(Reading time: 8 - 15 minutes)

07. துடிக்கும் இதயம் உனதே உனது!!! - மது

Thudikkum ithayam unathe unathu

ஒரு ட்ரக் சுமார் இருபது மைல்கள் ஓடுவதற்கு எவ்வளவு ஷக்தி தேவைப்படும். அதற்கு நிகரானது ஒரு நாளில் துடிக்கும் இதயத்தில் உருவாகும் ஷக்தியாகும்

நியுயார்க் வந்து சேர்ந்ததும் ஸ்ரீதர் அவனது உறவினரின் வீட்டிற்கு சென்று விட வர்ஷினி வருணின் நண்பர் வீட்டில் தங்கினாள்.

“ஏதாச்சும் வேணும்னா கூச்சப்படாம கேளு அம்மு” ரேகா சொல்லவும் “சரி அண்ணி” என்று தலையாட்டினாள்.

ரேகா ரிச்சர்ட் தம்பதி வருண் உடன் படித்தவர்கள். இவர்களின் காதல்  திருமணத்தில் முடிய வருண் தீயாய் உழைத்ததால் வருண் மேல் தனி பிரியம் உண்டு.

எனவே வருணின் பிரியமான தங்கைக்கு ஏகபோக உபசாரம் நடைபெற்றது.

வர்ஷினி மற்றும் ஸ்ரீதரின் ப்ராஜக்ட் நியுயார்க்கில் மட்டுமல்லாது வேறு நகரங்களிலும் சென்று மேற்கொள்ள வேண்டியிருந்தது.

“அம்மு நானும் அண்ணாவும் இந்த வீக் என்ட் பிஸி மா. சாரி டா. நீ உன் பிரண்ட் கூட நியுயார்க் சுத்தி பார்த்துட்டு வா. இந்தா சப்வேயில் ட்ராவல் செய்ய கார்ட்” ரேகா வர்ஷினியிடம் கூற வர்ஷினியோ தான் சமாளித்துக் கொள்வதாக உற்சாமாகக் கூறினாள்.

“ஸ்ரீதர் வீக்என்ட் ஊர் சுத்தி பார்க்க போலாமா” வர்ஷினி ஸ்ரீதரிடம் கேட்க அவனோ மறுப்பாக தலையசைத்தான்.

“என்னோட சித்தப்பா சித்தி சிகாகோல இருந்து வராங்களாம். சோ நியு ஜெர்சில இருக்க பெரியப்பா வீட்டுக்கு போகணும்”

“நோ ப்ராப்ளம். நீ போயிட்டு வா”

“நீ என்ன செய்ய போற. உன்னோட அண்ணா பிரண்ட்ஸ் அவங்களும் பிசின்னு சொன்ன”

“நான் தனியா போகப் போறேன்... ஊர் சுத்தி பார்க்க போறேன்”

“தனியாவா. எப்படி தனிய போவ”

“த்தோடா...நான் எல்கேஜி படிக்கிற பாப்பா. தனியா போனா திருவிழாவுல பஞ்சு மிட்டாய் சப்பிகிட்டே தொலைஞ்சு போய்டுவேன் பாரு”

“சரி சரி பத்திரமா போயிட்டு வா”

“சரிங்க தாத்தா” சொல்லிவிட்டு கலகலவென சிரித்தாள் வர்ஷினி.

ன்று மிகவும் அழகாக விடிந்தது வர்ஷினிக்கு. இன்று முதல் முறையாக தனியாக வேற்று தேசத்தில் நகர்வலம் வரப் போகிறாள்.

குளித்து முடித்து அழகாய் உடுத்திக் கொண்டு வந்தவள் தனது கைப்பையில் பாஸ்போர்ட் இருக்கிறதா என்று ஒரு முறை சரி பார்த்துக் கொண்டாள். கூடவே வருண் தந்திருந்த சில நூறு டாலர்களும் இன்டர்நேஷனல் கிரெடிட் கார்ட்டும் நாங்களும் ப்ரெசென்ட் மிஸ் என்று அட்டன்டன்ஸ் கொடுத்ததும் மேப்பை ஆராயத் தொடங்கினாள்.

