்தில் ஏதோ பிதற்றினான் அவன்.அவன் மெல்லிய குரலில் சட்டென உறக்கம் கலைந்தவள்,என்னவென்று பார்த்தாள்.

"மா!"-மீண்டும் இதழ் மலர்ந்தான் அப்பாலகன்.

"விஷ்வா!"-அச்சிறுவனின் கண்களில் கண்ணீர் சுரந்துக் கொண்டிருந்தது.கனவு காண்கிறானா??

"மா!"-இம்முறை சற்றே விசும்பலோடு அழுகுரல் கேட்டது.

"கண்ணா!ஏ..!"-அவள் எவ்வளவோ எழுப்ப முயன்றாள்.ஆனால்,அவன் உறக்கம் கலைவதாய் இல்லை.அவன் அழுகையை கட்டுப்படுத்த அவனை தன் நெஞ்சோடு இறுக அணைத்துக் கொண்டாள் பார்வதி.

"ஒண்ணுமில்லை!"

"மா!என்னை விட்டு போகாதேம்மா!"-வலிகள்,சின்னஞ்சிறு இதயம் கொண்ட வேதனைகள் வெளி வர ஆரம்பித்தன.அது ஏனோ உலகில் பிறப்பெடுக்கும் அணைத்து புண்ணிய ஆன்மாக்களுக்கும் ஒரு பெண்ணின் அன்பு அவசியமாகிறது!!ஒவ்வொரு சின்னஞ்சிறு சிசுவும் தன்னை அரவணைக்க ஒரு தாய்மைக்காக ஏங்கி தவிக்கிறது.இதனை விலக்கி,சமூகத்தில் நிலவும் சில குற்றங்களை அடிப்படையாக்கி ஆராய்ந்தால்...எத்தனை புண்ணிய ஆன்மாக்கள் இதுபோன்ற தவிப்பில் ஆழ்கின்றன??எண்ணிக்கை உள்ளதா??குழந்தை செல்வம் என்பது சாதாரண நிகழ்வு அல்ல!!ஈறைந்து மாதங்கள் தன் கர்ப்பத்தில் சிசு ஒன்றை பெண்ணாகப்பட்டவள் சுமக்கிறாள் என்பது ஒருவித தவமாகும்!!அது அவமானமோ,அல்லது பாரமோ கிடையாது!!இன்று எண்ணற்ற அவலங்கள் நிகழ்கின்றன.தனது வாரிசை பிறக்கும் முன்பே தன்னிரு கரங்கள் கொண்டு மிக கொடூரமாக வதம் செய்யும் நிகழ்வுகள் நாகரிகமாய் மாறி போன சூழலில் வசிக்கிறோம்.அப்படி ஒரு பாவம் இழைப்பவன் ஆணாகப்பட்டவன் என்றால்,அக்குழந்தையை பேணி காக்கும் ஆண்மையில்லாமல் போனதா அவ்வாண்மகனுக்கு??இதுவே நிகழும் காரியம் பெண்ணால் என்றால்,அனைத்து வகை உயிரினங்களுக்கும் மகத்துவத்தை கொடுத்து படைத்த இறைவனின் படைப்பில் இழிவான பிறப்பாவாள் அது போன்ற கன்னிகை.அது போன்ற ஒரு ஆத்மா நிச்சயம் வாழ்வதற்கான தகுதியை இழந்த ஆன்மாவே!!!தாய்,தந்தை இல்லாமல் தனிமையில் வாடும் ஒவ்வொரு மழலைகளையும் காணுங்கள்!!உலகில் ஏதோ ஒரு மூலையில் தெய்வத்தின் அம்சம் இதுபோல சிதைப்படும் வரை அகிலத்தில் எந்த ஒரு மனிதன் செய்யும் ஆராதனைகளும் நிச்சயம் இறைவனை சென்று சேராது!!!

"மா!என்னை விட்டு போகாதேம்மா!"-பார்வதியை அணைத்தப்படி உறக்கத்திலே அழுதான் விஷ்வா.அவளுக்கு அவன் அளித்த ஸ்தானத்தை உணர்ந்தவளின் மனம் கலங்கியது.

"இல்லைடா கண்ணா!எங்கேயும் போக மாட்டேன்!அம்மா உன் கூடவே தான் இருப்பேன்!"-அவனது நெற்றியில் மெல்ல முத்தமிட்டாள் அவள்.அவன் முகத்தில் இருந்த கவலை எல்லாம் நொடியில் தீர்ந்துப் போனது!

"லவ் யூ மா!"-அவளை இறுக அணைத்துக் கொண்டான் விஷ்வா.

"லவ் யூடா செல்லம்!"-ஆறுதலாக அவனது கேசத்தை கோதினாள் அவள்.

அவளது உறக்கத்தினை தனதாக்கி கொண்டான் விஷ்வா.

அவளது அன்பினில்,அரவணைப்பினில் தன்னை முழுதுமாக தொலைத்துவிட்டு நிம்மதியாக உறங்க ஆரம்பித்தான் அவன்.

னிமையில் அமர்ந்துக் கொண்டு வெகு நேரமாக சிந்தித்துக் கொண்டிருந்தாள் கீதா.

'அவன் எவ்வளவு அன்பானவன்??எவ்வித ரத்த பந்தமும் இல்லாத சிறுமிக்காக எவ்வளவு துடித்தான்??எவ்வளவு உதவிகளை பிறருக்கு ஆற்றினாலும் அது குறித்து அவன் பெருமைப்பட்டு கொள்வதில்லை.ஏன் அதுக்குறித்து தெரிவிப்பதுமில்லை!!ஆஸ்திரேலியாவில் காப்பகத்தை நடத்தி வருகிறான்!அதில் வளரும் நூற்றுக்கணக்கான குழந்தைகளின் கல்வியை ஊக்குவிக்கிறான்!இவன் உண்மையில் வித்தியாசமானவனே!!தனக்கு நெருக்கமானவர்களின் இழப்பினை தாங்கி கொள்ள மறுக்கிறான்.எனில்,எனது இழப்பினை எவ்வாறு தாங்குவான்??"-சட்டென அக்கேள்வி அவள் மனதில் உதியமானது.

அவள் சிந்தித்தப்படி இருக்க அவள் இல்லத்தின் அழைப்புமணி ஒலித்தது.

சத்தம் கேட்டு தன் அறையிலிருந்து யாருடனோ கைப்பேசியில் உரையாடியப்படி வெளி வந்தான் சிவா.

"நான் பார்க்கிறேன்!"-என்று சென்று கதவை திறந்தவளுக்கு பெரும் அதிர்ச்சி.அவள் கதவை திறந்தது தான் தாமதம் என்று,"அக்கா!"என்று அவளை அணைத்துக் கொண்டாள் ஆராத்யா.

சட்டென நிகழ்ந்த அந்த அதிர்ச்சி அவள் புத்தியில் உரைக்க சிறிது அவகாசம் ஏற்பட்டது அவளுக்கு!!

"ஆரா?"-வார்த்தைகள் வராமல் தவித்தாள் கீதா.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.