(Reading time: 5 - 9 minutes)

தொடர்கதை - விழிகளிலே காதல் விழா - 05 - தேவி

vizhikalile kadhal vizha

பாட்டியின் முகம் யோசனையோடு தன் பேத்தியை பார்த்து,

“ஏன் கண்ணு.. உங்க காலேசுலே சொல்லிக் குடுக்குற வாத்தியாரு எல்லாம் இந்த மாதிரி இளவட்ட பயலுகளா தான் இருப்பாங்களா?”

“ஏன்.. இப்போ அதுல உனக்கு என்ன பிரச்சினை ?”

“இல்ல .. வாத்தியாருங்க எல்லாம் கொஞ்சம் வயசானவங்கள இருந்ததானே படிக்கிற பய புள்ளைங்க அடங்கி இருக்கும்.. இவர பார்த்தா இவரே படிக்கிற புள்ளைங்க கூட ஆட்டம் போடுவாரு போலே.. நல்ல லட்சணமா வேட்டி சட்டை போடாம சீன்ஸ் pant , பனியன் ன்னு போட்டு பாடம் எடுத்தா பயலுவ படிப்பனுவளா?”

“ஆச்சி.. உனக்கு ஏன் இந்த கொலைவெறி..? ஏன் நான் சின்ன பொண்ணுதானே... நான் பாடம் எடுக்க போகலையா?”

“நீ நல்லா சீலை கட்டிட்டு போற”

“அவங்களும் அப்படிதான் ஆச்சி.. அப்பா எல்லாம் ஆபீஸ்க்கு போட்டு போற மாதிரி நல்ல pant ஷர்ட் தான் போட்டு வருவாங்க.. ஜீன்ஸ் எல்லாம் வெளியிலே வரும் போது போடுவாங்களா இருக்கும் .. நீ சொல்ற வேட்டி சட்டை எல்லாம் இப்போ நம்ம கிராமத்திலேஎ வயசானவங்க மட்டும் தான் கட்டிட்டு இருக்காங்க.. இது சிட்டி.. இங்கே எல்லாம் ஸ்கூல், காலேஜ்லே எல்லா இடத்திலேயும் pant தான் போடுறாங்க.. ஆமாம் .. உனக்கு எப்படி ஜீன்ஸ் pant எல்லாம் பத்தி தெரியும்..? “

“ஏன்.. அதான் நம்ம டிவி பொட்டிலே விளம்பரம் போடுறாங்களே.. அது எல்லாம் பார்கிறது தான்.. “

“கலக்குற போ.. “

“ஹ்ம்ம்.. என்னவோ போ.. எல்லாம் புதுசா தான் இருக்கு... அப்புறம் மலரூ .. அவங்க எந்த ஊர்காரங்க...?

“ஏன்.. அத தெரிஞ்சி என்ன செய்ய போறே..?

“இல்லை.. கண்ணு.. சும்மா தெரிஞ்சிக்கத்தான்..

“அது எல்லாம் எனக்கு தெரியாது .. நான் கேட்டுக்கல..

“ நீயும் டீச்சர் வேலைக்கு போய் ஒரு மாசமாவுது.. இன்னுமா நீ அது எல்லாம் கேக்கல.. இன்னும் செத்த நேரம் அந்த தம்பி நின்னு இருந்தா நானே அவங்க பூர்வீகம் எல்லாம் கேட்டுருப்பேன்..”

“சும்மா இரு ஆச்சி.. அந்த மாதிரி எல்லாம் கேட்க முடியாது

“ஏங்கறேன்... ? கூட வேலை பார்க்கிறவங்க விவரம் எல்லாம் தெரிஞ்சி வச்க்கிடனும்.. “

“ஆத்தா.. சும்மா இரு நீ.. வந்த வேலைய பார்க்கலாம்.. “ என்று வேலன் முடிக்க, அதன் பிறகு அன்றைய மீதி பொழுது அமைதியாக கழிந்தது.

றுநாள் காலேஜில் வைத்து செழியனை பார்க்கும் போது பாட்டி சொன்ன modulation இல் யோசித்து அவளின் மனம் ரகசியமாக சிரித்தது,

இந்த வேலை மலரை பொறுத்த வரை சீராக சென்றது. மாணவியாக படித்ததற்கும், இப்போது ஆசிரியாராக இருப்பதற்கும் நிறைய வேறுபாடு இருந்தது,

படிக்கும்போது தன் புத்தகத்தை மட்டும் படித்தவள், தற்போது பாடம் நடத்தும்போது அது சம்பந்தப்பட்ட தகவல்கள் தெரிந்து கொள்ள நிறைய புத்தகம் reference செய்தாள். செழியன் மலருக்கு உதவி செய்தான். லைப்ரரி அழைத்து போய் தேவையான புத்தகங்களை பழக்க படுத்தினான்.