“முதல்ல எங்க போகலாம். ஹ்ம்ம் சென்ட்ரல் பார்க் போலாம். விண்ணை தாண்டி வருவாயா படத்துல கார்த்திக் ஜெஸ்சி அங்க தானே மீட் செய்துப்பாங்க. பாவம் அவங்களுக்கு தான் கனவா போச்சு. நமக்கு நனவாகுதான்னு ஒரு சான்ஸ் பார்ப்போம்” தனக்குத் தானே சொல்லிக் கொண்டவள் தான் சொன்னதே இன்னும் சில மணி நேரங்களில் நடக்கவிருக்கிறது என்று நினைத்தும் பார்த்திருக்க மாட்டாள்.

ஹாய் கணேஷ். ஆர் யு ஸ்டில் ஹியர். வீட்டுக்குப் போகலையா” பூஜா காபியை உறிஞ்சியபடியே கேட்கவும் நெட்டி சோம்பல் முறித்தான் கணேஷ் ராம்.

இரவு ஓர் எமர்ஜன்சி சர்ஜரி முடிய வெகு நேரமாகி விடவே ஹாஸ்பிட்டலிலேயே தங்கி விட்டிருந்தான்.

“போகணும். லெட் மீ செக் ஆன் மை பேஷன்ட் ஒன்ஸ்” கூறிக்கொண்டே தனக்கும் ஒரு கப் காபியை எடுத்து வந்தமர்ந்தான்.

“என்ன இவ்வளவு லேட்ன்னு கையில குச்சி வச்சுட்டு வீட்ல மிரட்ட ஆள் இல்லாம ஜாலியா திரியற. ஹ்ம்ம் இன்னும் எத்தனை நாளைக்குன்னு பார்க்குறேன்” பூஜா சற்றே கேலி இழையோட கூறினாள்.

“அம்மா தாயே. நான் நல்லா இருக்கிறது உனக்கு பிடிக்கலையா” கை எடுத்து கும்பிட்டான் கணேஷ்.

“நீ தான் என் எனிமி ஆச்சே. அப்படி எல்லாம் விட்ருவேனா என்ன. சீக்கிரமே சம்சார வலையில் சிக்கி சிக்கு புக்குன்னு நீ டான்ஸ் ஆடணும் அதை பார்த்து நான் ரசிக்கணும்” அவள் சொல்ல மெல்ல சிரித்தான் கணேஷ்.

“நான் உன் எனிமியா. செர்ரி கிட்ட அன்னிக்கு திட்டு வாங்கிட்டு முழிச்சிட்டு இருந்தியே அப்போ காப்பாத்தினது எல்லாம் மறந்து போச்சா”

“அது சரி. ஆனா எப்போவாச்சும் என் ஹீரோவுக்கு நான் அசிஸ்ட் செய்ய விட்டிருக்கியா. ஆப் டியூட்டில இருந்தாலும் மோப்பம் பிடிச்சு உடனே வந்திட வேண்டியது” ஆதங்கமாய் சொன்னாள்.

பூஜாவும் கணேஷும் ஹார்ட் சர்ஜரி  பயிற்சியை ஒன்றாக மேற்கொண்டனர். அவள் கணேஷுக்கு ஒரு வருடம் ஜூனியர். பயிற்சி முடிந்து பல்வேறு இடங்களில் பணிபுரிந்த இருவரும் இரண்டு வருடங்களுக்கு முன் நியுயார்க்கின் இந்த மருத்துவமனையில் ஒன்றாக சேர்ந்திருந்தனர். இடையே  பூஜா மெடர்னிட்டி லீவில் சென்றிருந்தாள். பல மாதங்களுக்கு பிறகு ஓய்வாக இன்று தான் சந்தித்துக் கொண்டனர்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.