(Reading time: 22 - 44 minutes)

“சரி, நான் துணைக்கு இல்லாமல், கண்டிப்பா பூஜாவை மட்டும் இன்று இரவு இங்க தங்க வைக்க, எங்க அம்மாவை சம்மதிக்க வச்சுட்டீங்கன்னா, நீங்க என்ன சொன்னாலும் நான் கேட்கிறேன்.” என கூறினாள்.

முன்பெல்லாம் வீட்டிற்கு வரும் மாப்பிள்ளையை கலாய்ப்பது வழக்கம் தான், காபியில் உப்பு போட்டு கொடுப்பது போன்று சில கல்யாண ராகிங் நடக்கும். அதனாலேயே இந்தரின் சவாலை ஏற்று கொண்டாள் ஷியாமளா. கண்டிப்பாக தனது அம்மாவின் மேல் அவ்வளவு நம்பிக்கை. சரோஜினி எப்பொழுதும் கண்டிபுடனேயே நடந்து கொள்வார். கல்யாணத்திற்கு முன், இன்று பூஜாவை இங்கு  அழைத்து வந்ததே,   சம்யுக்தா அவ்வளவு சொன்னதால் தான்.

“சரி, நீங்க என்ன பெட் வைப்பிங்க, சொல்லுங்க முதலில்.” என்று உரிமையுடன் இந்தரிடம் கேட்டாள் சியாமளா.........

“எங்க ரெசார்டில் எதில் வேண்டுமானாலும், நீங்க உங்க குடும்பத்துடன், ஒரு வாரம் தங்கி கொள்ள, இலவசமா அனுமதிக்கிறேன். என புன்னகையுடன் இந்தர் கூற.......

“இது போங்கு, கல்யாணத்திற்கு பின் அது என்னோட தங்கச்சியோட ரெசார்ட், அதில் எப்போ வேணா நாங்க வந்து தங்க முடியும். ஒரு ரேசர்டை என் பெயருக்கு எழுதி வைகிறேன்னு சொல்லுங்க. உங்க லெவலுக்கு அது தான் சரியா இருக்கும்”. என சியாமளா தனது ராகிங்கை ஆரம்பித்தாள்.  

“அக்கா இது ரொம்ப ஓவர்.” என பூஜா குறுக்கிட

“வாவ் , பூஜா எனக்கு சப்போர்ட் செய்து பேசியதற்காகவே, இந்த டீலுக்கு நான் ஒத்து கொள்கிறேன். ஆனால் நீங்க அத்தையிடம் இதை பற்றி சொல்ல கூடாது.” என சவாலுக்கு தயாராகினான் இந்தர்.

இந்தரும் வீட்டில், தனி குழந்தையாய் வளர்ந்ததால், இப்படி கிண்டல், கேலியுடன் போட்டிக்கு என்று அவனிடம் யாரும் விளையாடியது இல்லை, அதனால் இது அவனுக்கு மிகவும் திர்லிங்க்காக இருந்தது.

அதன் பின் ஒவ்வொருவராக வெளியே வர அனைவருடனும் பேசிய படி தோட்டதை சுற்றி பார்த்து, சாப்பிட உள்ளே சென்றனர். டேபிளில் எதோ ரெசார்டில் உள்ளது போன்று உணவுகளை அடுக்கி வைத்திருந்தார் சம்யுக்தா.

“எதற்கு எவ்வளவு வகை செய்திருகிறீர்கள், சாப்பிட்டு முடிக்கவே ஒரு வாரம் ஆகும் போல் இருக்கே” என்று சரோஜினி வியந்து பாராட்டினார்.

“உங்களுக்கு என்னன்ன பிடிக்கும் என்று தெரியாததால், அடிக்கடி இப்படி விருந்து கொடுக்கவும் முடியாது என்பதால், ஓரளவுக்கு செய்திருக்கிறேன் அண்ணி. வேலைக்கு ஆட்கள் வேறு இருக்கிறார்கள், அதனால் ஒன்றும் கஷ்டம் இல்லை”. என்றார் சம்யுக்தா.........