நம்ம தமிழ் நாட்டை பொறுத்தவரை இந்த geology சம்பந்தப்பட்ட படிப்பு அவ்வளவு பிரபலம் ஆகாதது. எனவே அது சம்பந்தப்பட்ட விஷயங்கள் எல்லாம் இன்டர்நெட் மூலமும், இந்த துறையில் டாக்டர் பட்டம் பெற்றவர்கள் மூலமும் செமேச்டேர்க்கு மூன்று முறை conference , செமினார் இதன் மூலம் மாணவர்களுக்கு பயிற்சிகள் கொடுக்கப்பட்டது.

அதற்கான ஏற்பாடுகள் எல்லாமே செழியன் தான் மேற்கொள்வான். செழியன் படிக்கும்போது இந்த செமினார் எல்லாம் நடந்தாலும் , அதிக அளவில் இருக்காது. அவன் பேராசிரியாராக ஆன பின் நிர்வாகத்திடமும், department மற்ற ஆசிர்யரிகளிடமும் பேசி இந்த விஷயங்களில் எல்லாம் கவனம் செலுத்தி அந்த department நல்ல முன்னேற்றம் கண்டது,

அதோடு பிரக்டிகல் வகுப்புகளுக்கு மாதம் ஒரு முறை இரண்டு அல்லது மூன்று நாட்கள் ஒதுக்கி அருகில் உள்ள மலை , பாறை பகுதிகளுக்கு அழைத்து சென்று அங்கே உள்ள கற்கள், மணல் எல்லாவற்றையும் ஆராய்வது எப்படி என்று கற்றுக் கொடுப்பார்கள்.

முதலில் இதில் மலர் செல்லவில்லை. இரண்டு மூன்று மாதங்களுக்கு பிறகு செழியன்  மலரை அழைக்க, மலர் தன் வீட்டில் கேட்டாள்.

“அது எல்லாம் முடியாது. பொம்பள பிள்ளைய இரண்டு நாள் எல்லாம் தனியா அனுப்ப முடியாது..” என்று பாட்டி ஒரு யுத்த களம் ஆரம்பிக்க,

மலரோ “உன்னாலேதான் நான் காலேஜ் டூர் கூட போகாம இருந்தேன்.. இப்போ இது என் வேலை.. இதுக்கு எல்லாம் மறுத்து எதுவும் சொல்ல முடியாது.. “ என்று விடாப்படியாக வாதாடினாள்.

இருவரும் வாதாட.. வேலன் தான் தன் தாயை சமதானபடுதினார். அரை குறை மனதோடு தன் பேத்தியை அனுப்பி வைத்தார்.

முதல் முதல் அங்கே போய் விட்டு வந்து தன் தாயிடம்

“அம்மா.. சூப்பர் இருந்துதும்மா.. செழியன் சார் எல்லா ஏற்பாடும் சூப்பரா பன்னிருந்தார்மா.. லேடீஸ் எல்லாம் தனியா தங்கற மாதிரி இருந்தது, அவரோட guide எனக்கே ரொம்ப உபயோகமா இருந்துது.. நிறைய விஷயம் எல்லாம் சொல்லிக் குடுத்தார்.. அதோட சாப்பாடு எல்லாமே சிம்பிள் ஆ இருந்தாலும் ஆரோக்கியமா இருந்துது. “

என வள வள என்று பேசியபடி இருக்கவும், அதை கேட்ட மலரின் பாட்டி சுந்தரவடிவு பேத்தியின் சந்தோஷமும், அவள் பாதுகாப்பை பற்றிய நம்பிக்கையுமாக அடுத்த முறை எதுவும் சொல்லாமல் அனுப்பி வைத்தார்,

பிறகு இதுவே பழக்கமாகி விட, இப்போது எல்லாம் இந்த மாதிரி பிரக்டிகல் வகுப்புகளை கையாளும் முறை, தேவையான ஏற்பாடுகள் செய்வது எல்லாமே செழியனிடம் இருந்து கற்றுக் கொள்ள ஆரம்பித்தாள் மலர்.

அதே போல் அவன் ஏற்பாடு செய்யும் செமினார்களிலும் ஆவலாக பங்கு கொண்டாள். செழியனும் அவளின் ஆர்வத்தை புரிந்து அவளுக்கு தேவையான உதவிகளை செய்தான். இதனால் அல்மோஸ்ட் எல்லா நிகழ்ச்சிகளிலும் இருவரும் சேர்ந்து கலந்து கொண்டார்கள்.

செழியன் மலரின் மேல் இருக்கும் ஈர்ப்பை பற்றி சற்றும் வெளிகாட்டிக் கொள்ளவில்லை, அவன் தற்போது doctorate பண்ணிக் கொண்டிருந்தான். அது முடிய இன்னும் ஒரு வருஷம் ஆகும்... அதனால் மலரை பற்றி அதிகம் சிந்திக்காமல் இருந்தான். அதே நேரம் மலரிடம் தன்னை அறியாமல் நெருங்கி கொண்டு இருந்தான்.

தொடரும்!

Episode # 04

Episode # 06

{kunena_discuss:1126}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.