(Reading time: 22 - 44 minutes)

“என்னம்மா இப்படி பன்றிங்கலேமா? என சினிமா வசனம் பேசினாள் சியாமளா. அவள் கவலை அவளுக்கு, சவாலில் தோற்று விட்டால், இந்தர் கூறியபடி கேட்க வேண்டுமே............

“நீ ஏண்டி இப்படி பதர்ற, மாப்பிள்ளை தான் கல்யாணத்திற்கு முன் நம் வீட்டு ஆட்களுடன் பழக வேண்டும் என்று கேட்டார். சரி அவர் நம்ம வீட்டில் இரண்டு நாள் தங்கினால், அந்நேரம் பூஜா இங்கு தங்கினால் பிரச்சனை இல்லை  என்று தான் இப்படி கூறினேன் , எப்படி என்னோட ஐடியா? என பெருமையாக கேட்டார் சரோஜினி..........

“மா........... உங்க சின்ன மாப்பிள்ளை அவரோட ஐடியாவை உங்க வாயால் சொல்ல வைத்து இருக்கார்மா”. புலம்பினாள் ஷியாமளா ...........

“எது எப்படியோ , அண்ணி நீங்க தோத்துட்டீங்க “ என்றபடி வந்தான் இந்தர் புன்னகையுடன் அவர்களிடம்.

“நான் தான் அப்பவே சொன்னேனே அக்கா உன்னிடம், அவரிடம் பெட் மட்டும் கட்டாதன்னு” என்று ஒரு புறம் பூஜா வேறு அவளிடம்  புலம்பினாள். அக்கா பெட்டில் தோற்றது ஒரு புறம் கவலையாக இருந்தாலும், இந்தர் ஜெயித்தது சந்தோசமாகவே இருந்தது.

“என்ன நடக்குது இங்க மற்றவர்கள் புரியாமல் கேட்க, இந்தர் அவர்களுக்கு, ஷ்யமளாவிடம் கட்டிய பெட் பற்றி கூறினான். அனைவருக்கும் சிரிப்பு தான் வந்தது.

“அப்போ உண்மையில் எங்க வீட்டிக்கு வரலையா மாப்பிள்ளை ?” என வருத்ததுடன் கேட்டார் சரோஜினி.

“கல்யாணத்திற்கு பின் கண்டிப்பா வர்றேன் அத்தை. அண்ணா அளவிற்கு உங்க வீட்டில் தங்க முடியாவிட்டாலும், இனி மேல் இந்தியா வந்தால் கண்ணடிப்பா உங்க வீட்டில் தங்கறேன்.” என்றான்.

“நம்ம வீட்லன்னு சொல்லுங்க மாப்பிள்ளை “ என்று சரோஜினியும் பாசத்தில் பேசினார்.

“போதும்மா, உங்க இரண்டு பேர் பாசத்தில் நாங்க எல்லாம் வழுக்கி விழுந்துடுவோம் போல இருக்கு, கிளம்பலாமா” என ஷியாமளா கேட்டாள்.

“எங்க வீட்டு பக்கம் நூறு பேர் வருவாங்க, உங்க வீட்டு பக்கம் நீங்களும் நூறு பேர் சொன்னா, மொத்தம் இருநூறு பேர் மட்டும் பூ வைக்கும் விழாவிற்கு அழைக்கலாம். இது சின்ன விழா தான என அர்ஜுன் , பீஷ்மரிடம் கூறினார்.

“சரி, நான் அதற்கு தகுந்தார் போல் ஹால் புக் செய்து விடுகிறேன்” என பீஷ்மரும் தனது சம்மதத்தை தெரிவித்தார்.

“மாமா, ஹால் நான் புக் செய்யறேன். புக் செய்துட்டு உங்களுக்கு தெரிவிக்கிறேன்.”  என இந்தர் கூறினான்.

“சரி மாப்பிள்ளை நீங்க புக் செய்துடுங்க,  செலவை  நான் பார்த்துக்கறேன்.”

“ஏன் மாமா?”

“இது பெண் வீட்டார் செய்யும் விழா  மாப்பிள்ளை , அதனால் நாங்க தான் செய்யணும்.”