அனைவரும் சாப்பிட்டு முடித்ததும், ஹாலில் வந்து அமர்ந்தனர். அடுத்து என்ன செய்வது என்று பேச..........

“சம்யு, நீங்க ஜாதக பொருத்தம் பார்த்து விட்டதா பிரகாசம் அண்ணா சொன்னார். பூஜா ஜாதகம் எப்படி உங்களிடம், பிரகாசம் அண்ணாவிடம் கூட கிடையாதே”..........

“பிறந்த நாள் அவங்க ஆபிஸ் பைலில் இருந்தது. நம்ம பூஜாவிடம் தான் பிறந்த நேரம், இடம் கேட்டேன். அதை வைத்தே பொருத்தம் பார்த்து விட்டோம். அவங்க தாத்தா ஈஸ்வர், அதற்கு  ரொம்ப முக்கியத்துவம் கொடுப்பார். அதனால் முதலில் அதை பார்த்து, எல்லா பொருத்தமும் அம்சமா இருப்பது தெரிந்ததும் மனதிற்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது அண்ணி. நம்ம பசங்க அமோகம இருப்பாங்க.........

அதை கேட்டு பீஷ்மர், சரோஜினிக்கு மிக திருப்தியாக இருந்தது. அந்நேரம் அவர்கள் இருந்த ஹாலில் ஒரு ஓரமாக இருந்த டேபிளில் டெசர்ட்ஸ் அடுக்கப்பட்டது.

NAU

அதை பார்த்து, சரோஜினி, எங்கள் வீட்டில் எல்லாம் பாயசம் வைப்போம் நீங்க என்ன இவ்வளவு டெசர்ட் வைத்து இருக்கீங்க ?

சம்யு, சிரித்து கொண்டே, “இப்போ இங்க சமையலுக்கு சேர்ந்திருக்கும் குக், முன்பு பேக்கரியில் வேலை பார்த்து கொண்டிருந்தார் அண்ணி, அதனால், அவர் திறமையெல்லாம் இங்கு காட்டி இருக்கார். எங்க இந்தருக்கு ஸ்நாக்ஸ் என்றால் பேக்கரி அயிட்டம் மட்டும் தான் பிடிக்கும். அதனால் இப்படி பேக்கரி குக்கை,  இங்கு அப்பாயன்ட் செய்திருக்கான்.”

அனைவரும், அவரவருக்கு வேண்டியவற்றை எடுத்து கொண்டு பேசி கொண்டே சாப்பிட்டனர்.

இந்தர் ஒன்றும் எடுக்காமல், ஒரு சிறு கிண்ணத்துடன் அமர்ந்திருந்த பூஜாவிடம் வந்து, “நீ இன்னும் வீட்டை சுற்றி பார்க்கவில்லை, இல்லையா? இப்பொழுது சுற்றி காண்பிக்கிறேன் வா “  என கூறி அழைத்து சென்றான். அவளது கிண்ணத்தில் இருந்தே இரண்டு ஸ்பூன் புடிங்கை எடுத்து கொண்டான்.

கீழே முழுவது பார்த்த பின் மாடிக்கு அழைத்து சென்றான். மாடியில் ஒரு பெரிய அறை முழுவதும் இன்டீரியர் டெகரேட்டரை வைத்து அழகான ரசனையுடன் அமைத்து இருந்தான்.

 “இது தான் நம்ம பெட் ரூம், என கூறி காண்பித்த பொழுது, எதோ அரண்மனையில் உள்ள அறை போல் இருந்தது. தேக்கு மர கட்டிலும், பெரிய தொங்கு விளக்கும், தரையில் இத்தாலிய மார்பிள்ஸ் போட பட்டு,  பார்த்தால் நம் முகமே அதில் தெரிவது போல் இருந்தது. ஜன்னலை ஒட்டி கவுச் போடப்பட்டு இருந்தது. சுவிஸில் அவர்கள் வீட்டிலிருந்த கவுச் போல். அதில் அமர்ந்து பார்த்தால், ஜன்னல் வழியாக கடல் அழகாக தெரிந்தது. எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் அதில் அமர்ந்து கடலை ரசித்து கொண்டே இருக்கலாம் போல் இருந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.