“அது சரி மாமா, நீங்க என்னை இந்தர்ன்னே கூப்பிடுங்க ப்ளீஸ். நீங்க ஒவ்வொரு தடவை, மாப்பிள்ளைன்னு கூப்பிடறது என்னவோ போல் உள்ளது.”

பீஷ்மரும் சிரித்து கொண்டே சரி என்றார். அனைவரும் மகிழ்ச்சியுடன் அங்கிருந்து கிளம்பினர்.

விழாவிற்கு முன் தினம், இந்தர் வீட்டு புல்வெளியில் ஊரிலிருந்து வந்திருந்த அனைவரும் அமர்ந்து அரட்டை அடித்து கொண்டிருந்தனர்.

தூத்துக்குடியில் இருந்து ஈஷ்வர் தாத்தா, பாட்டி லீலாவதி, மூன்று பெரியப்பா, பெரியம்மா, மூன்று அத்தைமார், அவர்கள் பிள்ளைகள் , அவர்களது குட்டி பிள்ளைகள் என விழா கோலமாக இருந்தது. அனைவரும் தங்க பக்கத்தில் இருந்த ஒரு கெஸ்ட் ஹவுஸ் புக் செய்திருந்தான் இந்தர்.  அணைத்து வேலைகளையும் ஈவன்ட் மேனஜ்மன்ட் ஆட்களே பார்த்து கொண்டனர்.

சுவிசிலிருந்து சித்தி குடும்பத்துடன் முந்தைய நாளே வந்து வீட்டிலேயே தங்கி சம்யுக்தாவிற்கு உதவியாக இருந்தார். இரண்டு மாமாமார் குடும்பத்துடன் சென்னையில் இருப்பதால், அவர்களும் வந்து சென்றனர்.

மறு நாள் மாலை அங்கிருந்த விழா அரங்கத்திற்கு சென்ற பொழுது அதன் அழகை கண்டு அனைவரும் இந்தரை பாராட்டினர்.

NAU

அனைவரும் விழாவை பார்த்தபடி உணவருந்தும் முறையாக, பான்குய்ட் மாடலில் அமைக்க பட்டு இருந்தது. மிக நெருங்கிய உறவினர்கள் மட்டும் அழைக்க பட்டிருந்ததால் அனைவரும் கூடி பேசி மகிழ்ந்தபடி இருந்தனர்.  பட்டு புடவையும் வைர நகைகளுமாக பெண்கள் அனைவரும் மின்னி கொண்டிருந்தனர்.  

விழா துவங்கும் நேரம் ஆனதும், இந்தர் வீட்டு பெண் பிள்ளைகள் 21 பேர் வெள்ளி தாம்பாளங்களில், சேலை, வைர நெக்லஸ், மாலை, வெற்றிலை, தேங்காய், போன்ற முக்கிய தட்டுகளுடன், வாழைப்பழம், மாம்பழம், பலாச்சுளை,  ஆரஞ்சு, மாதுளை, லிச்சி, ஆப்பில்,  போன்ற பழவகைகளும், பாதாம், முந்தரி, பிஸ்தா, அக்ருட், ஹெசல்னட் ஆகிய பருப்பு வகைகளும் உலர் திராட்சை, செர்ரி, போன்ற உலர் பழங்களும், மேக்கப் அயிட்டங்கள் அடங்கிய தட்டுக்களுமாக, ஒரு சிறு பெண் வெள்ளி பூ கூடையில் உதிரி பூக்களுடன் என்று  அழகாக பெரியவர்கள், புடை சூழ ஹாலின் உள்ளே நுழைந்து மேடையில் அழகாக அடுக்கி வைத்தனர்.  சேலை தட்டை மட்டும் பூஜாவின் கையில் கொடுத்து உள்ளே சென்று மாற்றி வருமாறு பணித்தனர். அந்த பன்னீர் ரோஜா நிற சேலையில் முழுவதும் ஜரிகை வேய்ந்து அழகாக இருந்தது. பூஜா அதை உடுத்தியதும் பூஜாவின் நிறமும் அதன் நிறமும் போட்டி போட்டது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.